வியக்க வைக்கும் புது வடிவம் பெற்ற பயன்படாத டயர்கள்

Awesome Transformation Of "Waste Tyre"

நம் இன்றய உலகில் வாகனங்கள் என்பது இன்றியமையாத ஒன்றாக ஆகி விட்டது. அத்தகைய வாகனங்கள் சிக்கல் இல்லாமல் ஓட ரொம்ப முக்கியமானது தரமான டயர். இந்த டயரின் விலை என்று பார்த்தால் 1000 த்தில் தொடங்கி 30,000 வரை செல்கிறது. அதே மூன்று அல்லது நான்கு வருடம் போனால் அந்த டயர் ஒரு குப்பைதான். திரும்ப அந்த டயரை மாற்றும்போது ஒரு 3 சதவீத அளவு கூட உங்களுக்கு விலை கிடைக்காது.image source Weibold
image source
ஆனால் சில அறிவார்ந்த மக்கள் மிக சிறப்பாக யோசித்து இத்தகைய டயர்களை குறைந்த விலைக்கு வாங்கி அதை சிறப்பாக மாற்றியமைத்து மற்றோரு பொருளாகவே மாற்றி விடுகின்றனர். தற்போது இது போன்ற படைப்புகளுக்கு மக்கள் மத்தியில் நிறைய வரவேற்பும் கிடைக்கிறது.

image source Pinterest


image source Pinterest
இந்தியா முதல் உலகம் முழுக்க இது பிரபலம் அடைந்து வருகிறது. பழைய டயர்களைக்கொண்டு செருப்புகளும், உட்காரும் வகையில் நாற்காலிகளும் செய்யப்படுகிறது. மேலும் அழகான டீ அருந்தும் டேபிள்கள், வரவேற்பு அறையில் வைக்கும் பர்னிச்சர்கள் என அழகாக மாற்றப்படுகிறது. இதற்கு பல வண்ணங்கள் கொடுக்கப்பட்டு நிறைய மாற்றங்களை செய்கின்றனர். பொதுவாகவே மாற்றங்களை விரும்பும் மக்களுக்களை இது வெகுவாக திருப்திப்படுத்துகிறது. டயரின் இயல்பான தோற்றம் பர்னிச்சர் செய்ய மிகவும் கட்சிதமாக உள்ளது.


image source Pinterest

image source Pinterest
மேலும் இதை பயன்படுத்தி அழகான ஸ்பீக்கர்கள், தண்ணீர் பிடிக்கும் வாளிகள், கை கழுவும் ( wash basin ) வரை தயார் செய்யப்படுகிறது. தோட்டங்களை அலங்கரிக்கவும், பூந்தொட்டிகளாகவும் டயர்கள் பயன்படுத்தப்படுகிறது. சில இடங்களில் டயர்களை கொண்டு மேலேறும் படிகளையும் அமைக்கின்றனர். ஆண்கள் பயன்படுத்தும் பெல்ட்டுகள் மற்றும் வீட்டின் கூரைகளை காக்கும் வகையிலும் இது மாற்றியமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

image source YouTube

வெளிநாடுகளில் பல பூங்காக்கள் பழைய டயர்களை பயன்படுத்தி அலங்கரிக்கப்பட்டுள்ளது. டயர்களை விதவிதமாக வண்ணம் பூசி பலவிதமான பூச்செடிகள், குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல்கள், மற்றும் விளையாட்டு சாதனங்கள் என பூங்காக்களில்  ஏற்படுத்தப்பட்டுள்ளது. பார்க்க மிகவும் வண்ணமயமாக காட்சியளிப்பதால் குழந்தைகளிடமும் , குழந்தைகளின் பெற்றோர்களிடமும் இது வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் கலைஞர்கள் மணலில் சிற்பங்கள், ஓவியங்கள் என அசத்துவது போல் டயர்களை பயன்படுத்தியும் பல படைப்புகளை உருவாக்கியுள்ளனர். டயர்களை பயன்படுத்தி பெரிய யானை மற்றும் பிரம்மாண்டமாக காகம் போன்ற உருவங்களை செய்துள்ளனர். மேலும் ஹாலிவுட் படங்களில் வரும் ராட்சச மிருகங்களின் உருவங்களையும் உருவாக்கி அசத்தியுள்ளார்.


image source Pinterest

image source Pinterest
பயனற்ற டயர்களை பயன்படுத்தி இவ்வாறு உருவாக்கப்படும் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் பெரும் வரவேற்பு இருப்பதால் தொழில் ரீதியாகவும் இது வளர்ச்சி பெற்று வருகிறது.

Post a Comment

0 Comments