ஆசியாவில் மட்டும் நடக்கும் 10 விசித்திர நிகழ்வுகள்
உலகின் மிகப்பெரிய கண்டமான ஆசியா பல தனித்துவமான அம்சங்களை தனக்கென வைத்துள்ளது. பல வகையான மொழிகள் , கலாச்சாரம், பிரமிக்க வைக்கும் இடங்கள் மற்றும் வித்தியாசமான மக்கள் என பல அம்சங்களை கொண்டுள்ளது. அவ்வாறு உலகின் பல பகுதியிலிருந்து ஆசியாவை தனித்து காட்டும் சில விஷயங்களை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.#1 All Possible Flavors In Asia
![]() |
image source: spoon university |
நாம் உண்டு மகிழும் உலகின் பல பிராண்டுகளின் உணவு பொருட்கள் பல விதங்களில் ( flavor ) வேறு எங்கும் இல்லாத அளவுக்கு ஆசியாவில் கிடைக்கிறது. நீங்கள் விரும்பி சாப்பிடும் நொறுக்குத்தீனிகள், எந்த flavor ல் கேட்டாலும் இங்கு கிடைக்கும். kit-Kat என்பது மிகவும் பிரபலமான ஒரு சாக்லேட். அதை விட அதன் விளம்பர கவரும், அதன் சிகப்பு நிற டிசைனும் மிக பிரபலம். ஆனால், ஆசியாவில் அதற்கு முற்றிலும் மாற்றமான flavor களில் இந்த சாக்லேட்டுகள் கிடைக்கிறது. மேலும் ஜப்பானில் பால் நிறத்தில் பெப்சி கிடைக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
#2 You can Sleep Anywhere
![]() |
image source : bloggersArena |
ஆசியாவின் பல இடங்களில் மக்கள் பொது இடங்களில் உறங்குவதை நீங்கள் பார்க்க முடியும். உதாரணமாக மக்கள் நடக்கும் நடைபாதைகள், பூங்காக்கள், ரயில் நிலையங்கள். இவ்வளவு ஏன்? வேலை செய்யும் இடங்களில் கூட ஆசிய மக்கள் உறங்குவது மிகவும் சாதாரணம். இது ஓரு வகையில் செய்யும் வேலைக்கு செய்யும் ஒருவகை மரியாதை என்றும் சொல்லலாம்.
#3 Unique Animals In Asia
![]() |
image source : interconnection.com |
![]() |
image source : worldAtlas.com |
உலகில் எங்கேயும் பார்க்க முடியாத பல காட்டு விலங்குகளை இங்கு பார்க்க முடியும். யானை, புலி, சிங்கம், கரடி, ஓநாய் மற்றும் காட்டெருமைகள் இங்கு மிகவும் பிரபலம். உலகின் பிற பகுதியிலும் இந்த விலங்குகள் இருந்தாலும் இங்குள்ள விலங்குகள் தனித்தன்மை வாய்ந்தது. proboscis எனப்படும் ஒரு வகை வித்தியாசமான குரங்கு ஆசியாவின் இந்தோனேசியாவில் மட்டும் தான் பார்க்க முடியும். கரடிகளில் ( Sloth Bear ) எனப்படும் ஒருவகை கரடிகள் ஆசியாவில் மட்டும் தான் நீங்கள் காண முடியும். மேலும் உலகின் அதிகமான புலிகள் இந்தியாவில் தான் வாழ்கின்றன.
#4 World Unique Plants In Asia
![]() |
image source : Daily Express |
10 அடி உயரமும், 15 அடி அகலம் மற்றும் 45 கிலோ எடையும் கொண்ட Titan Arum எனும் தாவரம் ஆசியாவில் தான் உள்ளது. Rafflesia எனப்படும் மற்றொரு மிகப்பெரிய தாவரமும் ஆசிய நாடுகளான தாய்லாந்து, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸில் காணப்படுகிறது. உலகின் அதிக துர்நாற்றம் வீசக்கூடிய தாவரமான corpse எனும் தாவரம் இந்தோனேசியாவில் காணப்படுகிறது.
