குழந்தைகள் விளையாட்டாக உருவாக்கிய உலகின் ஆபத்தான 10 ஆயுதங்கள்
ஆரம்ப காலத்தில் குழந்தைகள் பள்ளிகளில் விளையாட்டாக கையில் கிடைத்ததை வைத்து கொண்டு, அதை துப்பாக்கி என்றும் கத்தி என்றும் சொல்லுக்கொண்டு விளையாட்டாக சண்டையிட்டுக்கொள்வார்கள். இதில் பல கொலை சம்பவங்களும் நடக்கும் விளையாட்டாக...ஆனால் தற்போது காலமும் மாறிவிட்டது, குழந்தைகளும் மாறிவிட்டார்கள். பல வன்முறை சம்பவங்கள் தற்போது பள்ளி மாணவர்களாலேயே நிகழ்த்தப்படுவதை நாம் காண முடிகிறது. தற்போது மாணவர்கள் பள்ளி செல்லும் பருவத்திலேயே உலோகத்தால் ஆன கத்திகள், மற்றும் கொடூர ஆயுதங்களை கையில் வைத்துள்ளனர். தற்போது இதையெல்லாம் தாண்டி கையில் உள்ள பொருளையே ஆபத்தான ஆயுதமாக மாற்றவும் தொடங்கிவிட்டனர். அப்படி மாணவர்களால் உருவாக்கப்பட்ட சில வேடிக்கையான ஆயுதங்களை பற்றி தான் நாம் இந்த பதிவில் காணப்போகிறோம்.
1. Mobile Hammer
நோக்கியாவின் மிகவும் பிரபலமான பழைய செல்போனான 3310 ஐ பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சுத்தியல். செல்போன், சுத்தியல் மரப்பிடி மற்றும் ஒட்டுவதற்கு பயன்படுத்தும் டேப்பை மட்டும் பயன்படுத்தி இந்த சுத்தியல் உருவாக்கப்பட்டுள்ளது.
2. Pen Slingshot
சுண்டுவில் எனப்படுவது 1980 களில் பள்ளி மாணவர்கள் இதை விளையாட்டுப்பொருளாகவும் ஆயுதமாகவும் பயன்படுத்தினர். அதே ஸ்டைலில் எழுதும் பேனாவைக்கொண்டு இந்த தூண்டுவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்க இதில் மூன்று பேனாக்கள், மூன்று இழுவை ரப்பர்கள் மற்றும் ஒட்டும் டேப்பை பயன்படுத்தி உள்ளனர்.
3. Pencil Crossbow
Crossbow என்பது கிட்டத்தட்ட நமக்கு மிகவும் பரிட்சயமான அம்பை எய்தக்கூடிய வில் தான். அதை 4 பென்சில், 1 பேனா மற்றும் ரப்பர் பேண்டை பயன்படுத்தி இதை உருவாக்கி இருக்கிறார்கள்.
Read: 5 Bodybuilders Who Died in Young Age
4. Mace Scale
Mace என்பது இரும்பால் செய்யப்பட்ட ஒரு வகை ஆயுதம். இதை நாம் நோட்டு புத்தகத்தில் கோடு போட பயன்படும் மர ஸ்கேலையும், ஆணியையும் பயன்படுத்தி வேடிக்கையாக உருவாக்கியுள்ளனர்.
5. flail weapon
flail weapon எனப்படுவது அந்த கால வில்லன்கள் பயன்படுத்திய ஒரு கொடூர ஆயுதம். அதை நமது நண்பர் நாம் தவறுகளை திருத்தி அழிக்க பயன்படுத்தும் அழிரப்பரை ( Eraser ) பயன்படுத்தி அழகாக உருவாக்கியுள்ளார்.
6. Throwing Star
இது பொதுவாக நிஞ்ஜா தற்காப்புக்கலையில் பயன்படுத்தப்படும் மிகவும் ஆபத்தான ஒரு ஆயுதம். ஆனால், இங்கு இதை தகவல்களை பதிவு செய்யும் ஒரு சிடியை பயன்படுத்தி இந்த ஆயுதத்தை உருவாக்கியிருக்காங்க.
Read: Impacts of Gay, Lesbian, and Bisexual Community
7. Flame Thrower
இது ஒரு வகை நெருப்பை கக்கும் துப்பாக்கி போன்ற ஆயுதம் என்று சொல்லலாம். சிகரெட் லைட்டர் மற்றும் ஸ்பிரே பாட்டிலை பயன்படுத்தி அதைப்போலவே ஒரு சாதனத்தை உருவாக்கி உள்ளனர்.
8. Whip Weapon
இது சாட்டை போன்ற ஒரு ஆயுதம் ஆகும், இதை மையப்படுத்தி தான் இங்கு ஒரு பொருளை உருவாக்கி உள்ளார்கள். கணினியில் இன்டர்நெட் தொடர்பை பெற பயன்படுத்தப்படும் கேபிளை பயன்படுத்தி இந்த டம்மி ஆயுத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
9. Throwing Star with Racer
முன்னர் நாம் பார்த்த நிஞ்சா கலையில் பயன்படுத்தும் ஆயுதம் போன்று தான் இதுவும். சமீபத்திய தமிழ் திரைப்படங்களில் கூட ஹீரோக்களில் இதை பயன்படுத்துவதை பார்த்திருக்க முடியும். இதில் ஒரு சிறிய மாறுதலாக மூன்று சவர பிளேடுகள் பதிக்கப்பட்டுள்ளது.
10. Spray Gas Bomb
இந்த வகை ஆயுதத்தை நாம நிறைய படங்களில் பார்த்திருக்க முடியும். மேலே உள்ள சின்ன லிவரை நீக்கி விட்டால் சில வினாடிகளில் இந்த மினி பாம் வெடித்துவிடும். இங்கே வெறும் ஸ்பிரே பாட்டிலையும், பொருட்களை கட்ட பயன்படும் பிளாஸ்டிக் டையை பயன்படுத்தி வேடிக்கையாக இதை டிசைன் பண்ணியிருக்காங்க...
0 Comments