10 Interesting Facts About Zimbabwe
தெற்கு ஆப்பிரிக்க கண்டத்தில் ஜம்பேசி ( Zambezi ) மற்றும் லிம்போபோ ( Limpopo ) ஆறுகளுக்கு நடுவே அமைந்துள்ள ஒரு நாடு தான் ஜிம்பாவே. இதனுடைய எல்லை நாடுகளாக தென் ஆப்ரிக்கா, போஸ்த்வானா, ஜாம்பியா உள்ளது. பல்வேறு கலாச்சாரங்களும், இயற்கை அழகும் கொண்ட ஜிம்பாவே நாட்டை பற்றிய சில சுவாரசியமான விஷயங்களை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.![]() |
image source Zimbabwe Investor |
1. Language
அதிகாரப்பூர்வமான ஆட்சி மொழியாக இங்கு 16 மொழிகள் அறியப்படுகிறது. நேபிளே என்கிற மொழி இங்கு பரவலாக பேசக்கூடிய மொழியாக உள்ளது. சோனா என்கிற மொழி குறிப்பிட்ட பழங்குடி மக்களுடைய முதன்மையான மொழியாக உள்ளது. மேலும் ஆங்கிலமும் இங்கு அதிகமாக பேசப்படுகிறது.
2. Population in Zimbabwe
![]() |
image source South Africa Today |
2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17.30 மில்லியன் மக்கள் இங்கு வாழ்கின்றனர். அதிக மக்கள் தொகை கொண்ட உலக நாடுகளில் ஜிம்பாவே 68 வது இடத்தில் உள்ளது. இந்த நாட்டின் தலைநகரான Harare ல் அதிகபட்சமாக 14.9 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
3. Climate
![]() |
image source BORGEN Magazine |
இங்கு நிலவும் தட்பவெப்பம் பற்றி பார்த்தால் கோடை காலத்தில் சராசரியாக 32 முதல் 38° C வெப்பம் நிலவுகிறது. ஜிம்பாவேயின் உயர்ந்த இடத்தில் அமைந்துள்ள பகுதிகளில் கோடைகாலத்தில் வெப்பம் சராசரியாக 24° C ம், குறைந்தபட்சம் 12–13° C ம் காணப்படுகிறது. தாழ்ந்த நிலையில் அமைந்த பகுதிகளை காட்டிலும் உயர்ந்த பகுதிகளில் மலையளவு மற்றும் அதிக குளிர் காணப்படுகிறது.
4. Food in Zimbabwe
![]() |
image source www.zwelis.com |
![]() |
image source www.zwelis.com |
மக்காச்சோள கஞ்சியுடன் இறைச்சி உணவு சாப்பிடுவது இங்கு பிரதான உணவு. தீக்கோழி மற்றும் முதலை வாலில் செய்யப்படும் ஒரு வகை உணவு இங்கு பிரபலம். இந்த மக்களின் காலை நேர பாரம்பரிய உணவாக அறியப்படுவது வேர்க்கடலை வெண்ணையோடு , சுவையான கஞ்சியும் மற்றும் பாலும். மேலும் பப்பாளியில் செய்யப்படும் Mapopo Candy என்கிற உணவு இங்கே பிரபலம். இறைச்சி உணவு என் பார்க்கும் போது ஆடு, மாடு, மான் போன்ற உணவுகளும் பூச்சி உணவுகளும் இந்த மக்களால் விரும்பி சாப்பிடப்படுகிறது.
5. Currency Of Zimbabwe
ஜிம்பாவேயில் பணத்தை டாலர் என அழைக்கிறார்கள். ZWD என்ற குறியீட்டால் இந்த நாட்டு பணம் குறிப்பிடப்படுகிறது. ஜிம்பாவேயில் ஒரு யுஎஸ் டாலரின் மதிப்பு 361.9. நமது நாட்டின் ஒரு ரூபாய் இந்த நாட்டில் 5.21 ரூபாய்க்கு சமம்.
6. Transport Of Zimbabwe
![]() |
image source Steppes in Sync - WordPress.com |
ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து இங்குள்ள மக்களின் முக்கிய போக்குவரத்து அம்சமாக உள்ளது. முக்கியமான நகரங்கள் மற்றும் சுற்றுலா தளங்களை அடையும் வகையில் ரயில் போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து செலவை பார்க்கும் போது இங்கு ரயில் போக்குவரத்து மிகவும் குறைந்த செலவில் இருக்கும். இங்கு சர்வதேச விமான நிலையங்கள் மூன்று இடத்தில் உள்ளது. இந்த மூன்று விமான நிலையங்களும் ஜிம்பாவே தலைநகரான ஹரார், புலவயோ ( Bulawayo ) மற்றும் விக்டோரியா அருவிக்கு அருகிலேயும் அமைந்துள்ளது.
