போலீசாக அசத்தும் உலகின் டாப் 5 பாடிபில்டர்கள்

World Top 5 Biggest Police Officers

போலீஸ் வேலை என்றாலே ஒரு கெத்து தான். தமிழ் நாட்டில் இந்த கேரக்டரை பிடிக்காதவங்க நிச்சயம் இருக்க முடியாது. தமிழில் பல மாஸ் நடிகர்கள் இந்த கேரக்டரில் நடித்து பிரபலமாக மாறி இருக்காங்க.

pics via pinterest.com

அதற்கு, இந்த கதாபாத்திரம் மட்டும் காரணம் கிடையாது. இந்த ரோலில் நடிக்க நடிகர்கள் ரொம்பவே கஷ்டப்பட்டு உழைத்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்கள். இது தான் மக்களை ரொம்பவே கவர்ந்தது என்றும் சொல்லலாம். சினிமாவை தாண்டி நிஜ வாழ்வில் மிரட்டும் உடலமைப்புடன் போலீஸ் வேலையில் பணி புரியும் பிரம்மாண்டமான போலீஸ் ஆஃபீஸ்ர்களை பற்றி தான் நாம் இந்த பதிவில் காணப்போகிறோம். 


1. Mike Lassig

pics via The Press-Enterprise
pics via pinterest.ch

கலிபோர்னியாவில் நெடுஞ்சாலை பிரிவில் காவல் அதிகாரியாக வேலை பார்ப்பவர் Mike Lassig. இவருக்கு வயது 40. இவர் வெறும் போலீஸ் அதிகாரி மட்டும் கிடையாது, ஒரு பாடிபில்டரும் கூட. அதுவும் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்ற ஒரு பாடிபில்டர். தனது போலீஸ் வேலையையும் பார்த்துக்கொண்டு பாடிபில்டிங் போட்டிகளும் கலந்து கொள்கிறார் இந்த Mike.

திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் வசித்து வரும் மைக் லஸ்ஸி, 20 வருடமாக பாடிபில்டிங் பயிற்சியை மேற்கொள்கிறார். போலீஸ் வேலையின் போது டயட்டை பராமரிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், விடா முயற்சியாக இரண்டு துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் 20 க்கும் மேற்பட்ட பாடிபில்டிங் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.  International Natural Bodybuilding Association நடத்திய போட்டியில் 4 ஆவது இடத்தை பிடித்து உள்ளார். மேலும் INBA உடைய அந்த வருடத்திற்கான சிறந்த விளையாட்டு வீரராகவும் தேர்தெடுக்கப்படுகிறார். வேலைப்பளு, குடும்ப சூழ்நிலையை காரணம் காட்டி உடற்பயிற்சியை கைவிடுபவர்களுக்கு இவர் ஓர் முன்னுதாரணமாக அறியப்படுகிறார்.

2. Miguel Pimentel

pics via Queerty
pics via Pinterest

ரொம்பவே கவர்ச்சியான, அழகான ஒரு போலீசை நாம் உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம், அவர் பெயர்  Miguel Pimentel. இவர் லண்டனை சேர்ந்தவர். இவர் மிகவும் நேர்மையான ஒரு போலீஸ் ஆஃபீசராக அறியப்படுகிறார். ஆனால், அடாவடித்தனம் செய்தார்கள் என்றால் அவ்வளவு தான், சினிமா போலீஸ் போல பட்டையை கிளப்பி விடுகிறார்.

கச்சிதமான உடற்கட்டு, ஸ்டைலான ஹேர்ஸ்டைல் மற்றும் டாட்டூ என பார்க்க ஒரு மாடல் போல தோற்றமளிக்கிறார். இதனால் சமூக வலைத்தளங்களில் இவர் மிகவும் பிரபலமாக உள்ளார். ஆனால் இவரைப்பற்றி ஒரு அதிர்ச்சியான விஷயமும் வெளிவந்துள்ளது. அது என்னவென்றால் ஏற்கனவே இவருக்கு ஒரு girlfriend அதாவது பெண் தோழி ஒருவர் இருக்கிறார், அதனால் இவர் மீது இளம் பெண்கள் மிகவும் கடுப்பில் இருப்பதாக ஒரு தகவல் வருகிறது.

