தாய்லாந்து பற்றிய 10 சுவாரசிய உண்மைகள்

Top 10 Important Facts About Thailand

ஆசியாவுடைய தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு அழகான நாடுதான் தாய்லாந்து. சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கிற்கு இந்த நாடு மிகவும் பிரபலம். நிலப்பரப்பின் அடிப்படையில் தாய்லாந்து உலகின் 50 வது மிகப்பெரிய நாடு. இதனுடைய எல்லை நாடுகளாக மியான்மர், சியாம், கம்போடியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் உள்ளது. தாய்லாந்து நாட்டை பற்றிய சில முக்கிய தகவல்களை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.


image source centrepoint.com1. language


Thai என்கிற மொழி தான் இங்கு பெரும்பாலும் அதிக மக்களால் பேசப்படுகிறது. இங்குள்ள பள்ளிகளில் ஆங்கிலம் கட்டாயக்கல்வியாக உள்ளது. இருந்தாலும் சரளமாக ஆங்கிலம் பேசும் மக்கள் இங்கு குறைவாகவே உள்ளனர். 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 62 மொழிகள் இங்கு பயன்பாட்டில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இங்கு வாழும் பழங்குடி மக்கள் இருபதிற்கும் மேற்பட்ட மொழிகளை பயன்படுத்தி வருகின்றனர்.


2. Population In Thailand

image source Born Globals
image source TripZilla

தாய்லாந்தில் 69.31 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். உலக அளவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் தாய்லாந்து 20 ஆவது இடத்தில உள்ளது. தாய்லாந்து மக்கள் தொகையில் பெரும்பகுதி மக்கள் தலைநகரான பாங்காக்கில் வாழ்கின்றனர். அங்கு மட்டும் சுமார் 56.8 லட்சம் மக்கள்
வாழ்கின்றனர்.3.Climate
image source The Straits Times

இங்கு சராசரியாக வெப்பம் 31 முதல் 32°C இருக்கும், கோடை காலத்தில் அதிகபட்சம் 40°C வரை இருக்கும். குறைந்த பட்சமாக டிசம்பர் மாதத்தில் 26°C இருக்கும். இங்கு மார்ச் முதல் மே வெப்பமாகவும், நவம்பர் முதல் பிப்ரவரி குளிராகவும், மேலும் ஜூன் முதல் அக்டோபர் வரை ஆகிய மூன்று பருவகாலங்கள் உள்ளது.4. Food In Thailand

image source Halal Trip
image source
குலைந்த அரிசியில் செய்யப்படும் ஒரு வகை உணவு இங்கே உள்ள மக்களின் பிரதான உணவாக உள்ளது. இது இவர்களுடைய பாரம்பரிய உணவாகவும் அறியப்படுகிறது. மேலும் இவர்களுடைய பாரம்பரிய உணவாக அறியப்படும் இன்னொரு உணவு  Lao salad. இந்த உணவில் இறைச்சி, வெங்காயம், மிளகாய், வறுக்கப்பட்ட அரிசி பவுடர், மேலும் இதை புதினா இலையால் அலங்கரித்து இருப்பார்கள். முழு கிரில்லில் வேகவைக்கப்பட்ட பன்றி உணவும் இவர்களுடைய முக்கியமான உணவு.

நூடுல்ஸ் இங்குள்ள அனைத்து உணவகம் மற்றும் ரெஸ்டாரண்ட்களில் கிடைக்கும் ஒரு பிரபல உணவு. மேலும் சைவம் மற்றும் அசைவம் என அணைத்து உணவுகளும் இங்கு கிடைக்கிறது. கடல் உணவு இங்கே ரொம்ப பிரபலம், அதேநேரம் விளையும் சற்று அதிகமாக இருக்கும். சாதாரணமாக உணவகங்களில் கிடைக்கும் அரிசி உணவு இந்த ஊர் மதிப்பில் 90 முதல் 150 ரூபாய். சாதாரண ரெஸ்டாரண்ட்களில் நூடுல்ஸ் நூறு ரூபாய்க்கு கிடைக்கிறது.5. Currency Of Thailand

இந்த நாட்டில் பணத்தை Thai baht என அழைக்கப்படுகிறது. இந்த நாட்டு பணத்தின் குறியீடு THB. ஒரு யூஸ் டாலர் இங்கு 31.14 Thai baht ற்கு சமம். நமது இந்திய ரூபாயை விட இந்த நாட்டின் பணத்தின் மதிப்பு இரண்டு மடங்கு அதிகம். நம்முடைய ஒரு ரூபாய் தாய்லாந்தில் 0.45 ரூபாய்க்கு சமம்


6. Transport In Thailand

image source

image source Environnet

தாய்லாந்தில் இருக்கும் தீவுகளுக்கு செல்ல பயணிகளை ஏற்றிச்செல்லும் நிறைய படகுகள் இங்கு உள்ளது. இங்குள்ள தீவுகளுக்கு செல்ல இது ஓர் எளிய வழி என்று சொல்லலாம். அது போக நிறைய ஆட்டோ ரிக்சாக்கள் மற்றும் பல வண்ணங்களில் டாக்சிகள் இங்கு கிடைக்கும். மேலும் இங்கு மெட்ரோ வசதி, பேருந்து, ரயில் போக்குவரத்து வசதிகள் உள்ளன.மேலும் தரமான விமான போக்குவரத்து சேவையும் இங்கு கிடைக்கிறது. 2012 லேயே இங்கு 103 விமான நிலையங்கள், 63 தரமான விமான ஓடுபாதைகள் ( paved runways ), மற்றும் 6 ஹெலிகாப்டர் இறங்குதளங்கள் உள்ளது.

7. Culture
image source Atlas Of Humanity
image source elephants in thailand
image source ICHO 2017 - Mahidol University

இவர்கள் கடைபிடிக்கும் கலாச்சாரங்கள் பழங்கால இந்நாட்டு மக்களின் பாரம்பரிய கலாச்சாரம் ஆகும். இந்த மக்களின் கலாச்சாரம் பெரும்பாலும் புத்தமத சமயத்தை சார்ந்து இருக்கும். மேலும் இந்திய, சீனா, கம்போடியா மற்றும் தெற்கு ஆசியாவின் கலாச்சார கலவைகள் இங்கு காணப்படுகிறது. இங்கு பல இந மக்கள் வாழ்கின்றனர்.  இதில் மியான்மர், லாஸ், கம்போடியா மற்றும் மலேசியா போன்ற நாட்டு மக்களும் இங்கு வாழ்வதால் பல கலாச்சாரங்களின் கலவையை இங்கு பார்க்க முடியும். பலவேறு நாட்டு மக்கள் இங்கு வசிக்கும் சூழ்நிலையில், அவர்களது கலாச்சாரங்களை இங்கு மதிப்பளிக்கப்படுகிறது. இதன் காரணமாக சீனா மற்றும் தாய்லாந்து இடையே ஓர் நீண்ட கால வியாபார ரீதியான ஒரு இணக்கம் உள்ளது. பல மொழிகளில் இங்கு மீடியா துறைகள் உள்ளன. தாய் மொழி, ஆங்கிலம், சைனீஸ் போன்ற மொழிகளில் செய்தி சேனல்கள் மற்றும் செய்தித்தாள்களும் இங்கு கிடைக்கிறது.

பிறநாட்டினர் இங்கு உள்ள மக்களை திருமணம் செய்து கொள்ள சட்டப்படி அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு அதிகாரப்பூர்வமானா எழுத்து வடிவ கடிதம் தேவை. முக்கியமாக அது தாய் மொழிக்கு மொழிமாற்றம் செய்திருக்க வேண்டும். திருமண விஷயத்தில் இங்குள்ள மக்களுக்கு முழு சுட்டதந்திரம் அளிக்கப்படுகிறது. பெரும்பாலும் காதல் திருமணங்கள் இங்கே அதிகமாக நிகழ்கின்றன. கணவனை தேந்தெடுப்பதில் பெண்ணிற்கு முழு அதிகாரம் கொடுக்கப்படுகிறது.

8. Sports In Thailand
image source Muay Thai PROS

பேட்மிட்டன், கால்பந்து ஆகிய போட்டிகள் இங்கு மிகவும் பிரபலமான விளையாட்டுகள். குத்துச்சண்டை போட்டிகளுக்கு இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.  Muay Thai என்ற தற்காப்புக்கலை இங்கு மிகவும் பிரபலம் மற்றும் பாரம்பரிய தற்காப்புக்கலையான  Pencak Silat ம் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.


9. Religion In Thailand

இங்கு வாழும் மக்களில் பெரும்பாலான மக்கள் புத்த மதத்தை பின்பற்றுகின்றனர். 94.4 சதவீத மக்கள் புத்த மதத்தையும், 4.2 சதவீத மக்கள், 1.17 சதவீத மக்கள் கிறிஸ்துவ மதத்தையும் பின்பற்றுகின்றனர். மேலும் 0.03 சதவீதம் பேர் இந்து மதத்தையும், 0.005 சதவீத மக்கள் எந்த மடடுயும் பின்பற்றுவதில்லை.

10. Tourism Of Thailand

image source TTG Asia
image source Bloomberg

இந்த நாட்டின் வருவாயில் 6% சுற்றுலாத்துறையின் மூலம் பெறப்படுகிறது. 2013 ல் தெற்கு ஆசியாவில் உலக அளவில் சுற்றுலாபயணிகள் வருகை தந்த பட்டியலில் தாய்லாந்திற்கு முதலிடம் பிடித்தது. தாய்லாந்தில் நிறைய பிரபலமான சுற்றுலா தளங்கள் உள்ளது. குறிப்பாக டைவிங், அழகான கடற்கரைகள், நூற்றுக்கணக்கான தீவுகள், இரவு விடுதிகள், மலையேற்றம், போன்றவை இங்கு முக்கியமானவை. இங்கு 40,000 ற்கும் மேற்பட்ட புத்த கோவில்கள் உள்ளன. இங்குள்ள பாரம்பரிய மசாஜ் மிகவும் பிரபலம். மேலும் பல கலாச்சார திருவிழாக்கள் இங்கு நடக்கிறது.

image source theculturetrip.com

தாய்லாந்தில் உள்ள Bangkok நகரம் சுற்றுவாசிகள் விரும்பும் ஒரு முக்கியமான நகரம். இங்கு நிறைய ஷாப்பிங் மால்கள், சுற்றுலாவாசிகளுக்கென பிரத்தியேக இரவு நேர கடைகள் உள்ளன. Bangkok ல் விபச்சாரத்திற்கு சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ளது. sex tourism ற்கு பெயர் பெற்றதும் இந்த தாய்லாந்து தான். இதன் மூலமாக மட்டும் 4.5 பில்லியன் அமெரிக்கா டாலர்கள் இங்கு வருமானம் கிடைக்கிறது. இது அந்த நாட்டின் மொத்த வருவாயில் 3% ஆகும்.

ஆண், பெண் பாலின மாற்று அறுவை சிகிச்சைகள் இங்கு அதிகமாக செய்யப்படுகிறது. 2014 ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்த அறுவைசிகிச்சைக்காக மட்டும் உலகில் இருந்து வருடத்திற்கு 2.5 மில்லியன் மக்கள் இங்கு வருகை தருகின்றனர். 1985 முதல் 90 வரை இந்த அழகு சார்ந்த அறுவை சிகிச்சைக்காக இங்கு வருகை தந்த மக்களின் சதவீதம் 5%. ஆனால் தற்போது இது 90% சதவீதமாக உயர்ந்துள்ளது.


Post a Comment

0 Comments