7. culture of Zimbabwe
![]() |
image source The Asian Age |
![]() |
image source WorldAtlas.com |
கலாச்சாரம் என பார்க்கும் போது இந்த நாட்டில் பல கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கைகள் நடைமுறையில் உள்ளது. இதில் ஒன்று தான் சோனா இன மக்கள். இந்த நாட்டில் வாழும் மிகப்பெரிய இனமும் இவர்கள் தான். இந்த இன மக்கள் நிறைய சிற்பங்களையும், சிலைகளையும் உருவாக்கி உள்ளனர். சோளத்தில் செய்யப்படும் ஓர் உணவு இங்கு பிரபலம். சோளத்தை தூளாக்கி அதை நீர் சேர்த்து பசை போல செய்து அதில் நம்ம ஊர் சாதம் மாதிரி இங்க தயார் பன்றாங்க
பெரியவர்களால் பார்த்து செய்யப்படும் திருமணங்கள் இங்கு மிகவும் குறைவு. திருமணம் ஆகி விட்டால் பெண்ணுக்கு சொத்தில் உரிமை கோர அனுமதிக்கப்படுகின்றனர். நம்ம நாட்டை போலவே இங்கு உள்ள பெண்கள் திருமத்திற்கு பிறகு கணவன் வீட்டுக்கு போகிறார்கள். ஆனால் இங்கே உள்ள டோங்கா ( Tonga ) என்ற இன மக்களின் சட்டப்படி திருமணத்திற்கு பிறகு ஆண்கள் பெண் வீட்டிற்கு செல்ல வேண்டும்.
இங்கே நகர்ப்புறங்களில் உள்ள வீடுகள் பெரும்பாலும் கணவன், மனைவி மற்றும் குழந்தை மட்டும் வசிக்கும் வகையில் சிறிய அளவில் கட்டப்படுகிறது.
8. sports of Zimbabwe
கால்பந்து இங்கு மிகவும் பிரபலமான விளையாட்டாக அறியப்படுகிறது. மேலும் கிரிக்கெட், ரஃபி, ஹாக்கி போன்ற விளையாட்டுகளும் பிரபலமாக உள்ளது. 1980 ல் முதன் முதலாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஜிம்பாவே இது வரை 8 பதக்கங்களை வென்றுள்ளது.
9. religion of Zimbabwe
![]() |
image source The Maravi Post |
இங்கு வாழும் மக்களில் 84 சதவீதம் பேர் கிறித்துவர்கள், 4.5 சதவீதம் பேர் பாரம்பரிய மதங்களை பின்பற்றுவார்கள். 1 சதவீதம் பேர் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவார்கள் மேலும் 10.2 சதவீதம் பேர் எந்த மதத்தையும் பின்பற்றாதவர்கள்.
10. Tourism of Zimbabwe
![]() |
image source wildandisle.com |
![]() |
image source Harare Post |
இங்கு உலக அதிசயங்களில் ஒன்றாக சொல்லப்படும் விக்டோரியா அருவி உள்ளது. இது மிகவும் பிரபாலமான நயாகரா நீர்வீழ்ச்சியை விட இரண்டு மடங்கு உயரம். உலக அளவில் மிகவும் பிரபலமான சுற்றுலா தளங்களில் இதுவும் ஒன்று. இங்கு நிறைய நீர் சார்ந்த விளையாட்டுகள், bungee jumping எனப்படும் மிகவும் உயரத்திலிருந்து கயிறு கட்டி குதிக்கும் விளையாட்டு போன்ற சிறப்பு அம்சங்கள் உள்ளது. Zambia ல் அமைந்துள்ள கரிபா ஏரி மிகவும் பிரபலம். மனிதனால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஏரி இது தான். Hwange National Park ஜிம்பாவேயில் அமைந்துள்ள ஒரு பிரபலமான விலங்கியல் பூங்கா. இங்கு மிகப்பெரிய யானைகள், சிங்கங்கள், கழுத்தை புலி போன்ற விலங்குகளை அதிகம் காண முடியும். மேலும் பல இயற்கை எழில் சூழ்ந்த இடங்கள் இங்கு நிறைய உள்ளது.
0 Comments