3. Michael Counihan

pics via New York Post
pics via Pinterest

அடுத்து நாம் பார்க்கப்போகும் இவர் பார்க்க ரேம்போவை நினைவு படுத்துகிறார். கால்பந்து போட்டியில் ஆர்வம் கொண்ட இவர் அதற்காக தனது 12 வயதிலேயே உடையப்பயிற்சி செய்ய ஆரம்பித்தார்.நாளடைவில் இவருக்கு போலீஸ் துறையின் மேல் வந்த ஆர்வத்தால் NYPD ஆஃபீஸ்ராக பணியில் சேர்ந்தார். தெருவில் நடக்கும் போது என்னை கடக்கக்கூடிய மக்கள் என்னை கண் இமைக்காமல் பார்க்கிறார்கள். இது எனக்கு ஒரு ஆர்வத்தை தூண்டுகிறது, அதே வேளை என்னை காணக்கூடிய பொதுமக்களுக்கு நானும் ஒரு முன் மாதிரியாக தெரிகிறேன். பல பேர் என்னை பின்பற்றி உடற்பயிற்சியை ஆரம்பித்தவர்களும் உண்டு. இது எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது.

ஒரு நாளைக்கு குறைந்தது 1 மணி முதல் ஒன்றரை மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். அதில் Cardio எனப்படக்கூடிய உடலை ரிலாக்ஸ் பண்ணக்கூடிய Treadmill என்கிற சாதனத்தில் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்கிறேன். வாரத்தில் ஒவ்வோர் நாளும் உடலின் ஒவ்வொரு பகுதிக்கென்று தனித்தனியாக பயிற்சிகள் மேற்கொள்வதாக இவர் கூறுகிறார். மிரட்டக்கூடிய இவரது கட்டான உடலுக்கு பின்னால் இவ்வளவு உழைப்பு இருக்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத ஒன்று.

4. Danny Schneider

pics via Daily Telegraph
pics via Muscle Bros.

ஆஸ்திரேலியாவுடைய சிட்னி நகரை சேர்ந்தவர் இந்த Danny Schneider. இவர் இங்கே போலீஸ் துறையில் senior constable ஆக வேலை செய்கிறார். இவர் வெறும் போலீசாக மட்டும் இல்லாமல் ஒரு மாஸ் பாடிபில்டராகவும் இருக்கிறார். போலீஸ் மற்றும் பாடிபில்டிங் இரண்டிலும் ஆர்வம் உள்ள இவர் சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து விட்டார். போலீஸ் வேளையில் சேர்ந்த பிறகும் உடற்பயிற்சியை தொடருகிறார் டேன்னி. சிறிய விபத்தில் தலையில் அடிபட்ட இவர் அதிலிருந்து மீண்டு வந்து தனது உடற்பயிற்சியை தொடருகிறார். சரியாக மூன்று வருடத்திற்க்கு முன்னாள் நடந்த International Natural Bodybuilding Association போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.

அடுத்த இரண்டு வாரங்களிலேயே ஸ்டேட் அளவிலான சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றுகிறார். இவருக்கு தோள்பட்டை பகுதியில் காயம் இருப்பதால் கடுமையான டயட்டை மேற்கொள்கிறார். ஒரு போலீசாக என் உடலை நான் பராமரிக்க வேண்டியது மிக முக்கியம், எனவே அதில் நான் எப்போதுமே கவனமாக இருப்பேன் என சொல்கிறார் டேன்னி.

5. Ronnie Coleman

pics via Pinterest
pics via wallhere.com

உலகின் மிகச்சிறந்த பாடிபில்டர்களில் Ronnie Coleman ம் ஒருவர். பல பேருக்கு இவர் ஒரு போலீஸ் அதிகாரியாக வேலை பார்த்தது தெரியாது. மிஸ்டர் ஒலிம்பியா போட்டியில் பங்கேற்கும் போதே இவர் 8 மணி நேரம் பணி செய்யும் போலீஸ் ஆஃபீஸ்ராக வேலை செய்துள்ளார். ஒருவர் இரு துறைகளில் முழு நேரம் உழைப்பது என்பதே ரொம்பவே கடினமான ஒன்று. அதேவேளை இவருக்கு தேவையான உணவுகளை கூட இவரே தான் தயார் செய்து சாப்பிட வேண்டும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இவ்வளவு கஷ்டங்களை கடந்த பின்பு தான் இவர் இந்த பாடிபில்டிங் துறையில் இவ்வளவு சாதனைகளை படைத்துள்ளார். அடுத்து வரக்கூடிய தலைமுறைகளுக்கு இவரைப்போன்றவர்கள் ஒரு முன்மாதிரியாக இருப்பார்கள் என்றால் அது மிகையாகாது.

Post a Comment

0 Comments