10 Amazing Facts About Iceland
ஐஸ்லாந்து, வடக்கு அட்லாண்டிக்கில் அமைந்துள்ள ஒரு அழகான தீவு நாடு. செயல்பாட்டில் உள்ள நிறைய எரிமலைகளுக்கும், மலைகளுக்கும் மற்றும் பனிப்பாறைகளுக்கும் இந்த நாடு மிகவும் பிரபலம். இந்த நாட்டைப்பறிய சில பயனுள்ள தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.![]() |
image source Travel Blog |
1. language
இந்தநாட்டின் அதிகாரப்பூர்வமான ஆட்சி மொழி ஐஸ்லாண்டிக் என்ற மொழி. மேலும் இலக்கணத்தின் இந்த மொழி கற்றுக்கொள்ள மிகவும் கடினமான மொழியாக அறியப்படுகிறது. இரண்டாவது மொழியாக இங்கு ஆங்கிலம் அதிக அளவில் பேசப்படுகிறது. ஆங்கிலம் பெரும்பாலும் இங்குள்ள மக்களால் சரளமாக பேசப்படுகிறது. மேலும் இங்குள்ள மக்கள் பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் மற்றும் தானிஷ் போன்ற மொழிகளையும் தெரிந்து வைத்துள்ளனர்.
2. Population In Iceland
![]() |
image source Iceland Review |
பொதுவாக ஐஸ்லாந்து குறைந்த மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு. 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இங்கே ஏறத்தாழ 3,50,000 மக்கள் வாழ்கின்றனர். இதில் 91 சதவீத மக்கள் இந்த நாட்டு குடிமக்கள் இதர மக்கள் வெளிநாட்டில் இருந்து வந்து வாழும் மக்கள். இந்த நாட்டின் மொத மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் இந்நாட்டின் தலைநகரான Reykjavík ரேக்ஜாவிக்கில் வசிக்கிறார்கள்.
3. Climate
![]() |
image source icelandmonitor.mbl.is |
இந்த தீவின் தட்பவெப்ப நிலை இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. இந்த தீவின் மத்தியில் அமைந்துள்ள பகுதிகள் ( Central Highlands ) இந்த நாட்டின் மிகவும் குளிர்ந்த பகுதியாக உள்ளது. தாழ்ந்த இடத்தில அமைந்துள்ள பகுதிகள் பெறும்பாலும் வறண்ட தட்பவெப்ப நிலையை கொண்டுள்ளது. குளிர்காலத்தில் இங்கு பனிப்பொழிவு ரொம்ப இயல்பான ஒன்று. இங்கு பதிவான அதிகபட்ச வெப்பம் 30.5 °C மற்றும் குறைந்த பபட்சம் −38 °C.
4. Food In Iceland
image source icelandmonitor.mbl.is |
![]() |
image source BookMundi |
![]() |
image source Vitinn.is |
ஐஸ்லாந்தின் பாரம்பரிய உணவாக அறியப்படுவது ( Hakarl ) எனப்படும் கிரீன்லாந்து சுராவில் செய்யப்படும் ஒரு உணவு. ஐஸ்லாந்திற்கு என்று குறிப்பிடும்படியான பெரிய உணவு வட்டாரம் கிடையாது. சுற்றிலும் கடல் இருப்பதால் கடல் சார்ந்த உணவுகளே இங்கு அதிகம். குறிப்பிடும்படியான உணவு என்றால் உலர்ந்த மீன்கள், உருளைக்கிழங்கு, பிரட் மற்றும் ஆடு. பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இங்கு உணவுகளின் விலை சற்று அதிகம். இதற்கு காரணம் இங்கு இறக்குமதி செய்யப்படும் உணவுக்கு 14 சதவீதம் வரிவிதிப்பு நடைமுறையில் உள்ளது.
5. Currency Of Iceland
ஐஸ்லாந்தில் பணத்தை க்ரோனா என அழைக்கிறார்கள். இங்கு பணத்தின் குறியீடு (ISK). ஐஸ்லாந்தின் க்ரோனவிற்கு எதிரான யுஎஸ் டாலரின் மதிப்பு 125.91. இந்தியாவின் ஒரு ரூபாய் இங்கு 1.84 க்ரோனாவிற்கு சமம்.
