20 Interesting Facts About Las Vegas
Las Vegas அமெரிக்காவில் அமைந்துள்ள ஒரு பிரபலமான நகரம். பொதுவாக Vegas என அழைக்கப்படுகிறது. பொழுதுபோக்கு, கேளிக்கை போன்ற விஷயங்களுக்காக இந்த நகரம் மிகவும் பிரபலம். சூதாட்டம் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வரும் முதல் இடம் இந்த லாஸ் வேகாஸ் தான். ஒரே நாளில் பணக்காரன் ஆன நிறைய கதைகள் இங்கே நடந்துள்ளது. இந்த நகரத்தை பற்றிய சில சுவாரசிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
![]() |
image source TripSavvy |
1. புகழ்பெற்ற ஹோட்டல்களுக்கு இந்த நகரம் மிகவும் பிரபலம். உலகின் மிகப்பெரிய 20 ஹோட்டல்களில் 14 ஹோட்டல்கள் Las Vegas ல் அமைந்துள்ளது.
![]() |
image source Lavish Vegas |
2. உலகம் முழுவதும் காதல் ஜோடிகள் தங்களது திருமணம் இங்கு தான் நடக்க வேண்டும் என்று ஒரு கனவு வைத்திருப்பார்கள். இந்த வகையில் உலகின் அதிக ஜோடிகள் தேர்ந்தெடுக்கும் ஒரு இடமாக Las Vegas உள்ளது. வருடந்தோறும் இங்கு திருமணம் செய்ய வரும் ஜோடிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது.
![]() |
image source Little Vegas Chapel |
3. The Las Vegas Strip என்பது இந்த நகரத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு இடம். இங்கு தான் மிகப்பெரிய ஹோட்டல்கள், கேசினோ, சூதாட்ட விடுதிகள் போன்றவை அமைந்துள்ளது. இங்குள்ள ஹோட்டல்களின் ஒளி வெளிச்சம் எந்த அளவிற்கு உள்ளது தெரியுமா. விண்வெளியில் இருந்து பார்க்கும்போதே இந்த இடம் பிரகாசமாக தெரிகிறதாம். brightest place on Earth என்றும் இந்த இடம் அழைக்கப்படுகிறது.
4. இங்கு நடக்கும் குற்றங்கள், சூதாட்டம்,மற்றும் விபச்சாரம் போன்றவற்றால் இந்த நகரத்திற்கு “Sin City” என்று செல்லமாக அழைக்கப்படுகிறது.
![]() |
image source The Independent |
![]() |
image source Las Vegas Review-Journal |
5. இந்த நகரத்தில் சூதாட்டம் எந்த அளவிற்கு பிரபலம் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரம் எனலாம். 1980 ஆம் ஆண்டு இங்குள்ள மருத்துவமனையில் இருந்து சில பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காரணம், இவர்கள் இங்கு தங்கியுள்ள நோயாளிகள் மீது பந்தயம் கட்டியுள்ளனர். அதாவது அந்த நோயாளி சவாரா, மாட்டாரா என்று. இந்த போட்டியில் ஜெயிப்பதற்காக ஒரு நர்ஸ் ஒரு நோயாளியை போட்டே தள்ளிவிட்டார். இதற்காக அந்த பணியாளர்களை அந்த மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்து விட்டார்கள்.
6. இங்குள்ள MGM Grand Hotel முன்பு 50 டன் எடையில் வெள்ளியிலேயே ஒரு சிங்கத்தின் சிலையை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த நாட்டிலேயே வெள்ளியில் செய்யப்பட்ட மிகப்பெரிய சிற்பம் இது தான்.
![]() |
image source Urlaubsguru |
7. இந்த நகரம் ஹவாயின் 9 வது தீவு என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. காரணம் இங்கு வாழும் அதிகப்படியான ஹவாய் மக்கள்.
8. அமெரிக்காவில் உள்ள நகரங்களில் இங்கு தான் அதிக சதவீத மக்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். மேலும் இங்குள்ள மக்கள் தான் அதிகமாக விவாகரத்து செயது கொள்கிறார்கள். மேலும் இங்குள்ள மக்கள் தான் அதிகமாக தற்கொலையும் செய்து கொள்கிறார்கள்.
9. Archie Karas என்பவர் இங்கு மிகவும் பிரபலமான சூதாட்ட நிபுணர். 1992 ல் 50 டாலருடன் விளையாட துடங்கிய இவர் சூதாட்டத்தில் பெற்ற தொடர் வெற்றி மூலம் 1995 லேயே இவரது சொத்து மதிப்பு 40 மில்லியன் டாலராக மாறியது.
![]() |
image source Las Vegas Review-Journal |
10. இந்த நகரத்தில் உள்ள மிக உயரமான டவர் Stratosphere Casino, ஹோட்டல். சுமார் 350.2 மீட்டர் உயரம் உள்ளது. அங்குள்ள மக்களை மிகவும் கரவக்கூடிய ஒரு இடம் என்றும் சொல்லலாம். இந்த டவருடைய சிறப்பு என்ன என்றால் இதனுடைய 360 டிகிரி அழகான காட்சி. இந்த டவரின் உச்சியில் இருந்து லாஸ் வேகாஸ் நகரை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.
