உகாண்டா நாட்டை பற்றி நீங்கள் அறியாத 10 தகவல்கள்

Top 10 Interesting Facts Of Uganda

உகாண்டா ஆப்ரிக்காவின் மத்திய கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடு. இந்த நாட்டுடைய எல்லைப்பகுதிகளாக கென்யா, தெற்கு சூடான், காங்கோ மற்றும் தன்சனியா ( Tanzania ) ஆகிய நாடுகள் இருக்கின்றது. ஆஃப்ரிக்காவுடைய மிகப்பெரிய ஏரிகள் மற்றும் நீர்நிலைகளை கொண்ட நாடுகளில் உகண்டாவும் ஒன்று. உகாண்டா பற்றிய சில சுரவாரஸ்யமான விஷயங்களை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

pics via softpower.ug

1. Language

ஆங்கிலம் மற்றும் ஸ்வாஹிலி ( Swahili ) இங்கே ஆட்சி மொழியாக உள்ளது. ஆனால் லுகான்டா என்கிற மொழி தான் இந்த மக்களால் பெரும்பாலும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. மேலும் பல மொழிகள் இங்கு பரவலாக பேசப்பட்டு வருகிறது.

2. Population in Uganda
pics via My Uganda

ஆப்ரிக்க நாடுகளில் கென்யாவிற்கு அடுத்து அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக உகாண்டா அறியப்படுகிறது. இறுதியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 44 மில்லியன் மக்கள் இங்கு வாழ்கிறார்கள்.

3. Food in uganda

pics via Quit Job. Travel World.

pics via Omenka Online

  இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் எடுத்துக்கொள்ளும் உணவு என்று பார்த்தால் சப்பாத்தி, Matooke எனப்படும் பச்சை வாழை, பிரட்டில் தயாரிக்கப்படும் உணவுகள், பீன்ஸ், Stew என சொல்லப்படக்கூடிய இறைச்சியால் செய்யப்படக்கூடிய உணவுகள் இங்கு பிரபலம். மேலும் பூச்சி உணவுகள் இங்கு ரொம்பவே பிரபலம். பெரும்பாலும் street food ஆக இங்க பூச்சி உணவுகளை நீங்கள் அதிகமாக பார்க்கலாம். மீன் உணவுகளும் இங்கு அதிகமாக கிடைக்கிறது.

4. Climate in Uganda

pics via Nkuringo Safaris
pics via naturalworldsafaris.com

இங்கு நிலவக்கூடிய தட்ப வெப்பநிலை பற்றி பார்த்தால் சாதாரணமாக 25-29°C வெப்பம் இங்கே பதிவாகிறது. மழைக்காலங்களில் வெப்பநிலை 16-28°C காணப்படும். சுற்றிலும் மலை மற்றும் இயற்கை வளங்கள் இருப்பதால் சீதோஷண நிலை இங்கே சிறப்பாக உள்ளது. செப்டெம்பர் முதல் நவம்பர் மற்றும் மார்ச் முதல் மே வரை இங்கே மழைக்காலமாகவும், டிசம்பர் முதல் பிப்ரவரி மற்றும் ஜூன் முதல் ஜூலை கோடை காலமாகவும் காணப்படுகிறது.

5. Currency of Uganda

pics via Forex Source

இங்க நாம் பணத்தை ரூபாய் என்பதுபோல் உகாண்டாவில் ஷில்லிங் என பணத்தை அழைக்கிறாங்க. இந்த நாட்டுடைய பண மதிப்பு நம்ம இந்திய நாட்டோடு ஒப்பிடும்போது 54 மடங்கு குறைவாக உள்ளது. அமெரிக்கா டாலரோடு ஒப்பிட்டால் ஒரு அமெரிக்கா டாலருடைய மதிப்பு உகாண்டாவில் 3755 செல்லிங்.

6. Transport in Uganda
pics via Sunrise
pics via World Bank Group

இங்கே உள்ள போக்குவரத்து வசதிகள் பற்றி பார்த்தால் இங்கு நிறைய டாக்சிகள் பயன்பாட்டில் உள்ளது, வாடகை கார்களும் இருக்கிறது. நகரத்தை தவிர்த்து உள்ளூரில் வாழும் மக்களுடைய முதன்மையான போக்குவரதாக சைக்கிள் தான் பயன்பாட்டில் உள்ளது. மினி பேருந்துகளும் இங்கு உள்ள டவுன்களில் காணப்படுகிறது. நீங்கள் எங்கிருந்து கை காட்டினாலும் உங்களை பேருந்தில் ஏற்றிக்கொள்வார்கள். நகரங்களுக்கு நடுவே ரயில் போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது.

