WWE சூப்பர்ஸ்டார்களால் செய்யப்பட்ட 6 கின்னஸ் சாதனைகள்

6 WWE Superstars Who Hold Guinness World Records


மனிதர்களால் நிகழ்த்தப்படும் அசாதாரண சாதனைகளை உலகத்திற்கு எடுத்து காட்டுவது தான் இந்த கின்னஸ் சாதனை. இதில் நாம் விரும்பக்கூடிய WWE மல்யுத்த சூப்பர்ஸ்டார்களும் சில கின்னஸ் சாதனைகளை செய்து உள்ளனர். அவர்களை பற்றி தான் நாம் இந்த பதிவில் காணப்போகிறோம்.

#1 Brock Lesnar
pics via ThoughtCo

WWE மல்யுத்த போட்டிகளில் அசைக்க முடியாத ஜாம்பவானாக இப்போது வரை இருப்பவர் புராக் லெஸ்னர். WWE போட்டிகள் பொய் என தெரிந்தும் இப்போது வரை மக்கள் விரும்பி பார்க்க காரணம் இவரைப் போன்ற சில வீரர்கள் தான் காரணம். WWE மல்யுத்த போட்டிகளில் மிகக்குறைந்த வயதில் சாம்பியன் பட்டம் வென்ற பிரிவில் இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சம்மர்ஸ்லாம் போட்டியில் ராக்கை தோற்கடித்து இவர் இந்த சாதனையை செய்துள்ளார்.

#2 Stone Cold
pics via Sportskeeda

மக்கள் விரும்பக்கூடிய பிரபல மல்யுத்த வீரர்களில் ஸ்டோன் கோல்ட் முக்கியமான நபர். இப்போதுவரை இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. wwe சாம்பியன்ஷிப்பிற்கு அடுத்து பெரிய விருதாக அறியப்படும் " Royal Rumble " விருதை மூன்று முறை வென்று உள்ளார். இதற்காக இவருக்கு 2010ல் இதற்கான கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டது. இவர் 1997, 1998 மற்றும் 2001 ல் இந்த Royal Rumble விருதை வென்று அசத்தி உள்ளார். சுமார் 18 வருடங்களாக இந்த சாதனை தொடர்ந்து கொண்டு வருகிறது.

#3 Shelton Benjamin
pics via WhatCulture.com

முன்னாள் இன்டர்கோன்டினென்டல் சாம்பியனான ஷெல்டன் பெஞ்சமின் wwe ஆல் நடத்தப்படும்  THQ சேலஞ்சர் போட்டியில் அதிக முறை வென்றதன் மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். ஒவ்வொரு ரெஸ்ட்லமேனியா போட்டியின் போதும் இந்த THQ சேலஞ்சர் போட்டி நடைபெறும். இந்த போட்டியில் இவர் நான்கு முறை வெற்றி பெற்றுள்ளார்.

#4 Trish Stratus
pics via stillrealtous.com

WWE இன் முன்னாள் பெண்கள் சாம்பியனும் Hall of Famer ம் ஆன Trish Stratus அதிக முறை சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்ற பெண் வீராங்கனை என்ற பிரிவில் 2007 ஆம் ஆண்டு வெளியான கின்னஸ் சாதனை புத்தகத்தில் இவர் இடம் பெற்றுள்ளார். 2001 ஆம் ஆண்டு முதல் பட்டத்தை வென்ற இவர் 2006 ஆம் ஆண்டு வரை 7 பட்டங்களை வென்றுள்ளார்.

#5 The Rock
pics via Guinness World Records

WWE போட்டிகளில் மிகவும் பிரபலமானவரும், பிரபல ஹாலிவுட் நடிகருமான தி ராக் ஒரு புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். ஆனால், இந்த சாதனையை அவர் wwe போட்டிகளில் செய்யவில்லை. 2015ல்  Brahma Bull முன்னாடி 3 நிமிடத்தில் 105 செலஃபீ எடுத்துக்கொண்டதே சாதனையாக இருந்தது. தற்போது இவர் இதை முறியடித்துள்ளார். இவர் 3 நிமிடத்தில் 122 செலஃபீ எடுத்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

#6 Vince McMahon
pics via sportskeeda.com

WWE கம்பெனியின் உரிமையாளரான வின்ஸ் மிக்மன்  WWE மல்யுத்த  போட்டியின் மிகவும்  வயதான சாம்பியனாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். 1999 ல் Triple H க்கு எதிரான சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் வெற்றி பெற்று wwe சாம்பியனாக தன்னை பதிவு செய்து கொண்டார். அப்போது அவருக்கு வயது 54.



Post a Comment

0 Comments