![]() |
source image Las Vegas Review-Journal |
11. ஆய்வின்படி இங்கே வருடத்திற்கு 41 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் முக்கிய அம்சங்கள் என பார்த்தால் ஷாப்பிங், பொழுதுபோக்கு அம்சங்கள், இரவுநேர விடுதிகள் மற்றும் பார்ட்டி கொண்டாட்டங்கள்.
12. லாஸ் வேகாஸ் அமைந்துள்ள Nevada மாநிலத்தில் 1931 முதல் சூதாட்டம் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. உலக அளவில் மிகவும் பிரபலமான சூதாட்ட விடுதிகள் இங்கு தான் உள்ளது. உலக அளவில் கேசினோ விளையாட்டின் தாயகமாக லாஸ் வேகாஸ் அறியப்படுகிறது.
![]() |
image source Choice Hotels |
13. 1959ல் உருவாக்கப்பட்ட ‘Welcome To Las Vegas Sign’ என்ற வரவேற்பு பலகை இங்கே மிகவும் பிரபலம். நிறைய படங்களில் இந்த நகரை பற்றிய அறிமுகமே இந்த வரவேற்பு பலகையுடன் தான் ஆரம்பிக்கும்.
14. இன்றய மதிப்பில் இங்கு உள்ள ஒரு ஏக்கர் நிலம் 4 முதல் 6 மில்லியன் டாலர் மதிப்பு கொண்டது.
![]() |
image source Culture Trip |
15. இங்கு உள்ள ஒரு ஆச்சரியமான விஷயம் என்ன என்று பார்த்தால் பொழுதுபோக்கிற்கு இவ்வளவு முக்கியம் தரும் இந்த நகரத்தில் விபச்சாரத்திற்கு சட்டபூர்வமாக அனுமதி இல்லை. அதற்காக இங்கே அந்த மாதிரி சமாச்சாரங்கள் நடக்காது என்று சொல்ல முடியாது, உதாரணத்திற்கு நமது நாடு. நம்ம நாட்டிலும் விபச்சாரம் தடை செய்யப்பட்ட ஒன்று தான்.
16. 19 ஆம் நூற்றாண்டில் இங்கு ஸ்பானியர்கள் வரும்போது வெறும் புற்கள் மட்டும் தான் இருந்ததாம், எனவே லாஸ் வேகாஸ் என அவர்கள் தான் இந்த இடத்திற்கு பெயர்சூட்டியுள்ளனர். ஸ்பானிஷில் இதற்கு புல்வெளிகள் என்று அர்த்தமாம்.
![]() |
image source Las Vegas |
17. 2018 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி லாஸ் வேகாஸில் 1,50,000 ஹோட்டல் அறைகள் உள்ளன. இங்குள்ள MGM Grand Hotel உலகிலேயே அதிக அறைகளைக்கொண்ட உலகின் மிகப்பெரிய 2 ஆவது ஹோட்டல்.
![]() |
image source Kuoni |
18. Luxor Las Vegas என்ற ஹோட்டல் 1993 ஆம் இங்கு கட்டப்பட்டது, இந்த ஹோட்டல் முழுக்க முழுக்க எகிப்து பிரமிடை நகல் எடுத்தது போன்று உருவாக்கப்பட்டுள்ள்ளது. கிட்டத்தட்ட உருவத்தில் அதற்கு நிகராக கட்டப்பட்டாலும் இந்த ஹோட்டல் அந்த பிரமிடை விட 100 அடி உயரம் குறைவு தான்.
![]() |
image source TripSavvy |
19. 1999ல் Paris Las Vegas என்ற ஹோட்டல் கட்டப்பட்டது. பாரிஸில் இருக்கும் ஈபிள் டவரை அப்படியே திரும்ப உருவாக்கியது போல பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டது. இதன் உயரம் 164.6 மீட்டர், கிட்டத்தட்ட ஒரிஜினல் ஈபிள் டவரில் பாதி. உண்மையிலேயே உண்மையான ஈபிள் டவரை விட உயரமாக கட்ட திட்டமிடப்பட்டது, ஆனால் விமான போக்குவத்து பாதிக்கப்படும் காரணத்தினால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
![]() |
image source www.huckmag.com |
![]() |
image source OhFact! |
20. என்னதான் இந்த நகரம் பிரம்மாண்டமான விளக்குகளால் மின்னினாலும், உயர்ந்த கோபுரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தாலும், அந்த நகரத்தில் உள்ள சுரங்கப்பாதைக்கு கீழ் ஆயிரக்கணக்கான மக்கள் வீடில்லாமல் அங்கேயே வசித்து வருகின்றனர். இது லாஸ் வேகாஸ் நகரத்தின் இன்னொரு கருப்பு பக்கம் என்றும் சொல்லலாம்.
0 Comments