McDonald's Banned Countries In The World
McDonald's ரெஸ்டாரண்ட் இல்லாத நாடுகள் என வகைப்படுத்தும்போதே, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் இந்த McDonald's என்கிற உணவு நிறுவனம் எவ்வளவு பிரபலம் என்று. உலகில் வேறு எந்தவொரு உணவு நிறுவனமும் இந்த அளவு பிரபலம் கிடையாது. இந்த McDonald's நிறுவனம் பற்றிய சில தகவல்களைப்பற்றி இங்கு பார்க்கலாம்.
![]() |
image source elpais.com |
McDonald's அமெரிக்காவை சேர்ந்த ஒரு உணவு நிறுவனம். ரிச்சர்ட் மற்றும் மௌரிஸ் மெக்டொனால்ட் என்கிற சகோதரர்களால் 1948 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் முதன் முதலாக ஒரு ரெஸ்டாரண்டை துவங்கினார்கள். ஆரம்பத்தில் hamburger stand என்ற பெயரில் இந்த நிறுவனம் இயங்கியது. பிறகு 1953 ல் கோல்டன் நிறத்தில் " M " என்ற அடையாளத்தை அறிமுகப்படுத்தினார்கள். Ray Kroc என்ற தொழிலதிபர் இவர்களுடன் இணைந்து இந்த உணவு கம்பெனியின் கிளைகள் பல இடங்களில் ஏற்படுத்தப்பட்டது.
McDonald's தற்போது உலகின் அதிக கிளைகளைக்கொண்ட ஒரு உணவு நிறுவனமாக உள்ளது. 101 நாடுகளில் கிளைகளைக்கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளரின் எண்ணிக்கை சுமார் 69 மில்லியன். உலகம் முழுவதும் 37,855 ரெஸ்டாரண்டுகள் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் மிகவும் பிரபலமான உணவு ஹேம்பர்கர், சீஸ்பர்கர் மற்றும் french fries எனப்படும் உணவு. மேலும் பலவகையான குளிர்பானங்கள், மில்க்சேக்ஸ், மற்றும் wraps desserts போன்ற உணவுகள் இங்கு மிகவும் பிரபலம். இந்த உணவுகளால் உடலுக்கு தீங்கு என பல சர்ச்சைகள் எழுந்ததால் காய்கறியில் செய்யப்படும் சாலட், மீன், பழங்கள் மற்றும் பல உணவுகள் இவர்களுடைய மெனுவில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
![]() |
image source Tokyo Weekender |
![]() |
image source Sunshine Coast Daily |
2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி இந்த நிறுவனம் அதிக பணியாளர்களைக்கொண்ட உலகின் இரண்டாவது தனியார் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் 17 லட்சம் மக்கள் பணியாளர்களாக உள்ளனர்.
நமது இந்தியாவில் மட்டும் சுமார் 400 ரெஸ்டாரன்டுகள் உள்ளன. அமெரிக்காவில் அதிகபட்சமாக 14,146 ரெஸ்டாரன்டுகள் உள்ளது.
McDonald's நிறுவனம் செயல்படாத நாடுகள்:
இவ்வளவு பிரபலமான நிறுவனமாக இருந்தாலும் கூட ஏறத்தாழ 105 நாடுகளில் McDonald's ன் ஒரு கிளை கூட கிடையாது. அதில் முக்கியமான நாடுகள் கொரியா, ஈரான், ஐஸ்லாந்து, கென்யா, ஜிம்பாவே ஆகிய நாடுகள்.
காரணம் என்ன?
பொலிவியாவில் 15 வருடங்களுக்கு முன்னர் McDonald's ரெஸ்டாரன்டுகள் செயல்பாட்டில் இருந்தது. ஆனால் அங்கிருந்த வலுவில்லாத அரசியல் மற்றும் ஆட்சியால் அங்கிருந்த McDonald's நிறுவனங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு விட்டது.
![]() |
pics via Business Insider |
![]() |
image source Reddit |
![]() |
image source BoredBug |
மேலும் பர்முடா, கென்யா போன்ற நாடுகளில் இதன் கிளைகளை நிறுவும் பணிகள் நடந்தாலும் தொடர் போராட்டம், சட்ட சிக்கல் போன்ற காரணங்களால் அந்த முயற்சிகள் கைவிடப்பட்டது.
0 Comments