Why Most Planes Painted Are White??

 விமானங்கள் பொதுவாக வெள்ளை நிறத்துடன் தயாரிக்கப்படுவதின் ரகசியம் என்ன தெரியுமா?


என்னதான் 21 ஆம் நூற்றாண்டாக இருந்தாலும், இப்போதும் வானத்தில் ஒரு விமானம் பறந்து வருவதை பார்த்தால் அதை ஆச்சர்யமாக பார்க்கிறோம். அது சின்ன சிறுவனாக இருந்தாலும் சரி, பெரியவராக இருந்தாலும் சரி. பல ஆண்டுகளாக நாம் இதை பார்த்துக்கொண்டு இருந்தாலும் நாம் இதில் ஒரு விஷயத்தை சரியாக கவனித்து இருக்க மாட்டோம். அதாவது அந்த விமானத்தின் நிறத்தைப்பற்றி...


பெரிய அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்ட நிலையில் பல வண்ணங்களில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வருவதை நாம் நிச்சயம் பார்த்திருப்போம். பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் விமானங்களுக்கு பல வண்ண நிறங்களில் அதற்கு பெயிண்ட் பண்ணுவது சாதாரண விஷயம் தான். ஆனால், விமானம் மட்டும் பெருமளவு வெள்ளை நிறத்திலேயே பார்க்க முடிகிறது, முக்கியமாக அந்த விமானம் வெள்ளை நிறத்துடன் தயாரிக்கப்படுகிறது என்பதே உண்மை. அதைப்பற்றி தான் நாம் இந்த பதிவில் காணப்போகிறோம்.

cargospotter, youtube


image source Quora


நாம் பொதுவாக தட்பவெப்பநிலைக்கேற்றவாறு ஆடைகளை தேர்வு செய்து பயன்படுத்துவோம். நன்றாக வெயில் சுட்டெரிக்கும் போது நாம் வெளியில் சென்றால், நாம் அணிந்திருக்கும் ஆடையை பொறுத்து வெயிலின் தாக்கம் நம் உடலில் மாறுபடும். இயற்கையாகவே வெள்ளை நிற ஆடையானது மேலே படக்கூடிய வெயிலை அப்படியே பிரதிபலிக்கிறது. அதாவது திருப்பி அனுப்புகிறது. ஆனால் கருப்பு மற்றும் அடர்ந்த கலரை அணிந்துள்ள நபருக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் அடர்ந்த கருப்பு மற்றும் பிற நிறங்கள் சூரிய வெப்பத்தை வெளியே உமிழாமல் தன்னுள் ஈர்த்துக்கொள்ளும் தன்மை கொண்டது. எனவே தான் விமானத்தை குளிர்ந்த நிலையில் வைக்க வெள்ளை நிறத்தை முதன்மையாக தேர்வு செய்கிறார்கள். விமானத்தின் மேற்பகுதி வெள்ளை நிறமாக இருப்பதால் தட்பவெப்பநிலை சீராக உள்ளது, மேலும் சூரிய கதிர்வீச்சிலிருந்து ( radiation ) விமானம் காக்கப்படுகிறது.

image source otheedge.com

விமானத்தின் சில பகுதிகள் பிளாஸ்டிக், கார்பன் பைபர் மற்றும் கார்பன் கண்ணாடிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் விமானத்தின் மேற்பகுதியானது ஒளி பிரதிபலிப்பின் மூலமாக விமானத்தை பாதுகாக்கிறது.

மேலும் வேகமாக செல்லக்கூடிய சூப்பர்சோனிக் பயணிகள் விமானங்களில் அதிக பிரதிபளப்பை ஏற்படுத்தும் வெள்ளை நிற பெயிண்ட்டுகள் பூசப்படுகிறது.

மேலும் concord என  அழைக்கப்படும் வேகமாக செல்லக்கூடிய விமானங்களின் முன்பகுதி மிகவும் கூரான பறவையின் வாயைப்போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கூரான முன்பகுதி மற்றும் அதிக பளபளப்பை ஏற்படுத்தும் வெள்ளை நிற பெயிண்ட் போன்றவற்றால் இந்த விமானத்தால் அதிவேகமாக பறக்க முடிகிறது. அதிகபட்சமாக 2180 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கிறது.


image source BBC




மேலும் வர்த்தக ரீதியாக பார்த்தால் மற்ற நிறங்களை விட வெள்ளை நிற பூச்சுகள் விலை மலிவாக உள்ளது. விமானத்தை உருவாக்கும் வல்லுநர்கள் கூறும்போது விமானத்திற்கு மஞ்சள் நிற பெயிண்டை அடிக்கும்போது விமானத்தின் எடை 450 கிலோகிராம் அதிகமாகிவிடுகிறது. இதன் மூலமாக எரிபொருள் செலவு அதிகமாகிறது.

USA today

ஒரு விமானத்திற்கு வெள்ளை நிற பெயிண்ட் அடிக்க மட்டும் 50,000 டாலர்கள் செலவாகிறது. அதே ஒருவேளை நீங்கள் வேறு அடர்ந்த நிறத்தை தேர்வு செய்தால் பெயிண்ட் பூச்சு வேலைக்கு மட்டும் 2,00,000 டாலர்கள் செலவிடவேண்டி இருக்கும். இது வெறும் ஒரு விமானத்திற்கு ஆகும் செலவு தான்.

துரதிஷ்டவசமாக ஒருவேளை விமானத்தில் ஏதாவது ஒரு பாகத்தில் சேதமோ அல்லது சிதைவோ ஏற்பட்டால் மற்ற நிறங்களை விட வெள்ளை நிறம் எளிதாக அந்த பிரச்னையை காட்டிவிடும்.

image source ABC

twitter.com

மேலும் விமானங்கள் விபத்துக்குள்ளாகி தவறுதலாக கடலில் விழுந்தால் மற்ற விமானங்களை விட வெள்ளை நிற விமானங்கள் கடலில் மிகவும் தெளிவாக தெரிகிறது. எனவே விரைவாக மீட்க மீட்பு குழுவினருக்கும் உதவியாக உள்ளது

விமானங்கள் பறக்கும் போது ஏதாவது பறவையின் மீது மோதி விட்டால் அது மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி விடும். பொதுவாக, பறவைகள் வானத்தில் பறக்கும் போது எதிரே வரும் வெள்ளை நிற பொருட்களின் அருகில் நெருங்கி பறப்பதில்லை. எனவே, இதன் மூலம் பறவைகள் மோதி ஏற்படும் விபத்துகள் பெருமளவு தவிர்க்கப்படுகிறது.

For Video:







Post a Comment

0 Comments