வரலாற்றில் இடம்பெற்ற டாப் 10 புகைப்படங்கள் மற்றும் அவற்றை படம்பிடித்த கேமராக்கள்

Top 10 Historic Photos and Captured Camera

புகைப்படம் என்பதே நமது கடந்த காலத்தை நினைவுபடுத்தும் ஒரு பொக்கிஷம் என கூறலாம். சில புகைப்படங்கள் 1000 வார்த்தைகளை பேசும், சில புகைப்படங்கள் நம் சரித்திரத்தை நியாபகப்படுத்தும். அப்படி சரித்திரத்தில் இடம் பெற்ற, எவராலும் அவ்வளவு எளிதாக மறந்து விடாத சில புகழ் பெற்ற புகைப்படங்களை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

#1   9/11 Attacks

image source graphis.com
image source Photo Jottings
2001 ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் தீவிரவாத தாக்குதலில் தகர்க்கப்பட்டது. அந்த நேரத்தில் அங்கிருந்த கனடாவை சேர்ந்த ஓர் புகைப்படக்காரரான Lyle Owerko சில புகைப்படங்கள் எடுத்திருந்தார். அந்த புகைப்படங்கள் வரலாற்றை நினைவு கூறும் ஓர் புகைப்படமாக மாறும் என்று அப்போது அவருக்கு தெரியாது. அந்த புகைப்படத்தை எடுக்க அவர் பயன்படுத்திய கேமரா Fuji 645zi.

#2 "Burning Monk" By Malcolm Browne

image source All That's Interesting
image source Wikipedia

வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஒரு முக்கியமான புகைப்படம் இந்த "Burning Monk" எனப்படும் புத்த துறவி தனக்குத்தானே தீ வைத்துக்கொண்ட புகைப்படம். பாட புத்தகங்களில் கூட இப்புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அந்த துறவியின் பெயர் திக் குவாங் டிக் ( Thích Quảng Đức ) ஜூன் 11, 1963ல் அரசால் புத்த துறவிகள் துன்புறுத்தப்பட்டதற்கு எதிராக இந்த துறவி தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டார். இதை Malcolm Browne என்னும் புகைப்படக்கலைஞர்  புகைப்படம் பிடித்திருந்தார். இந்த கலைஞர் தற்போது இறந்து விட்டாலும் இவரின் புகைப்படம் இன்று வரை வாழ்ந்து வருகிறது.

அப்போது அவர் பயன்படுத்திய காமிரா ஜப்பானில் தயாரிக்கப்பட்ட Petri  என்னும் கேமரா.

#3 Afghan Girl
image source Wikipedia
image source Amazon.com

1984 ல் Steve McCurry என்னும் புகைப்படக்கலைஞர் ஆப்கானை சேர்ந்த ஒரு அகதிப்பெண்ணை புகைப்படம் எடுத்திருந்தார். 1985 ல் நேஷனல் ஜியோகிராஃபி சேனலின் ஒரு நிகழ்ச்சியில் இந்த புகைப்படம் காட்டப்பட்டது. அந்த புகைப்படம் அங்கு வாழும் மக்களின் அவல நிலையைக்காட்டியது. அதுவரையிலும் அந்த புகைப்படத்தில் இருந்த பெண்ணை பற்றி யாருக்கும் தெரியவில்லை. பிறகு 2002 ல் அந்த பெண் அடையாளம் காணப்பட்டாள். அந்த பெண்ணின் பெயர் Sharbat Gula. ஆப்கானை சேர்ந்த இந்த பெண்குழந்தை பாகிஸ்தானில் உள்ள ஒரு அகதிகள் முகாமில் இருக்கும்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது கன்டுபிடிக்கப்பட்டது.

இந்த புகைப்படத்தை எடுக்க அந்த புகைப்பட கலைஞர் பயன்படுத்திய கேமரா Nikon Fm2.

#4 Fire accident Collapse

source image Rare Historical Photos
image source Wikipedia

1975 ல் போஸ்டன் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிக்கொண்ட 19 வயதான Diana Bryant மற்றும் அவருடைய இரண்டு வயது குழந்தையும் 5 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்தனர். தீயணைப்பு வண்டியின் ஏணியை திருப்பும் போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக பிறகு தெரியவந்தது.

Nikon F கேமரா மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

#5 Face Of Vietnam War

image source CBC.ca
image source Fat Llama

அமெரிக்காவை சேர்ந்த ஒரு புகைப்படக்கலைஞர் Nick Ut. இவர் 1972 ஆம் ஆண்டு நடந்த வியட்நாம் போரின் பல அவலங்களை புகைப்படமாக எடுத்துக்காட்டினார். அதில் ஒரு புகைப்படத்தில் 9 வயதுடைய ஒரு சிறிய பெண் குழந்தை தீக்காயங்களுடன் நிர்வாணமாக கதறியபடி ஓடிவரும் காட்சி பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.போரின் கோர முகத்தை காட்டும் வகையில் இந்த படம் இருந்தது. சிறந்த ஊடக துறைக்கு வழங்கும் Pulitzer Prize விருது இப்புகைப்படத்திற்காக Nick Ut க்கு வழங்கப்பட்டது.