6. Transport In Iceland
![]() |
image source Finding the Universe |
இங்குள்ள மக்களின் முக்கிய போக்குவரத்து அம்சமாக கார் உள்ளது. உலக அளவில் பார்க்கும் போது நாட்டின் மக்கள் தொகைக்கு நிகராக அதிக அளவில் கார் பயன்படுத்துவதில் உலக அளவில் ஐஸ்லாந்திற்கு 4 ஆவது இடம். இங்கு சராசரியாக 1000 நபர்களுக்கு 820 கார்கள் வீதம் பயன்பாட்டில் உள்ளது. Keflavík International Airport (KEF) விமான நிலையம் தான் இந்த நாட்டில் உள்ள மிகப்பெரிய விமான நிலையம். சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் இங்கிருந்து வழங்கப்படுகிறது. இதற்கு அடுத்து இதன் தலைநகரில் அமைந்துள்ள Reykjavík Airport (RKV) தான் இரண்டாவது பெரிய விமான நிலையம்.
7. Culture
![]() |
image source Travel.See.Love! |
இந்த நாட்டு கலாச்சாரம் அங்கு வாழ்ந்த முன்னோர்களால் உருவாக்கப்பட்டது. இங்குள்ள மக்கள் குடும்ப உறவுகளுடன் நெருக்கமாக வாழ்கின்றனர். இவர்களது வாழ்க்கைக்கும் இயற்ககைக்கும் ஓர் நெருங்கிய பந்தம் உள்ளது. சரியான சமுதாய இணக்கம் காரணமாக இங்குள்ள மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வாக உள்ளது.இங்குள்ள மக்கள் இயற்கை சூழலை காப்பதில் முன்னுரிமை கொடுக்கின்றனர். ஐஸ்லாந்து மக்கள் இசைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். ஆர்கெஸ்ட்ரா சிம்பொனி இசை நிகழ்ச்சி இங்கு வாய்ந்தது. பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளில் 60 க்கும் மேற்பட்ட வித்தியாசமான இசைகள் இசைக்கப்படுகிறது.
8. Sports In Iceland
![]() |
image source Hero Sports Ghana |
கால்பந்து, கோல்ப், கூடைப்பந்து, டென்னிஸ், நீச்சல் விளையாட்டு மற்றும் செஸ் போன்றவை இந்த நாட்டு மக்களால் விரும்பி விளையாடப்படும் பிரபல விளையாட்டுகள். இருந்தும் இந்த நாட்டு மக்களால் மிகவும் நேசிக்கப்படுவது Handball எனப்படும் கைப்பந்து விளையாட்டு. 1948 ல் ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட ஐஸ்லாந்து இது வரை நான்கு ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளது.
9. Religion In Iceland
![]() |
image source Iceland Mag |
ஐஸ்லாந்தில் 78.78 சதவீத மக்கள் கிறிஸ்துவத்தை பின்பற்றுகின்றனர். புத்தம், இஸ்லாம் உட்பட இதர மதங்கள் 14.52 சதவீதம் பின்பற்றப்படுகிறது. 6.69 சதவீத மக்கள் எந்த மதத்தையும் பின்பற்றுவதில்லை.
10. Tourism Of Iceland
![]() |
image source Iceland Mag |
![]() |
image source Guide to Iceland |
சுற்றுலாத்துறை இங்கு கடந்த 15 வருடங்களில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது. இந்நாட்டின் மொத வருவாயில் 10 சதவீதம் சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கிறது. தலைநகரான ரேக்ஜாவிக்கில் ( Reykjavik ) இருந்து படகில் பயணம் செய்து திமிங்கலத்தை நேரடியாக பார்த்து ரசிக்கலாம், தழைநாரிலிருந்து 45 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ளது ப்ளூ லகூன் எனப்படும் வெப்பமான ஏரி. பார்க்க நீல நிறத்தில் மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கிறது. இந்த வெப்ப நீரூற்றின் வெப்பநிலை 37 முதல் 39 செல்சியஸ் வரை இருக்கும். இந்த மருத்துவ குணம் நிறைந்த நீரில் குளிப்பது உடல்நலனுக்கு ஆரோக்யம் தருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் Spectacular Geysers எனப்படும் 30 மீட்டர் உயரத்திற்கு தண்ணீரை பீய்ச்சியடிக்கும் நீரூற்று, Askja Caldera எனப்படும் சூடான ஏரி, அழகான நீர்வீழ்ச்சிகள், எரிமலைகள் என பல சுற்றுலா தளங்கள் இங்கே உள்ளது.
0 Comments