இராணுவமே இல்லாத உலகின் டாப் 10 நாடுகள்

Top 10 Countries Without Army Forces

ஒரு நாட்டுடைய சக்தி என்பதை அந்த நாட்டுடைய பொருளாதாரம், அரசியல் பலம், ராணுவம் போன்றவற்றை பொறுத்து நாம் கணித்து விடலாம். அதிலும் ராணுவம் என்பது ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு முக்கியமான ஒன்று. ஒரு நாட்டின் ராணுவ பலத்தை பொறுத்தே பிற நாடுகள் இதை சீண்டலாமா வேண்டாமா என முடிவெடுக்கின்றனர். ஆனால் சில நாடுகள் எந்தவொரு ராணுவ கட்டமைப்பும் இல்லாமல் இருந்து வருகிறது. அந்த நாடுகளைப்பற்றி இந்த பதிவில் காணலாம்.

1. Costa Rica

image source CentralAmerica.com

Costa Rica சென்ட்ரல் அமெரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடு. Article 12 என்ற அரசியலமைப்பின் படி 1949 ல் இருந்து இங்கு ராணுவத்தடை உள்ளது. குறைந்த எண்ணிக்கையை கொண்ட மிலிட்டரி அணியே இங்கு உள்ளது. மற்றும் சிறிய போலீஸ் படைகள் உள்ளது.

2. Iceland

image source National Post

1869 ல் இருந்து ஐஸ்லாந்தில் நிரந்தரமான ஒரு ராணுவம் கிடையாது. இருந்தும் பாதுகாப்பு அமைப்பான NATO ல் ஒரு உறுப்பினராக உள்ளது. பாதுகாப்பிற்காக அமெரிக்காவுடன் ஒரு உடன்படிக்கை போடப்பட்டுள்ளது. 1950 ல் இருந்து அமெரிக்கா ஐஸ்லாந்திற்கு ராணுவ பாதுகாப்பு கொடுத்து வருகிறது.

3. Monaco

image source Stars and Stripes

 மொனாக்கோ மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள ஒரு நாடு. இந்த நாட்டிற்கு என எந்தவொரு வலுவான ராணுவப்படையும் கிடையாது. பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு மேற்பார்வையில் இந்த நாடு உள்ளது. இவர்களுக்காக இரண்டு சிறிய ராணுவப்படைகளை பிரான்சு ஒதுக்கியுள்ளது. சிறிய படைகளாக இருந்தாலும் சிறந்த பயிற்சி இவர்களுக்கு அளிக்கப்படுகிறது. மொனாக்கோவின் போலீஸ் படைகள் உள்நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்திக்கொள்கிறது.

4. Vanuatu

image source Navy Daily - Royal Australian Navy

தெற்கு பசுபிக் கடலுக்கு அருகில் அமைந்துள்ள நாடு தான் இந்த வணாட்டு ( Vanuatu ). இந்த நாட்டிற்கு குறிப்பிடும்படியான ராணுவப்படை எதுவும் கிடையாது. உள்நாட்டுப்பிரச்னைகளை இங்குள்ள போலீஸ் படைகள் கவனித்துக்கொள்கிறது. இந்த படை இங்கு Vanuatu Mobile Force என அழைக்கப்படுகிறது. இந்த படையில் ஏறத்தாழ 300 ஆண், பெண் காவலர்கள் பணியில் உள்ளனர். மேலும் சிறந்த பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை கையாள்கின்றனர்.

5. Panama
image source US Embassy in Panama

சென்ட்ரல் அமெரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடு தான் Panama. 1990 ல் இங்கு ராணுவ அமைப்பு முற்றிலுமாக கைவிடப்பட்டது. பனாமாவில் தேசிய பாதுகாப்பு படையும், போலீஸ் படையும் இணைந்து நாட்டின் பாதுகாப்பிற்காக செயல்படுகிறது. மேலும் இவர்கள் நாட்டின் எல்லைப்பகுதியையும் பாதுகாக்கின்றனர்.

6. Mauritius
image source govmu.org

இந்திய பெருங்கடலுக்கு  அருகில் அமைந்துள்ள ஒரு நாடு மொரிசியஸ். 1968 ல் இருந்தே இந்த நாட்டிற்கு நிலையான ஒரு ராணுவம் கிடையாது. 10,000 பேர் கொண்ட போலீஸ் படை இந்த நாட்டை பாதுகாக்கிறது. இதில் 8000 காவலர்கள் தேசிய பாதுகாப்பையும், 1500 பேர் சிறப்பு படையாகவும் செயல்படுகின்றனர். 500 பேர் கடற்கரை பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


7. Marshall Islands
image source af.mil

இது அமெரிக்காவில் உள்ள ஒரு தீவு நாடாகவும். ஆரம்பம் முதலே இந்த நாட்டில் போலீஸ் துறை மட்டுமே செயல்படுகிறது. உள்நாட்டு பாதுகாப்புக்காக இவர்கள் கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்துகின்றனர். மேலும் கடற்கரையை பாதுகாக்க கண்காணிப்பு படகுகள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த தீவு யுனைடட் ஸ்டேட் பாதுகாப்பின் கீழ் உள்ளது

8. Dominica
image source Dominica News Online

Dominica மேற்கு இந்திய தீவுகளில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு. 1981 முதல் இந்த நாட்டிற்கு நிலையான ராணுவம் கிடையாது. இந்த நாட்டின் பாதுகாப்பு Regional Security System நாடி உள்ளது. இந்த திட்டம் சர்வதேச அளவில் கிழக்கு கரீபியனுடன் போடப்பட்ட பாதுகாப்பு உடன்படிக்கை ஆகும்.

9. Saint Lucia
image source DVIDS

கிழக்கு கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு நாடு தான் செயின்ட் லூசியா. எந்தவொரு ராணுவ பலமும் இல்லாத இந்த நாடு 116 பேர்களைக்கொண்ட இரண்டு காவல் படையாக பிரிக்கப்பட்டு நாட்டின் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஸ்பெஷல் யூனிட்டும், கடற்கரை காவல் படையும் உள்நாட்டு பாதுகாப்பை உறுதிபடுத்துகிறது. நாட்டின் பாதுகாப்பிற்கு Regional Security System பொறுப்பேற்றுள்ளது.

10. Kiribati
image source US Navy

சென்ட்ரல் பசிபிக் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய பகுதி தான் இந்த Kiribati. போலீஸ் படை மட்டுமே இங்கு செயல்படுகிறது. பாதுகாப்பிற்காக சிறிய ஆயுதங்களும், கேமராக்களும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் ரோந்து பணிகளுக்காக படகுகள் பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பிற்காக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments