Top 12 Pics Proves You Don't Expectation More

பொதுவாக நாம் எந்த பொருளை வாங்கினாலும் அதை விளம்பரங்களை பார்த்தும், ஆன்லைனில் வரும் பொருட்களின் புகைப்படங்களை பார்த்துமே நாம் பொருட்களை தேர்ந்தெடுக்கின்றோம். ஆனால், நாம் தேர்ந்தெடுத்து விலை கொடுத்து வாங்கிய பொருள் முற்றிலும் அதற்கு முரணாக இருந்தால் நம்முடைய சிந்தனை எப்படி இருக்கும். அப்படி வேடிக்கையான சில விஷயங்களை பற்றி தான் இந்த பதிவில் காணப்போகிறோம்.

 #1

image source s-poon

இங்கே ஒரு பெண் தன்னுடைய காதலனிடம் தன்னை ஒரு புகைப்படம் எடுக்குமாறு கேட்டுள்ளார். அவரும் சரி என்று சொல்லிவிட்டு வித்தியாசமாக யோசித்து ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க. அதேவேளை அந்த பெண்ணும் அவரை புகைப்படம் எடுத்துள்ளார். அது பார்க்க நன்றாக இல்லையாம் அதனால் இவ்வாறு அந்த பெண்ணை தன்னுடைய திறமையால் ஒரு ஏலியனாக மாற்றிவிட்டார். அவர் அந்த பெண்ணை பற்றி மனதில் நினைத்ததை தனது புகைப்படத்தால் காண்பித்துவிட்டார்.

#2

image source YetiPie 

இங்கே ஒருவர் புதிதாக அறிமுகம் ஆகியுள்ள ஒரு ஸ்பெஷல் பெரிய சைஸ் பர்கரை ஆர்டர் செய்து விட்டு காத்திக்கொண்டிருக்கிறார். பார்சல் கையில் கிடைத்தவுடன் ஆவலுடன் திறந்து பார்த்த நபருக்கு ஒரு பெரிய ஷாக். அந்த பர்கரின் விளம்பரத்தில் கவர்ந்த விஷயமே சுமார் 5 இன்ச் அளவுக்கு நிரப்பிய வெண்ணை, கூறாக நறுக்கிய இறைச்சி துண்டு மற்றும் மசாலா கலவை தான். ஆனால், இவருக்கு வந்த பார்சலில் பண் ( raw bun ) மட்டும் தான் உள்ளது மசாலாவை காணவில்லை. நிச்சயமாக அந்த நபர் கதறி அழுத்திருப்பார் பாவம்.

#3

image source KIRIT0
Popsicle என சொல்லப்படக்கூடிய லாலிபாப் மிட்டாயை சிறியவங்க முதல் பெரியவங்க வரை விரும்பி சாப்பிடுவாங்க. அப்படி ஜாலியாக சாப்பிடலான்னு வாங்கிய ஒரு லாலிபாப்பை பார்த்து எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். அது என்னன்னு பார்த்தீங்கன்னா, கம்பெனிகாரனே மிட்டாய்க்கு இரண்டு கண்ணு தான் டிசைன் பண்ணியிருக்கான், ஆனால் இவருக்கு கிடைத்த மிட்டாய் மூன்று கண்ணோடு சிரித்துக்கொண்டிருக்கிறது. அந்த பையனாலேயே இதை நம்பமுடியலைன்னா பார்த்துக்கோங்க.


Read: Top 10 Most Expensive Police Cars In The World


#4

image source salty_casimir
இந்த பையன் ப்ளூபெர்ரி பிஸ்கட் வாங்கிட்டு ஆசையோடு பிஸ்கட்டை உடைத்து பார்த்தால் அதன் ஆசையோடு எதிர்பார்த்த ப்ளூபெர்ரி கிரீமை காணவில்லை. அப்போது தான் தம்பி பிஸ்கட் கவரை நன்றாக கவனிக்கிறார். அதில் ( no artificial flavors and color ) என விளம்பரம் செய்து விட்டு அதில் நிரப்ப வேண்டிய மிக்ஸிங் கலவையையே நிரப்பாமல் விட்டுட்டாங்க. பிஸ்கட் கவர் மேல் குறிப்பிட்ட பில்டப் வசனத்தை இந்த ஒரு பிஸ்கட்டிலாவது கடைபிடித்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.

#5
image source musicdan27

பொதுவாக நாம் விரும்பி சாப்பிடும் நொறுக்குத்தீனி பாக்கெட்டுகளில் ( Crispy, Extra Toasty ) என்று வர்ணித்து பதிவிட்டிருப்பாங்க. ஆனால், அவங்க சொன்ன மாதிரி எந்தவொரு ஸ்னாக்சும் அந்த மாதிரி இருக்காது. ஆனால், இந்த பையனுக்கு கிடைத்த இந்த ஒரு பாக்கட்டில் மட்டும் தான் சொன்ன மாதிரியே நல்லா தீஞ்சு போற அளவுக்கு செஞ்சுருக்காங்க.

#6
image source spinnergie

இங்கே ஒருவர் தன்னுடைய பெண் தோழிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்னு ஒரு பொம்மையை ஆர்டர் பண்ணுயிருக்கிறார். நல்லவேளையாக அந்த பெண்ணிடம் அதை கொடுக்கும் முன் பார்சலை பிரித்து பார்த்து தப்பிவிட்டார். அவருக்கு கிடைத்த பொம்மையை நீங்களே பாருங்க, ஏதோ உருண்டை பிடித்த சப்பாத்தி மாவு போல அது இருக்கிறது.

#7
image source GingerIsTheBestSpice

நன்றாக வெண்ணெயில் செய்யப்பட்ட ஒரு சுவையான உணவை சாப்பிட ஆசைப்பட்ட ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். மிகவும் ஆவலோடு பார்சலை பிரித்து பார்த்த அவர் வாந்தி எடுத்தது தான் மிச்சம். அது முழுக்க வெண்ணெயால் செய்யப்பட்ட உணவா அல்லது ஒரு வாரம் சுத்தம் செய்யப்படாத டாய்லெட்டா என்று தெரியவில்லை, அவ்வளவு மோசமாக இருந்துள்ளது. இந்த படத்தை பார்த்து நீங்களே சொல்லுங்கள், இதை உங்களால் சாப்பிட முடியுமா??

#8

image source pavablog

 இங்கே ஒரு பெண் ஆன்லைனில் ஒரு மாடர்ன் ஆடையை அவருக்காக தேர்வு செய்து ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவர் ஆர்டர் செய்த அளவை விட கொஞ்சம் சிறிய ஆடையை அனுப்பி விட்டனர். இந்த படத்தை பார்த்தால் உங்களுக்கே தெரியும். இதில், அந்த பெண்ணிற்கு கிடைத்த ஒரே நிம்மதி அவருடைய செல்ல பூனைக்காவது இது பொருந்தியதே என்ற ஒன்று தான்.#9
image source pens & patron

இங்கே ஒரு நபர் மிகவும் ஆவலோடு தனது புஜபலத்தை காட்டும் வகையில் ஒரு மேல் உள்ளாடையை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் பார்சல் வீட்டிற்கு வந்த பிறகு ஆடையை உடுத்திபார்த்த அந்த நபர் அப்படியே வாயடைத்து போய்விட்டார். புஜபல பராக்ரமசாலியாக இருந்த அவரை அந்த ஆடை ஒரு டிஸ்கோ சாந்தி போல மாற்றிவிட்டது. அந்த அளவிற்கு சிறிய சைஸ் ஆடையை அவருக்கு அனுப்பி உள்ளனர். 

#10

image source Picotros

கலர்ஃபுல்லா ஒரு புதுமையான ஐஸ்கிரீமை மெனுகார்டில் பார்த்துவிட்டு ஆர்டர் செய்துள்ளார் ஒருவர். புதிய flavor ஐஸ்கிரீமை சுவைக்க காத்திருந்த அந்த நபர் ஐஸ்கிரீம் டேபிளுக்கு வந்த பின்னர் அப்படியே நொந்து போய்விட்டார். மெனுவில் அவர் பார்த்த ஐட்டத்தில் கப் நிறைய ஐஸ்கிரீமுடன் அப்படியே வண்ணமயமாக காட்சி தந்தது. ஆனால், அவருக்கு கொடுக்கப்பட்ட டம்ளரில் எலுமிச்சை ஜூஸ்க்கு மேலே கொஞ்சம் ஐஸ்கிரீமை புழிந்து கொடுத்து உள்ளனர். அவர் அந்த கடையில் சண்டையே போட்டுவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

#11
image source imgur  

மேலே பார்த்த ஒருவருக்கு  எலுமிச்சை ஜூஸ்ஸில் கொஞ்சம் ஐஸ்கிரீமையாவது போட்டு இருந்தனர். ஆனால், இங்கே அப்படியல்ல ஒன்லி லெமன் ஜூஸ், அதுக்கு மேலே நான்கு பருப்பு அவ்வளவுதான். அதுவும் அது பாதாம் பருப்பா அல்லது துவரம் பருப்பான்னு தெரியலை.  மெனுகார்டில் உள்ள இடத்திற்கும் இதற்கும் எதாவது ஒற்றுமை உள்ளதா என்று பாருங்கள்.

#12
image source someoftheanswers

இங்கே ஒருவர் செய்த காரியம் நிச்சயம் உங்களை சிந்திக்கவும் வைக்கும், சிரிக்கவும் வைக்கும். BAND-AID  கம்பெனியின் விளம்பர கவரை பாருங்கள். அதில் இதன் உறுதியை காட்டும் வகையில் இதன் மேல் சுத்தியலை கொண்டு அடித்தாலும் ஒன்றும் ஆகாது என்று விளம்பரப்படுத்தி இருந்தனர். அதற்கு, நம்ம ஆள் நன்றாக யோசித்து இதை சோதிப்பதற்காக ஒரு BAND-AID ஓட்டியை பலகையின் மீது வைத்து ஆணியே அடித்துவிட்டார். வேடிக்கையாக இருந்தாலும் இவரை நிச்சயம் பாராட்டலாம்.

Read: 5 weird Sports In The World

Post a Comment

0 Comments