Leica M3 என்ற கேமரா மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

#6 Guerrilla Fighter "Che Guevara"

image source Wikipedia
image source 35mmc

    புரட்சி வீரரான சேகுவேராவின் இந்த புகைப்படம் மிகவும் பிரபலம்.  Alberto Korda என்பவரால் மார்ச் 5, 1960 ஆம் ஆண்டு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. சேகுவேராவின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளுக்கும், அவரது மரணத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட ஒருபுகைப்படம் இதுவாகும். நிறைய மக்களை கவர்ந்த சேகுவேராவின் இளமைக்காலத்தை நினைவுபடுத்தும் விதமாக இந்த புகைப்படம் உள்ளது. இந்த புகைப்படத்தை எடுத்த Alberto Korda, அந்த நிமிடத்தை பற்றி கூறும்போது அவர் யாருக்கும் அவ்வளவு எளிதாக மசிய மாட்டார், அதேவேளை இந்த புகைப்படம் அவரின் கோபத்தையும், வலியையும் வெளிப்படுத்தும் விதமாக உள்ளது என ஆல்பர்டோ கூறியுள்ளார்.

இந்த புகைப்படத்தை எடுக்க ஆல்பர்டோ பயன்படுத்திய கேமரா Leica M2.

#7 Japanese politician assassin

image source Rare Historical Photos
image source Wikipedia

1960, அக்டோபர் 12 ஆம் தேதி ஜப்பானை சேர்ந்த அரசியல் பிரமுகர் Inejiro Asanuma பொதுமேடையிலேயே Otoya Yamaguchi என்ற 17 வயது இளைனாரால் படுகொலை செய்யப்பட்டார். மேடைப்பேச்சு நடைபெறும் சமயத்தில் கத்தி ஒன்றை மறைத்து வைத்திருந்த கொலையாளி யாரும் எதிர்பாராத நிலையில் மேடையில் ஏறி அரசியல்வாதியின் வயிற்றில் சரமாரியாக குத்தினான். இதை ஜப்பானை சேர்ந்த NHK  என்ற டிவி நிறுவனம் அப்படியே படம் பிடித்தது. மேலும் ஆசானுமாவின் இந்த படுகொலையை பல லட்சம் மக்கள் டிவியில் பார்த்தனர். இதை புகைப்படமாக பதிவு செய்த Yasushi Nagao அந்த ஆண்டிற்கான Pulitzer Prize விருதை வென்றார்.

Speed Graphic கேமராவைக்கொண்டு இதை அவர் படம்பிடித்துள்ளார்.

#8 Tank Man

image source NEWSREP
image source eBay

டேங்க் மேன் என அழைக்கப்படும் இந்த அடையாளம் தெரியாத சைனீஸ் நபர் வரலாற்று சிறப்பு வாய்ந்த புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளார். ஜூன் 5, 1989ல் சீனாவின் டியானமன் ஸ்கொயர் ( Tiananmen Square ) பகுதியில் போராட்டக்கக்காரர்களை ஒடுக்குவதற்காக சீனாவின் பீரங்கிகள் முன்னேறி வருகிறது. அப்போது அடையாளம் தெரியாத ஒரு நபர் பீரங்கியின் முன் தைரியமாக வந்து நின்றார். லாவகமாக முன்னேறிய போதிலும் அந்த நபர் திரும்பவும் பீரங்கியின் முன்னால் நின்று அவர்களை முன்னேற விடாமல் தடுத்தார். இந்த நிகழ்வு புகைப்படமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் இந்த நிகழ்வு அதிக மக்களால் பேசப்பட்டது.

இந்த நிகழ்வு படமாக்கப்பட்ட கேமரா Nikon Fe2.


#9  Flag Raising On Iwo Jima

image source National Geographic
image source Wikipedia

இந்த புகைப்படம் 1945 ல் எடுக்கப்பட்ட ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த புகைப்படம். இந்த புகைப்படத்தை எடுத்தவர் Joe Rosenthal எனப்படும் புகைப்பட கலைஞர். பிப்ரவரி 23, 1945ல் 6 அமெரிக்கா படைவீரர்கள் இரண்டாம் உலகப்போரில் ஈவோ ஜிமா என்ற இடத்தில் உள்ள மலைப்பகுதியில் தங்களின் வெற்றியை அடையாளப்படுத்தும் விதமாக தங்களின் கொடியை அங்கு நிலைநாட்டினர். இந்த புகைப்படத்தில் உள்ள 3 பேர் இந்த சம்பவம் நிகழ்ந்த சில நாட்களிலேயே கொல்லப்பட்டனர். 3 பேர் இதில் உயிர் பிழைத்தனர்.

இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த புகைப்படம் Speed Graphic கேமராவின் மூலம் படமாக்கப்பட்டது.#10 "Earth rise" Capture From Moon

image source The New York Times
image source Gizmodo

நிலவின் மேற்பரப்பில் இருந்து நமது பூமி உதயமாகும் அசாதாரண புகைப்படம் ஒன்று விண்வெளி வீரர் William Anders ஆல் புகைப்படமாக எடுக்கப்பட்டது. இதை அவர் அப்பல்லோ 8 என்ற பயணத்தில் டிசம்பர் 24, 1968ல் படம்பிடித்தார். இதை படம்பிடிக்க அதிநவீன முறையில் தயார்செய்யப்பட்ட Hasselblad 500 EL என்ற கேமரா பயன்படுத்தப்பட்டது. உலக அளவில் புகழ்பெற்ற புகைப்படங்களில் இதுவும் ஒன்று.

Post a Comment

0 Comments