இந்தோனேசியா பற்றிய டாப் 11 சுவாரஸ்ய தகவல்கள்

11 Interesting Facts About Indonesia 

இந்தோனேசியா ஆசியாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடு. உலகத்தின் மிகப்பெரிய தீவு நாடாகவும் அறியப்படுகிறது. 17,000 க்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கியது தான் இந்த இந்தோனேசியா. இந்த நாட்டை பற்றிய சில தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.


pics via agoda.com

1. Language

இங்கு இந்தோனேசின் என்ற மொழி தான் ஆட்சி மொழியாக உள்ளது. மலாய் மொழி தான் இந்த மக்களால் அதிகம் பேசப்படுகிறது. இங்கு வெளிநாட்டினரின் வருகை அதிகமாக இருப்பதால் அரபு, சைனீஸ், டச்சு, ஹிந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலம் என 700 க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகிறது.

2. Population
pics via Coconuts

இங்கு சுமார் 269 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தோனேஷியா 4 ஆவது இடத்தில் உள்ளது. மேலும் உலக அளவில் அதிக முஸ்லிம்கள் வாழக்கூடிய நாடாகவும் உள்ளது. இதில் ஜாவா என்கிற தீவில் தான் அதிகப்படியான மக்கள் வாழ்கின்றனர். நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீக்கத்துக்கும் அதிகமான பேர் இங்கே வசிக்கின்றனர்.

3. Climate
pics via Indonesia Volcano tour

இந்தோனேசியாவின் தட்ப வெப்பம் பற்றி பார்த்தால் மிதமான தட்ப வெப்பமே இங்கு காணப்படுகிறது. கடற்கரை சார்ந்த பகுதிகளில் வெப்பம் சராசரியாக 28 °C ம், மலைகள் சூழ்ந்த பகுதிகளில் சராசரியாக 26 டிகிரி வெப்பமும் நிலவுகிறது. அதிக மலைப்பகுதிகளால் சூழப்பட்ட இடங்களில் வெப்பம் சராசரியாக 23 டிகிரி உணரப்படுகிறது.

4. Food in Indonesia
pics via CNN.com
pics via YouTube

பொதுவாக அரிசி உணவு இங்கு அதிகமாக உட்கொள்ளப்படுகிறது. மீன், இறைச்சி, கோழி போன்ற அசைவ உணவுகளும் காய்கறிகளும் இவர்களுடைய தினசரி உணவாக உள்ளது. மேலும் சூப் வகை உணவுகள் இங்கு மிகவும் பிரபலமாக உள்ளது.

5. Currency Of Indonesia

இங்கு பணத்தை ரூபை ( rupiah )என அழைக்கப்படுகிறது. நம்ம ஊரில் INR என்பது போல் இங்கு  IDR என்ற குறியீட்டால் பணம் குறிப்பிடப்படுகிறது. ஒரு US டாலருக்கு எதிரான ரூபையின் மதிப்பு 14220 ஆக உள்ளது. இந்தியாவுடைய ஒரு ரூபாய் இங்கு 205 ரூபாய்க்கு சமம்.


6. Transport  Of Indonesia

pics via Medium

pics via LatinAmericanStudies.org
pics via The Business Times

இந்தோனேசியாவின் போக்குவரத்து பற்றி பார்த்தால், இங்கு உள்ள அனைத்து பகுதிக்கும் செல்லும் வகையில் பேருந்து வசதிகள் உள்ளது. பேருந்து மற்றும் வேன்கள் இங்கு முதன்மையான போக்குவரத்து அம்சமாக உள்ளது. மேலும் ரயில் போக்குவரத்து வசதிகளும் குறிப்பிட்ட இடங்களை தவிர இங்கு வசதியாக உள்ளது. வெளியூர் வாசிகள் பயணிக்கும் வகையில் நிறைய டாக்ஸிகளும் இங்கு கிடைக்கிறது. விமான போக்குவரத்து சேவைகளும் இங்கு வழங்கப்பட்டு வருகிறது, ஆனால் 40 க்கும் மேற்பட்ட விமான விபத்துகள் இங்கே ஏற்பட்டுள்ளதால், இங்கே விமான போக்குவரத்து கொஞ்சம் அச்சம் தருவதாக உள்ளது.

7. culture of indonesia

pics via Russia Beyond

pics via pyxeraglobal.org

பலதரப்பட்ட மக்கள் இங்கு வாழ்வதால் பல கலாச்சாரங்களின் கலவையை இங்கு நீங்கள் பார்க்க முடியும். இசை, கலை, ஆடை என தனித்துவமான பல அம்சங்களை நாம் இங்கு காண  முடியும். பல வித்தியாசமான இசைக்கருவிகள் இங்கு பயன்படுத்தப்படுகிறது. 3000 க்கும் மேற்பட்ட வித்தியாசமான நடன முறைகள் காணப்படுகிறது. வித்தியாசமான பாரம்பரிய ஆடை கலாச்சாரத்தையும் இங்கு நாம் காண முடியும். திருமணம், இசை நிகழ்ச்சி, மற்றும் தினசரி ஆடை என மாறுபட்ட ஆடை கலாச்சாரம் இங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

8. sports of indonesia
pics via The Jakarta Post

பேட்மிட்டன்,  விளையாட்டுக்கள் இங்கு மிகவும் பிரபலம். இந்தோனேசியாவை சேர்ந்த வீரர்கள் பேட்மிட்டன் போட்டியில் 13 முறை தாமஸ் கோப்பையை கைப்பற்றி உள்ளனர். பார்முலா 1, குத்துச்சண்டை, மற்றும் கூடைப்பந்து விளையாட்டுகளில் இந்நாட்டு வீரர்கள் கலந்து கொண்டு உள்ளனர். Pencak Silat என்பது இந்த நாட்டின் பாரம்பரிய தற்காப்புக்கலையாகும்.

9. religion of indonesia
pics via MPC Journal
pics via tourist attractions in indonesia

இங்கு 87.2 சதவீத முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். அடுத்தபடியாக கிருத்துவர்கள் 8 சதவீதமும், 1.6 சதவீதம் இந்து மக்களும் 0.72 சதவீதம் புத்த மதத்தை பின்பற்றும் மக்களும் இங்கு வசிக்கின்றனர்.

10. Natural Sources

இங்கு கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, காப்பர் மற்றும் தங்கம் போன்ற இயற்கை வளங்கள் தாராளமாக கொட்டிக்கிடக்கிறது. உலக அளவில் இயற்கையாக தங்கம் கிடைக்கும் இடங்களில் இந்தோனேசியா  முக்கியமான ஒன்று.

11. Tourism of indonesia
pics via Indonesia Expat

pics via Touropia
சுற்றுலா செல்ல இந்தோனேசியா ஒரு நல்ல இடமாக அறியப்படுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் நிறைய தீவுகள் இங்கு பிரபலம். குறிப்பாக பாலி தீவு மிகவும் அழகான கடற்கரைக்கும், ஆடம்பர தங்கும் விடுதிகளுக்கு பெயர் போனது. பல வனவிலங்குகளை வாழ்விடமாக விளங்கும் இந்தோனேசியாவில் ஓராங்குட்டான் எனும் அரிய வகை குரங்குகள் அதிகம் காணப்படும்  Tanjung Puting National Park உள்ளது. இந்த வகை குரங்குகள் உலக அளவில் இங்கு தான் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றன. மேலும் மிகப்பெரிய பல்லி இனமான கொமோடோவிற்கும் இந்தோனேசியா தான் தாய் வீடு. இங்கே உள்ள Komodo National Park, UNESCO அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் இன்னும் செய்யப்பட்டு இருக்கும் எரிமலையான Mount Merapi, எரிமலை வெடிப்பால் உருவான தோபா ஏரி, கயாக் எனப்படும் சொகுசான படகு சவாரி என பல அசாதாரணமான சுற்றுலா பகுதிகள் இதில் அடக்கம்.
Post a Comment

0 Comments