உகாண்டாவில் ( Entebbe ) என்ற இடத்தில விமான போக்குவரத்து வசதி உள்ளது. எண்டபாவில் மட்டும் தான் சர்வதேச விமான போக்குவரத்து வசதி உள்ளது, அதுபோக மூன்று இடங்களில் உள்ளூர் விமான சேவைகள் வழங்கப்பட்டு உள்ளது.

7. Culture in uganda

pics via The Boston Globe

இங்கு வாழக்கூடிய மக்கள் தங்களுடைய பாரம்பரிய கலாச்சாரத்தை பின்பற்றி வருகிறார்கள். நிறைய பழங்குடி மக்களும் இங்கு வசித்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் அவர்களுடைய பாரம்பரிய கலாச்சாரத்தை மதிக்கிறார்கள். அவர்களுடைய விருந்தோம்பல் பன்முக தன்மை கொண்டது. அதில் முக்கியமான ஒன்று அவர்களுடைய பாரம்பரிய நடனம். இவர்களுடைய கலாச்சாரம் மற்றும் கலைக்கும் மரத்தோடு மிகப்பெரிய ஒரு நெருக்கம் இருக்கிறது எனலாம். இங்கு உள்ள அங்காடிகள், ஹோட்டல்கள், சினிமா திரையரங்குகள், கிப்ட் கடைகள்  ( gift shop )  என எல்லா இடத்திலும் மரத்தினால் செய்யப்பட்ட பொருட்கள் நிச்சயம் இருக்கும்.

8. Sports in Uganda

pics via FISU
pics via redpepper.co.ug

உகாண்டா மக்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். இங்கு உள்ள மக்கள் அதிகம் விரும்பும் ஒரு விளையாட்டி கால்பந்து. குத்துச்சண்டை போட்டியில் இந்த நாட்டு மக்கள் நிறைய ஒலிம்பிக் மெடல்களை வென்றுள்ளனர். கிரிக்கெட், டென்னிஸ் மற்றும் கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளும் இங்கு பிரபலம்.

9. Religion in Uganda
pics via Google Sites

இங்கு வாழும் மக்களில் 85.2 சதவீத மக்கள் கிறிஸ்துவ மதத்தை பின்தொடர்கிறார்கள். 12.1 சதவீத மக்கள் இஸ்லாத்தை பின்பற்றுகிறார்கள். மேலும் ஹிந்து மற்றும் சீக்கிய மதத்தை பின்பற்றும் மக்களும் இங்கு பரவலாக வாழ்கிறார்கள்.

10. Tourism in Uganda

pics via GoAbroad.com
pics via Uganda Tourism Center

சுற்றுலா துறை இந்த நாட்டின் ஒரு முக்கிய அம்சமாகும். சுற்றுலா துறையைக்காக நேரடியாக  வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், கணக்காளர்கள் போன்றோர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். சுற்றுலா துறைக்காக இந்த நாட்டு  மதிப்பில் 4.9 ட்ரில்லியனை இந்த நாடு ஒதுக்கியுள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இங்கு கொரில்லா பார்க், பறவைகள் பூங்கா, மேலும் குயின் எலிசபெத் தேசிய பூங்கா போன்ற இடங்கள் உள்ளது. குயின் எலிசபெத் பூங்காவில் காட்டு விலங்குகளை காணும் வகையில் வாகன போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் சிங்கங்கள், யானைகள், ஒட்டக சிவிங்கி, antelopes இன மான்கள் மற்றும் காட்டெருமைகளை கண்டு ரசிக்க முடியும். மேலும் பிரம்மாண்டமான நீர்நிலைகள் இங்கு காணப்படுகிறது. இங்கு நீர்யானைகள், முதலைகள் மற்றும் வித்தியாசமான பறவைகளின் வாழ்க்கையை கண்டு ரசிக்க முடியும்.

Post a Comment

0 Comments