உங்களை வியக்க வைக்கும் 5 விசித்திர இடங்கள்

5 Unique Bizarre Places In The World

தனித்துவமான பல அதிசய இடங்கள் உலகத்தில நிறைய இருக்கு, இவைகள் எதுவும் நம்மை தேடி வராது, மாறாக நாம் தான் இத்தகைய அற்புத இடங்களை தேடிச்செல்ல வேண்டும். அப்படி, வித்தியாசமான இயற்கை அழகு கொஞ்சும் சில இடங்களை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.


1. Die Rakotzbrück

pics via Christine Abroad
pics via Be My Travel Muse

ஜெர்மனியில் 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு பாலம் தான் இந்த ரகோட்புரூக் ( Rakotzbrück ). ஏறத்தாழ 150 வருடங்களுக்கு முன்னர் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. தனித்துவமாகவும், துல்லியமாகவும் கட்டப்பட்ட இந்த பாலம், கீழே ஓடும் நீரின் பிரதிபலிப்பால் வட்டமான ஒரு தோற்றத்தை கொடுக்கிறது. பார்ப்பதற்கு மிக அழகாகவும், ஒரு புதுமையான பால கட்டமைப்பாக நமக்கு இது காட்சி தருகிறது. முக்கியமாக, தொழிற்முறை புகைப்படக்கக்காரர்களுக்கு இது ஒரு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும். மேலும், பார்ப்பதற்கு த்ரில்லர் அனுபவத்தை கொடுக்கும் இந்த பாலம் டெவில் பிரிட்ஜ் எனவும் அழைக்கப்படுகிறது. இதை பார்க்கும்போதே இதனுடைய பயன்பாட்டை விட இதனோட அழகிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்கன்னு விளங்க முடிகிறது. மேலும், பாலத்துடைய இரு புறமும் கூரான கருங்கல் பாறை மீது இந்த பாலம் பிணைக்கப்பட்டுள்ளது.

2. Spotted Lake Khiluk

pics via Preserved Light Photography
pics via The New York Times

Spotted Lake எனப்படுகிற இந்த ஏரி கொலம்பியால உள்ள உசையூஸ் ( Osoyoos ) நகருடைய வடமேற்கு பகுதில அமைந்துள்ளது. உலகத்திலேயே அதிக கனிமங்களை உள்ளடக்கிய ஓர் ஏரி இது தான். இது நீங்கள் நினைப்பது போல சாதாரண நீர்நிலை கிடையாது. சுமார் 365 தனிப்பட்ட சிறிய குளங்களாக இது காணப்படுது, உதாரணமாக உடலில் தேமல் வருவது போல இதனுடைய அமைப்பு இருக்கும். ஒவ்வொரு சிறிய குளங்களிலும் தனித்தன்மை வாய்ந்த அதிகப்படியான ரசாயன கனிமங்களை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக மெக்னீசியம் சல்பேட், கால்சியம் மற்றும் சோடியம் சல்பேட். இந்த கனிமங்களின் காரணமாக இதில் உள்ள நீரானரது பல்வேறு நிறங்களை கொண்டுள்ளது. இந்த நீர் நிலையில் காணப்படும் கனிமங்கள் உலகின் பல அரிய நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. கண்டிப்பாக உலகத்தில் உள்ள தனித்துவமான இடங்களில் இதும் ஒன்று.

3.  Eternal Flame Falls

pics via Facts List

pics via YouTube

நியூயார்க்கில் அமைந்துள்ள ஒரு சிறிய அழகான நீர்வீழ்ச்சி தான் இந்த Eternal Flame Falls. இதுல என்ன விசேஷம் என்றால் இங்கே உள்ள பாறைக்கு அடியில் சிறிய பகுதியில் எரிவாயு கசிவு உள்ளது. மேலும் அதிலிருந்து தீப்பிழம்பும் வெளியேறுகிறது. சுற்றிலும் நீரோட்டம் இருந்தாலும் பல காலமாக இந்த இடத்தில் மட்டும் தீ பற்றிய நிலையிலேயே உள்ளது. இந்த இடம் பற்றி மீடியாக்களில் வரும் செய்திகளால் சுற்றுலா வாசிகளின் எண்ணிக்கை இங்கு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஆனால், இந்த இடத்துடைய சுற்றுசூழலை கருத்தில் கொண்டு வனத்துறையினர் உதவியுடன் மக்கள் இங்கே கட்டுப்படுத்தப்படுகின்றனர்.

4. Confluence Of Rhone And Arve Rivers

pics via Boredom Therapy
pics via pinterest.com

சுவிட்சர்லாண்டில் அருகருகே ஓடக்கூடிய இரு ஆறுகள் பற்றி தான் நாம் இங்கு காணப்போகிறோம். ரோன் மற்றும் ஆர்வ் என்பது இங்கே ஓடக்கூடிய பிரபலமான ஆறுகள். ஒரு ஆற்று நீரின் நிறம் நீலம் மற்றொன்று பிரவுன். இந்த நீரின் அடர்த்தி காரணமாக இந்த இரு நீர்நிலைகளும் கலப்பதில்லை. இவை இரண்டும் ஜெனிவா நகரை சென்றடைகிறது. இவை சேராமல் இருக்க பல காரணங்கள் இருந்தாலும் பார்ப்போரை வெகுவாக இதனுடைய அழகு கிரங்கடிக்குதுன்னு சொன்னால் நிச்சயம் மிகையாகாது. கண்டிப்பாக இந்த இயற்கை அழகை வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் போய் பாருங்க...

5. Yonaguni Monument

pics via Urban Vaastu
pics via Rove.me

இந்த யோனாகுனி நினைவு சின்னமானது ஜப்பானின் ருக்யு தீவில் அமைந்துள்ளது. இது கால மாற்றத்தால் கடலில் புதைந்த பகுதியாக அறியப்படுகிறது. இந்த நிகழ்வு 5000 ஆண்டுகளுக்கு முன்னதாக நடந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இன்று வரை இது இயற்கையா அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டதா என்ற குழப்பம் இருந்து கொண்டு தான் உள்ளது. இங்கே உள்ள பழமைவாதிகள் இது ஏலியானால் உருவாக்கப்பட்டதாக நம்புகிறார்கள். கடலுக்கடியில் காணப்படும் கற்களால் உருவான படைப்புகள் உங்களை வேறு உலகத்திற்கு அழைத்துச்செல்லும் என்றே சொல்லலாம். மர்மங்கள் நிறைந்த பல சாகசங்களை இங்கே நீங்கள் காண முடியும்.

Post a Comment

0 Comments