No Pants No Pain : New Celebration By New York People
![]() |
pics via The Telegraph |
இதை அறிமுகப்படுத்தினவர்கள் அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த ( Improve Everywhere ) என்கிற ஒரு கலைகுழு. இவர்கள் பொழுதுபோக்கு மற்றும் பிராங்க் எனப்படும் கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள்.
இந்த விழாவை இவர்கள் வருடந்தோறும் தவறாமல் நடத்திடறாங்க. வழக்கமாக ஜனவரி மாதத்தில் தான் இவர்கள் தேதியை முடிவு செய்வார்கள். இதை பற்றிய முன்னறிவிப்பை டிசம்பர் மாதத்திலேயே இவர்களுடைய வெப்சைட்டில் பதிவிட்டு விடுவார்கள்.
முதன் முதலாக இவர்கள் இந்த கொண்டாட்டத்தை 2002 ஆம் ஆண்டு வெறும் 7 பேர் கொண்ட குழுவோடு தொடங்கியிருக்காங்க. இது 2006 ஆம் ஆண்டில் 150 பேராக மாறியது. இந்த கூட்டத்தில் ஒரு சிறிய சலசலப்பு ஏற்பட 8 பேர் கைது செய்யப்பட்டாங்க, பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். 2013 ஆம் ஆண்டு இந்த விழாவை 16 நகரங்கள் இணைந்து நடத்தியது.
![]() |
picd via Time Out |
ஜனவரி 2016 ல் இதே ஸ்டைலில் ரஷியாவில் உள்ள மாஸ்கோவில் இந்த சம்பவத்தை கொண்டாடி இருக்காங்க, அந்த நேரத்தில அங்கே வந்த போலீஸ்காரர் அவங்ககிட்ட விசாரணை நடத்தி பொது மக்களுக்கு இடையூறு செய்ததாக கூறி ஒரு FIR இ பதிவு பண்ணிட்டாங்க.
எப்படித்தான் இந்த விழாவை இவங்க கொண்டாடுறாங்கன்னு பார்த்தீங்கன்னா சரியாக குறித்த நாளில் எல்லோரும் ரயில்வே சுரங்கப்பாதைக்கு வராங்க, மலமலன்னு அவங்க போட்டிருந்த பேண்டை கழட்டுறாங்க, அப்படியே ஒய்யாரமா ஒரு நடையைப்போட்டு ரயில் பெட்டிக்குள்ள ஏறுறாங்க. நல்லா காத்தோட்டமா சில்லுன்னு ஒரு ரெய்டு போறாங்க.
![]() | ||||
pics via abc7NY |
![]() |
pics via USA Today |
ஆரம்பத்தில 7 பேர் ஆரம்பித்த இந்த விவகாரமான திருவிழா இன்று பல நாடுகளில் கொண்டாடும் அளவிற்கு போய் விட்டது. குழந்தைகள் பெரியவர்கள் வித்தியாசமின்றி அனைவரும் இங்கு ஜட்டியோடு திரியிறாங்க, இத பார்க்கும்போதே தெரியுது எத்தனை பெருசுகள் குழந்தைங்க மாதிரி ஜட்டியோட திரியணும்னு ஆசைப்படுறாங்கன்னு. அவங்களுக்குள்ள நிறைய செலஃபீ புகைப்படம் எடுத்துக்கிறாங்க அதை அப்படியே facebook, twitter என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு லைக் மற்றும் கமெண்டை அள்ளுறாங்க...
0 Comments