உலகின் டாப் 10 விலையுயர்ந்த போலீஸ் கார்கள்

Top 10 Most Expensive Police Cars In The World

ஆரம்ப காலத்தில் நம்ம நாட்டின் காவல் துறை வாகனத்தை பார்த்திருப்பீங்க, அதுவும் இந்தியா முழுக்க ஒரே மாதிரியான சீருடை போன்ற ஒரு ஜீப் மற்றும் ஒரு பஸ். சுமார் 40 வருடத்திற்கு முன்னர் இந்தியாவின் எந்த மொழி படத்தை பார்த்தாலும் ஒரே மாதிரியான போலீஸ் வாகனம் தான் இருக்கும். தற்போது தான் அது முன்னேற்றம் அடைந்து டாடா சுமோ, பொலீரோ, ஸ்கார்பியோ என கொஞ்சம் லேட்டஸ்ட் மாடல் வண்டிகளை போலீஸ் துறைக்காக ஒதுக்கி இருக்காங்க. இந்த வாகனங்களை பார்க்கவே நமக்கு ஆச்சர்யமாக உள்ளது.


pics via Arena Pile

ஆனால் வளர்ந்த நாடுகளில்,  நம்ம ஊர் நட்சத்திரங்கள், பிரபலங்கள் மட்டும் பயன்படுத்தும் மிகவும் விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்கள் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் சாதாரண சொகுசு கார்கள் கிடையாது, நம்ம நாட்டில் பல நூறு கோடி சொத்து வைத்திருப்பவர்கள் மட்டுமே வைத்திருக்கும் அசாதாரண கார்கள். இதைப்பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

10.  Porsche Panamera – $175,000
pics via Autoblog

மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஒரு அரபு நாடு தான் கட்டார். இந்த அரசாங்கம் தனது கடற் படை வீரர்களுக்காகவும், காவல் துறைக்காகவும் உலகின் பிரபலமான ஸ்போர்ட்ஸ் காராகிய Porsche Panamera மற்றும் Porsche Cayennes  ஆகிய கார்களை வாங்கி இருக்காங்க. இதில் Porsche Panamera காருடைய விலை 1,75,000 டாலர்கள் இந்திய மதிப்பில் சுமார் 1.21 கோடி. இது ஒரு காருடைய விலை மட்டுமே. Porsche Cayennes மாடல் காரின் விலை சுமார் 50 லட்சம் ருபாய்.

9. Lamborghini Gallardo – $248,000

pics via MotorTrend
pics via Flickr

உலகின் டாப் 10 ஸ்போர்ட்ஸ் கார் கம்பெனியான லம்போர்கினி தனது அன்பளிப்பாக இத்தாலி காவல் துறைக்கு சில கார்களை வழங்கி உள்ளது. அதுவும் முதலுதவி உபகரணங்கள் மற்றும் நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் அதிக பட்ச வேகம் மணிக்கு 309 கிலோ மீட்டர். இந்த காரின் விலை 248,000 டாலர்கள். இந்திய மதிப்பில் 1.72 கோடி

8. McLaren MP14-12C  – $250,000

pics via Autocar
pics via Autocar

பிரிட்டனில் சாலை பாதுகாப்பிற்காகவும், குற்றங்களை குறைப்பதற்காகவும் அந்த நாட்டு அரசு காவல் துறைக்கு விலை உயர்ந்த அதிவேக கார்களை ஏற்பாடு செயதுள்ளது. 2014 ஆம் ஆண்டு அந்த அரசு 2,40,000 டாலர்கள்  மதிப்புள்ள McLaren MP14 ரக கார்களை வழங்கியுள்ளது. இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 333 கிலோ மீட்டர். இந்த காரில் 3.8 லிட்டர் ட்வின் டர்போ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 600 குதிரை திறன் சக்தியை இந்த கார் வெளிப்படுத்துகிறது. இந்திய மதிப்பில் இதன் விலை 1.73 கோடி.

7. Lamborghini Huracan – $3,08,000

pics via Motor1.com

pics via Fortune
Lamborghini ஏற்கனவே இத்தாலி அரசுக்கு சில கார்களை அன்பளிப்பாக வழங்கியிருந்தது. அந்த நட்பின் அடுத்த கட்டமாக Huracan LP 610-4 மாடல் கார்களை காவல் துறைக்கு வாங்கியது இத்தாலி அரசு. மேலும் இவர்களுக்காக சில மாறுதல்களையும் இந்த கார்களில் செய்திருந்தினர். பல நவீன தொழில்நுட்பத்துடன், பல போலீஸ் உபகரணங்களை உள்ளேயே வைத்துக்கொள்ளும் வகையில் இந்த கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் இதன் விலை 2.13 கோடி

6. Ferrari FF – $400,000

pics via Autoblog
pics via indiandrives.com

துபாய் அரசு அந்நகரத்தின் கப்பற்படை வீரர்களுக்காக கார் பந்தய உலகின் ஜாம்பவானான மற்றும் உலகின் விலை உயர்ந்த கார்களில் ஒன்றான பெர்ராரி கார்களை இறக்குமதி செய்துள்ளது. இந்த கார் 0 லிருந்து 62 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 3.7 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 335 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. சாதாரணமாக ஸ்போர்ட்ஸ் கார்களில் இரண்டு இருக்கைகள் மட்டும் தான் இருக்கும், ஆனால் இந்த கார் நான்கு இருக்கைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் சுற்றுலா பயணிகள் அதிகம் உலவும் பகுதியில் ரோந்து பணிக்காக பயன்படுத்தப்படும். ஒரு வேலை துபாயின் உயர்ந்த கட்டடங்களின் அருகில் ஏதாவது சட்ட விதி மீறலில் ஈடுபட்டால் பெர்ராரி காரில் உங்களை சிறைக்கு அழைத்து செல்வார்கள். இந்திய மதிப்பில் இந்த காரின் விலை 2.77 கோடி

