7 Killer Plants Eats Animals
உணவு சங்கிலியை பற்றி நமக்கு தெரியும், தாவரங்கள் சூரிய ஒளியிலிருந்து சக்தி பெறுகிறது. இந்த தாவரங்களை விலங்குகள் சாப்பிடுகிறது, இந்த விலங்குகளை பெரிய விலங்குகள் உண்கிறது. இவை எல்லாவற்றையும் மனிதன் சாப்பிடுகிறான். இது தான் இந்த உலக வழக்கம்.![]() |
pics via Pinterest |
இந்த உணவு சங்கிலியையும் தாண்டி சில விஷயங்கள் நடக்கிறது. அதாவது, சிறு விலங்குகளை பொறி வைத்து பிடித்து சாப்பிடுகிற தாவரங்களும் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அவைகளை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
1. Cobra Lily
pics via Wikipedia |
இந்த தாவரத்துடைய பாம்பு போன்ற உருவத்தை வைத்தே இந்த தாவரத்திற்கு இந்த பெயர் வந்துள்ளது எனலாம். இது உலகில் அரிதாக வளரக்கூடிய ஓர் தாவரம். வடக்கு கலிபோர்னியாவில் பெரும்பாலும் காணப்படுகிறது. இது ஒரு கொடூரமான தாவரம் என்றே சொல்லலாம். இதனுடைய வாசனையால் கரவப்படும் இந்த பூச்சிகள் இதன் அருகே வந்தவுடன் அவற்றை தனக்குள்ளே அடைத்துக்கொள்கிறது. ஒரு முறை இந்த தாவரத்தின் உள்ளே செல்லக்கூடிய பூச்சிகளை உள்ளே வைத்தே கொன்று விடுகிறது. இந்த தாவரத்தினுடைய மகரந்த சேர்க்கையே இந்த பூச்சிகளின் மூலமாக தான் நடைபெறுகிறது. ஆனால், காரியம் முடிந்தவுடன் அந்த பூச்சியின் கதை கந்தல் தான்.
2. Portuguese Sundew
![]() |
pics via terramater.at |
இந்த தாவரம் ஸ்பெயினுடைய கடற்கரை பகுதிகளில் வளர்கிறது. மண்ணிலிருந்து இந்த தாவரத்திற்கு முறையான சத்துக்கள் கிடைக்காததால் இந்த தாவரம் இதை நாடி வரும் பூச்சிகளிடமிருந்து இந்த சத்துக்களை பெற்றுக்கொள்கிறது. வழக்கமான புலால் உண்ணும் தாவரங்களை போலவே இந்த தாவரமும் இனிமையான நறுமணம் மூலம் தான் பூச்சிகளை கவர்கிறது. இதன் நறுமணத்தால் கவரப்பட்ட பூச்சிகள் இதன் இதழ்களில் அமர்கிறது. இதன் உடலில் மிசிலேஜ் எனப்படும் பிசுபிசுப்பு திரவம் உள்ளது. இந்த திரவத்தில் ஒட்டிக்கொண்ட நொடிபொழிதில் வேகமாக இதன் இதழ்கள் சுருண்டு இந்த பூச்சிகளை தப்பிக்க விடாமல் செய்து விடுகிறது. இந்த பூச்சிகளை செரிமானம் செய்து தனக்கு தேவையான சத்துக்களை பெற்றுக்கொள்கிறது.அந்த பூச்சிகள் முழுமையாக செரிமானம் ஆன பிறகு இந்த தாவரம் பழைய நிலைக்கு மாறிவிடுகிறது.
3. Venus Flytrap
![]() |
pics via New Scientist |
இதற்கு முன்பு பார்த்த தாவரங்கள் பார்க்க அமைதியாக இருக்கும் ஆனால் இது பார்க்கவே violent ஆக இருக்கும். இதை பார்த்தாலே டீ-ரெக்ஸ் டைனோசர் வாயை பிளந்த மாதிரி இருக்கும். இது தெரியாமல் இதனோட அழகில் மயங்கி இதன் மேல் அமரும் பூச்சிகளின் நிலை அவ்வளவுதான். இதன் பாதத்தில் பூச்சிகளின் நடமாட்டத்தை உணரும் உணர் கொம்புகள் காணப்படும். தொடர்ந்து இரண்டு முறை இந்த கொம்புகளில் அந்த பூச்சிகள் முட்டினால் மட்டும் போதும், உடனே பெல் அடித்து விடும். அதாவது சாவு மணி. சரியான நேரம் பார்த்து இந்த தாவரம் தனது வாயை மூடி விடும். இதனோடு வாய்க்குள் சிக்கிய அந்த ஜீவன் அங்கேயே உயிரை விட வேண்டியது தான். அதிகபட்சம் இரையை போட்டுத்தள்ள 20 வினாடிகளை எடுத்துக்கொள்கிறது. இது வளரக்கூடிய இடங்களில் இதற்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இருப்பதே இதற்கு காரணம்.