Read: 10 Amazing Facts About Iceland
#5 Lowest And Highest Point Of Land
![]() |
image source: slideshare.net |
உலகின் மிகப்பெரிய மலைப்பகுதியான எவரெஸ்ட் ஆசியாவில் தான் அமைந்துள்ளளது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 8848 மீட்டர் உயரத்தில் உள்ளது. உலகின் மிகவும் தாழ்ந்த பகுதியான சாக்கடல் ஆசியாவில் தான் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 427 மீட்டர் தாழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது.
#6 Hotel Service With Robot
![]() |
image source : thrillist |
ஜப்பானின் டோக்கியோவில் அமைந்துள்ள ஹென்னா ( Henn na Hotel ) என்கிற ஹோட்டலில் முழுக்க முழுக்க ரோபோட்டுகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளது. அவை பல ஆசிய மொழியில் பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் டைனோசர் போன்ற ரோபோட்டுகளும் உள்ளே உள்ளது.
#7 Sky-cycle On Philippines
![]() |
image source : up-cool.com |
தரையிலிருந்து 60 அடி உயரத்தில் கயிற்றின் மேல் சைக்கிள் ஓட்டும் விளையாட்டு பிலிப்பைன்ஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இயற்கை அழகை ரசித்தவாரே நீங்கள் இதில் திரில்லிங்கான பயணத்தை அனுபவிக்கலாம். உங்களின் பாதுகாப்பிற்கு ஒரு கயிற்றுடன் நீங்கள் பிணைக்கப்பட்டிருப்பீர்கள்.
#8 Only One Time Zone
உலகின் மிகப்பெரிய நாடுகளில் சீனாவும் ஒன்று. பரப்பளவின் அடிப்படையில் பார்த்தால் அங்கு வித்தியாசமான 5 காலநேரங்கள் கணக்கிடப்பட வேண்டும். ஆனால் மொத்த சீனாவிற்கும் ஒரே ஒரு ( Time Zone ) தான் கணக்கிடப்படுகிறது. சீனாவின் பீஜிங் நகரின் நேரம் தான் அனைத்து சீனாவிற்கும் பொதுவானது.
Read: Top 10 Important Facts About Thailand
#9 Black Teeth Transformation
![]() |
image source : wikipedia |
உலகின் பல நாடுகள் பல்லை பராமரிக்கவும், அழகுபடுத்தவும் அதிகப்படியான பொருளாதாரத்தை செலவு செய்கிறார்கள். ஆனால், ஆசியாவின் குறிப்பிட்ட இடங்களில் ( Teeth blackening ) என சொல்லப்படும் சிகிச்சை முறை மூலம் தங்களது பற்களை கருப்பாக மாற்றிக்கொள்கிறார்கள். சில பகுதிகளில் இதை பற்களை தீங்கிலிருந்து காப்பதற்காக என்கின்றனர், சில இடங்களில் இது பருவ வயதை அடைந்ததை குறிப்பதற்க்கு என நம்புகின்றனர், சில பகுதிகளில் இதை ஓரு கலாச்சார அடையாளமாக பார்க்கின்றனர். இத்தகைய ( Teeth blackening ) எனும் கலாச்சாரம் ஆசியாவில் மட்டும் தான் பார்க்க முடிவது ஒரு விசேஷம் எனலாம்.
#10 Most Aged Youths
![]() |
image source : the Straits Time |
உலகின் மிகவும் இளமையான மக்களாக ஆசிய மக்கள் அறியப்படுகிறார்கள். 50 வயதிற்கு மேற்பட்ட மக்கள் இன்னும் இங்கு பிரபலங்களாகவும், மாடல்களாகவும் உள்ளனர். உலகில் சராசரியாக அதிக ஆயுட்காலத்தை கொண்ட மக்களாக ஜப்பான் மக்கள் உள்ளனர். இவர்களின் சராசரி ஆயுட்காலம் 83.98 ஆக உள்ளது. இதற்கு காரணம் அவர்களின் உணவு கட்டுப்பாடும், உடல் சார்ந்த தினசரி உடற்பயற்சியும் ஆகும்.
Read: 11 Interesting Facts About Indonesia
Read: Top 10 Interesting Facts Of Uganda
0 Comments