ஆஸ்திரேலியாவில் மட்டும் காண முடியும் 15 ஆச்சர்ய விஷயங்கள்
ஆஸ்திரேலியா என சொல்லும்போது பொதுவாக நமக்கு நினைவுக்கு வருவது அங்குள்ள இயற்கை அழகு கொஞ்சும் இடங்கள், அழகான திறந்தவெளி நிலப்பரப்புகள், கடற்கரை, பாலைவனம் மற்றும் கங்காரு. அதையும் தாண்டி பல தனித்துவமான விஷயங்கள் அந்த நாட்டிற்கே உரியதாக உள்ளது. அதில் சிலவற்றை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.1. ஆஸ்திரேலியாவில் 18 வயது பூர்த்தியடைந்து விட்டால் வாக்களிப்பது கட்டாயக்கடமை. ஒருவேளை நீங்கள் சரியான காரணமின்றி வாக்களிக்க தவறி விட்டால் முதல் தடவை 20$ அபராதம் விதிக்கப்படும். அடுத்த முறை 50$ ஆக அது உயர்த்தப்படும். ஒருவேளை அந்த அபராதத்தை கட்ட தவறினால் உங்கள் வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.
![]() |
image source election watch |
2. தலைநகரான சிட்னியில் அமைந்துள்ள ஒபேரா கட்டிடம் மிகவும் புகழ்பெற்ற ஒன்று . உண்மையில் இதை வடிவமைத்த கட்டட கலைஞர் நாம் சாப்பிடும் ஆரஞ்சு பழத்தை அடிப்படையாகக்கொண்டு தான் இந்த டிசைனை அவர் உருவாக்கியுள்ளார். அவர் பெயர் Jorn Utzon. இந்த புகழ் பெட்ரா கட்டடத்தை உருவாக்க அந்த கலைஞர் 9 ஆண்டுகள் எடுத்துக்கொண்டார்.
3. இங்கு வித்தியாசமான 150 க்கும் மேலான மிகப்பெரிய சிற்பங்கள் உள்ளது. எறும்பு, காளான், முதலை மற்றும் வாழைப்பழம் போன்ற பல வேடிக்கையான சிற்பங்கள் இங்கே உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வளவு ஏன், வெண்ணை டப்பா வடிவில் கூட கற்சிற்பங்களை உருவாக்கியுள்ளனர்.
Read : Top 10 Unique Facts Of Asia
![]() | |||
image source stmed.net |
![]() |
image source ournakedaustralia.com.a |
5. உலகின் பழமையான மற்றும் மிகவும் புகழ் பெற்ற காலணி மற்றும் ஷூ தயாரிப்பு நிறுவனம் UGG bhoot. உண்மையில் இந்நிறுவனத்தின் தாயகம் ஆஸ்திரேலியா தான். இந்த 20 ஆம் நூற்றாண்டிலும் இந்த நிறுவனத்தின் தயாரிப்பிற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. முற்றிலும் தோலால் உருவாக்கப்படும் இந்த காலணிகள் ஆஸ்திரேலியாவின் குளிரான தட்பவெப்பநிலைக்கு கதகதப்பாக இருக்க உதவுகிறது.
![]() | |||||
image source wikipedia |
![]() |
image source Livemint |
6. உலகிலேயே கரன்சி நோட்டை முதன் முதலாக பிளாஸ்டிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது ஆஸ்திரேலியாவில் தான். 1998 ல் ஒரு விசேஷமான பிளாஸ்டிக்கில் அந்த நாட்டு கரன்சி நோட்டுகள் வெளியிடப்பட்டது. காகித நோட்டுகள் விரைவாக சேதமடைவதால் இவ்வாறு உருவாக்கப்பட்டது.
7. உலகின் அதிக மக்கள் சுற்றுலா செல்ல விரும்பும் நாடுகளில் ஆஸ்திரேலியா முக்கியமான ஒன்று. ஒரு வருடத்திற்கு மட்டும் சுமார் 9 மில்லியன் மக்கள் இங்கு வருகை தருகின்றனர். நல்ல தட்பவெப்பம், நட்புடன் பழகும் மக்கள், நல்ல சம்பளம் மற்றும் சுவையான குடிநீர் போன்ற காரணங்களால் பல வெளிநாட்டினர் இங்கு தங்களின் வேலைவாய்ப்பை தேடிக்கொள்ள முனைகின்றனர்.