5. Lamborghini Aventador – $410,000
pics via Lamborghini.com
pics via Newsfeed

துபாய் அரசுடைய சொகுசு போலீஸ் கார் வரிசையில் அடுத்து இடம் பெறுவது Lamborghini கம்பெனியின் Aventador மொடல் கார். Lamborghini கம்பெனியின் மிகச்சிறந்த படைப்பாக இந்த மாடல் கார் அறியப்படுகிறது. அரபு எமிரேட்ஸின் தலைநகரங்களுக்காக இந்த காரை இந்த அரசு வாங்கியுள்ளது. வெள்ளை மற்றும் பச்சை நிற பெயிண்டிங்கில் மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கிறது இந்த கார். 690 குதிரை திறன் சக்தியை வெளிப்படுத்தும் V12 எஞ்சின் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. 60 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் இந்த கார் எட்டி விடுகிறது இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 350 கிலோ மீட்டர். இந்திய மதிப்பில் 2.88 கோடி மட்டுமே.

4. Audi R8 GTR – $432,000
pics via Top Speed
pics via CarBuzz

ஜெர்மன் போலீசுக்காக ஒரு ஸ்பெஷல் எடிசன் காரை புகழ் பெற்ற Audi நிறுவனத்துடன் இணைந்து ஒரு டிசைனை உருவாக்கி இருக்காங்க ஒரு ஸ்பெஷல் டீம். கிரே மற்றும் நீல நிறத்தில் இந்த போலீஸ் கார் பார்க்க அப்படியே அல்டிமேட்டாக இருக்கிறது. carbon fiber ஆல் உருவாக்கப்பட்டுள்ள காரின் பாகங்கள் காரின் எடையை குறைக்க உதவி உள்ளது. உலோகத்தால் உருவாக்கப்பட்ட ரோல்ஓவர், மிகவும் அசத்தலான சைரன் லைட், ஜொலிக்கும் பைண்டிங் என கார் அசத்தலாக இருக்கிறது. இதில் உள்ள 5.2 லிட்டர் V10 என்ஜின் வண்டியை 612 hp பவரில் செலுத்துகிறது. இந்திய மதிப்பில் இந்த காரின் விலை 3 கோடி

3. Mercedes-Benz Brabus Rocket CLS

pics via Robb Report
pics via Pinterest

ஜெர்மனியின் அதிவேக ஸ்போர்ட்ஸ் கார் வரிசையில் இன்னொரு கார் Mercedes-Benz ன், Brabus Rocket CLS மாடல். ஜெர்மனி காவல் பிரிவின் சாலை போக்குவத்து பிரிவிற்காக இந்த கார் வாங்கப்பட்டுள்ளது. இந்த காரின் மூலமாக கடினமான வளைவுகளில் சிறப்பாக காரை செலுத்துவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 6.3L மற்றும் V12 என்ஜின் மூலமாக 720 hp சக்தியை இந்த கார் வெளிப்படுத்துகிறது. இந்த காரின் அதிகபட்ச வேகம் 360 கிலோ மீட்டர். இதன் விலை இந்திய மதிப்பில் 3.2 கோடி

2. Aston Martin One-77 - 1.79 Million 

pics via
pics via autolife.com.np

துபாய் போலீஸின் மற்றொரு அதிநவீன கார் இந்த Aston Martin One-77. உலகின் எப்படிப்பட்ட சொகுசு கார்களையும் வாங்கிவிடும் அரபு எமிரேட்ஸ் Aston Martin காரை காவல் துறைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.  துபாய் அரசின் வர்த்தக மையத்தில் இந்த காரை காவல் துறைக்கு அன்பளிப்பாக அளித்தது. துபாயில் சுற்றுலா பயணிகள் அதிகம் உலவும் பகுதிக்காக இந்த காரை வாங்கியுள்ளது துபாய் அரசு. துபாய்க்கு வருபவர்களை வரவேற்கவும், ஊக்கப்படுத்துவதாகவும் இந்த சொகுசு காரை காவல் துறைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை 11.79 கோடி

1. Bugatti Veyron - 2 Million 

pics via CarBuzz
pics via The National

இந்த கார் தான் உலக அளவில் போலீஸ் துறைக்கு வழங்கப்பட்ட மிகவும் விலை உயர்ந்த கார், Bugatti Veyron. மேலும் இந்த கார் உலகின் மிகவும் அதிவேக கார்களில் ஒன்று. பூஜ்யத்திலிருந்து 62 கிலோ மீட்டர் வேகத்தை எட்ட வெறும் 2.46 வினாடிகளே இந்த காருக்கு தேவைப்படுகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 400 கிலோ மீட்டர் வேகம். இந்த காரின் வேகத்திற்காக விமானத்தின் யுக்தியை பயன்படுத்தி உள்ளனர். இந்த கார் துபாய் அரசின் பொருளாதார வளத்தை எடுத்து காட்டும் வகையில் வாங்கப்பட்டுள்ளது.இந்திய மதிப்பில் இந்த காரின் விலை 13.87 கோடி.

For Video Click Here:

 


Post a Comment

0 Comments