4. Tropical Pitcher Plant
![]() |
pics via reddit.com |
இந்த தாவரத்தை மற்ற தாவரத்தோடு வேறுபடுத்திக்காட்டுவது இதனுடைய குடுவை போல இருக்கும் இதன் உருவம் தான். இது மற்ற தாவரங்கள் போல வெறும் பூச்சிகளை மட்டும் உண்ணும் சாதாரண ஆள் கிடையாது. வயிறு பெரிசா இருப்பதால் பல்லி, தவளை மற்றும் எலியாக இருந்தாலும் சரி, சிக்கினா சின்னாபின்னம் தான். இது இந்த விலங்குகளை கவர்வதே இதனுடைய அருமையான வாசனையை கொண்டு தான். வாசனையை பார்த்து இங்கே வரும் சிறிய விலங்குகள் இந்த தாவரத்தின் உள் பகுதியை எட்டி பார்க்கிறது. தொடந்து இந்த வாசனையை முகர்ந்து கொண்டே வரும் விலங்குகள் ஒரு கட்டத்தில் மயங்கி உள்ளேயே விழுந்து விடுகிறது. ஒரு தடவை இந்த பைக்குக்குள் எதாவது தவறி விழுந்து விட்டால் இரண்டு மாதத்திற்கு இதற்கு வேறு எந்த உணவும் தேவையில்லை. இதன் பைக்குள் இருக்கும் என்சைம் திரவம் இந்த விலங்குகள் செரிமானம் செய்து விடுகிறது.
5. Trigger Plant
![]() |
pics via Wikipedia |
இந்த தாவரம் ஒரு சுத்தமான அசைவ பிரியர் என்று சொல்லலாம். இது தன்னை காத்துக்கொள்ளவும் இவ்வாறு செய்கிறது என்றும் சொல்லலாம். இந்த தாவரமானது ஒட்டக்கூடிய உணர்கொம்புகளை ( sticky hairs ) கொண்டது. இது இதன் மேல் அமரும் சிறு பூச்சிகளை பிடித்துக்கொள்கிறது. இவை இந்த பூச்சிகளை பொறுமையாக செரிமானம் செய்து இதன் மூலம் சக்திகளை பெற்றுக்கொள்கிறது. கலரை பார்த்து மயங்கி ஏதாவதொரு பூச்சி தேன் உரியலாம் என நினைத்து இதன் மேல் அமர்ந்தால் அவ்வளவுதான், இந்த பூச்சியின் இரத்தத்தை இந்த தாவரம் உறிஞ்சி விடும்.
.
6. Butterwort
![]() |
pics via Pinterest |
இந்த தாவரம் இப்படி அழைக்கப்பட காரணம் வெண்ணெயால் போர்த்தியது போல் இருக்கும் இதன் அழகான மேல் தோற்றம். பெரும்பாலும் சென்ட்ரல் அமெரிக்காவில் இந்த தாவரம் காணப்படுகிறது. இந்த தாவரம் வெளிப்படுத்தும் வாசனையால் இந்த பூச்சிகள் கவரப்படுகிறது. மேலும் இந்த தாவரத்தின் மேல் நீர்த்துளிகள் படர்ந்து காணப்படுவதால் இதன் மேல் பூச்சிகள் அமர்கிறது. அதன் மேலே உள்ள பிசுபிசுப்பில் அந்த பூச்சிகள் ஒட்டிக்கொள்கிறது. பிறகு இந்த இந்த பூச்சிகளின் சத்துக்களை இந்த தாவரம் உறிஞ்சிக்கொள்கிறது.
7. Moccasin Plant
![]() |
pics via senfo.info |
இந்த தாவரத்தில் உள்ள ஜாடி போன்ற ஒவ்வொரு அமைப்பும் பூச்சிகளுக்கான ஒரு வலை போன்றது. இந்த தாவரத்தின் அருமையான வாசனை இந்த பூச்சிகளை இங்கே வர வைக்கிறது. பிறகு அழகான ஜாடி போன்ற இதன் அறைக்குள் சென்று இந்த பூச்சிகள் மாட்டிக்கொள்கிறது. துரதிஷ்டவசமாக மாட்டிக்கொள்ளும் இந்த பூச்சிகள் இந்த அறைக்குள்ளேயே செரிமானம் ஆகின்றது.
0 Comments