Read : 14 Interesting Facts About Ancient Egypt
![]() |
image source teanabroad.org |
8. உலகின் மிகவும் நீளமான கோல்ப் விளையாட்டு தளம் இங்குதான் உள்ளது. இந்த நாட்டின் ஐரி தேசிய நெடுஞ்சாலையில் Nullarbor Links எனப்படும் இந்த கோல்ப் மைதானம் அமைந்துள்ளது. இந்த கோல்ப் மைதானம் 8 holes மற்றும் 72 par golf course ஐ கொண்டுள்ளது.
9. 1788 ல் கவர்னராக இருந்த ஆர்தர் பிலிப் தொடர் குற்றங்களை குறைப்பதற்காக ஒரு புதிய காவல் படையை உருவாக்க எண்ணினார். அதற்காக 12 பெரிய குற்றவாளிகளை தேர்ந்தெடுத்தார், மேலும் அவர்களையே அந்த காவல் படையின் உறுப்பினர்களாக நியமித்தார். அவர்கள் சிட்னி நகரின் கீழ் இயங்கும் ரகசிய காவலர்களாக பணியமர்த்தப்பட்டனர். 30 ஆண்டுகளில் சுமார் 60 காவலர்கள் இந்த துறையில் இணைக்கப்பட்டனர். இந்த 60 பேரும் இந்நகரத்தின் முன்னாள் குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
![]() |
image source Hindustan Times |
![]() |
image source abc.net.au |
10. 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பைக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் 31 - 0 என்ற கணக்கில் அமெரிக்க சமோரா அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒரு சர்வதேச கால்பந்து போட்டியில் அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் நாடு என்ற உலக சாதனையை படைத்தது ஆஸ்திரேலியா.
11. 350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக முக்கோண காலத்தில் வாழ்ந்து வந்ததாக கருதப்படும் ஒரு உயிரினம் வாழ்த்து வருகிறது. அது தான் The Lung Fish. இந்த மீனால் வறட்சி காலத்தில் ஒரே ஒரு நுரையீரலால் சுவாசிக்க முடியும்.
12. Drop Bear சொல்லப்படும் கோலா வகைக்கரடிகள் ஆஸ்திரேலியாவில் மட்டும் தான் வாழ்கிறது.
![]() |
image source highpants.net |
13. ஆஸ்திரேலியாவில் அனைத்தையும் ஒரு செல்லப்பெயர் ( Nick Name ) வைத்து அழைப்பது வழக்கம். உதாரணத்திற்கு நாம் உணவை ஆங்கிலத்தில் Food என குறிப்பிடுவது போல அவர்கள் அதையே Anna அனா அழைக்கிறார்கள். அது போல,
Aussie - Australian
Brissie - Brisbane
Footie - Football
G'day - Good day
Arvo - Afternoon
Barbie - Barbeque
நீங்கள் ஆஸ்திரேலியா செல்ல நேரிடும் போது இது போன்ற வார்த்தைகளை தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.
Read : 11 Interesting Facts About Indonesia
![]() |
image source tripsiublog.com |
![]() |
image source dailytelegraph.com |
14. Cattle station எனப்படும் உலகின் மிகப்பெரிய கால்நடை பராமரிப்பு நிலையம் ஆஸ்திரேலியாவில் தான் உள்ளது. இதன் பரப்பளவு 23,677 கிலோ மீட்டர். இது கிட்டத்தட்ட இஸ்ரேல் நாட்டை விட பெரியது எனலாம். மேலும் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரை போன்று 7 மடங்கு பெரியது
15. ஆஸ்திரேலியாவின் New South Wales என்ற இடத்தில் சுமார் 6000 ஆண்டுகளாக ஒரு மலைப்பகுதி எரிந்த நிலையில் காணப்படுகிறது. அதுவும் நிலத்திலிருந்து 100 அடி ஆழத்திற்கு கீழே அதன் வெப்பம் உணரப்படுகிறது. இது இயற்கையாக நிலக்கரி எரியும் நிலை ( coal seam fire ) என கூறப்படுகிறது.
0 Comments