Post Office Saving Account Giving Unbelievable Features

 நம்பமுடியாத பல அம்சங்களுடன் நமது அஞ்சலக சேமிப்பு திட்டம் ( Post Office Saving Account )

Post Office என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது தபால் மற்றும் பார்சல் சர்வீஸ் மட்டுமே. நம்மில் பல பேருக்கு வங்கியில் பணம் சேமிப்பது போல் இந்திய அஞ்சல் மூலமாக பணம் சேமிக்கும் திட்டம் பற்றி தெரிவதில்லை. தற்போது தனியார் வங்கிகள் கொடுக்கும் அனைத்து சேவைகளையும் நீங்கள் அஞ்சல் துறையின் மூலமாக பெற முடியும்.




தற்போது அனைத்து  வங்கிகளும் கட்டாய வைப்பு நிதியாக குறைந்தது 1000 முதல் முதல் 5000 வரை நிர்ணயித்து விட்டது, அரசு வங்கிகள் உட்பட. ஆனால் நீங்கள் வெறும் 50 ரூபாயை மட்டும் வைத்துக்கொண்டு அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கை துவங்க முடியும், மேலும் வெறும் 50 ரூபாயை மட்டும் கட்டாய வைப்பு நிதியாக இந்த அக்கௌன்ட்டில் வைத்திருந்தால் போதும். மேலும் தனியார் வங்கிகளுக்கு நிகராக   பல லாபகரமான விஷயங்கள் அஞ்சல் துறையின் மூலம் நீங்கள் பெற முடியும். அதைப்பற்றி விரிவாக நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

சிறப்பு அம்சங்கள்:

1. For Account Open    = 50 ரூபாய்
2. Minimum Balance     = 50 ரூபாய்
3. Free ATM ( No Additional Fee )
4. Free Mobile Alerts
5. Mobile Banking & Net banking 
6. Unlimited Deposit ( No Charges )


 கணக்கு துவங்க:

1. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 தேவை

2. உங்கள் ஆதார் அட்டை மற்றும் வாகன உரிமம. வாகன உரிமம் இல்லையென்றால் வாக்காளர் அட்டை வைத்துக்கொள்ளவும்

3. 50 ரூபாய் பணம் ( உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் )


Read : Why Most Planes Painted Are White??


 ஆரம்பத்தில் நிறைய சலுகைகளை அள்ளி  தந்த வங்கிகள் தற்போது தங்களது பிடியை மிகவும் இறுக்கி விட்டனர். அந்த வகையில் பார்க்கும் போது  தங்களின் சிறு சேமிப்புகளுக்கு நீங்கள் தாராளம் இந்த அஞ்சல் வங்கியை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த அஞ்சல் வங்கியின் சில சிறப்பம்சங்களை இங்கே நாம் பார்க்கலாம்.

image source makmyemoney.com



#1  நீங்கள் உங்கள் கணக்கை துவங்க 50 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். கட்டாய வாய்ப்பு நிதியாக அந்த 50 ரூபாயை பராமரித்தாலே போதுமானது.

#2  Joint Account என சொல்லப்படும் இருவர் சேர்ந்து ஒரு கணக்கை வைத்துக்கொள்ளலாம்.

#3  இரண்டு நாட்களில் ATM உங்களுக்கு கிடைக்கும், அதுவும் நீங்கள் கணக்கை திறந்த உங்கள் கிளை அஞ்சலகத்திலேயே அதை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு எந்த கட்டணமும் கிடையாது. இதை பயன்படுத்தி நீங்கள் அனைத்து  தபால் ATM களில் எத்தனை  முறை வேண்டுமானாலும் இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு அதிபட்சமாக 25,000 வரை எடுத்துக்கொள்ளலாம்.

#4 நீங்கள் பிற வங்கி ATM களையும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் மாதத்திற்கு மூன்று முறை மட்டும் இலவசமாக பிற வங்கி ATM களில் பணம் எடுத்துக்கொள்ளலாம். இதற்கு எந்த சேவைக்கட்டணமும் பெறப்படாது. மூன்று தடவைக்கு மேல் பிற வாங்கி ATM களில் பணம் எடுத்தால் மற்ற வங்கிகளை போல சிறு தொகை சேவைக்கட்டணமாக விதிக்கப்படும்.

#5 மற்ற வங்கிகளைப்போலவே உங்களுக்கு Free Mobile Alerts வசதி உள்ளது, இதற்கு எந்த கட்டணமும் கிடையாது.

#6 தற்போது அனைத்து வங்கிகளிலும் உங்கள் பணத்தை டெபாசிட் செய்ய குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் உள்ளது. மாதத்தில் குறிப்பிட்ட அளவு தான் நீங்கள் டெபாசிட் செய்ய முடியும், அதற்கு மேல் அதிக தடவை நீங்கள் பணத்தை  டெபாசிட் செய்தால் அதற்கு குறிப்பிட்ட தொகை பிடித்தம் உள்ளது. ஆனால் அஞ்சல் வாங்கி கணக்கில் நீங்கள் உங்கள் PAN Number ஐ பதிவு செய்துவிட்டால் unlimited ஆக எவ்வளவு வேண்டுமானாலும், எத்தனை  முறை வேண்டுமானாலும் டெபாசிட் செய்து கொள்ளலாம். இதற்கு எந்த  ஒரு கட்டணமும் கிடையாது.


image source FreeFincal

image source Livemint

#7 மற்ற வங்கிகளில் உள்ளது போலவே அஞ்சல் கணக்கிற்கும் நெட் பாங்கிங் மற்றும் மொபைல் பாங்கிங் சேவைகள் தரப்படுகிறது. நீங்கள் உங்கள் அஞ்சலக கணக்கை நீங்களே கையாள முடியும். மேலும் ஆன்ராய்ட் மொபைல் அப்ப்ளிகேஷனும் தரப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் மின்சார கட்டணம், தண்ணீர் வரி, மொபைல் ரீசார்ஜ் போன்றவற்றை செய்து கொள்ளலாம். மேலும் பிற வங்கிகளுக்கு பணப்பரிமாற்றம் செய்யும் வசதியும் உள்ளது.

you tube : online banking


#8  நீங்கள் உங்கள் பணத்தை பரிமாற்றம் செய்ய IMPS மற்றும் NEFT ஆகிய சேவைகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் beneficiary எனப்படும் நீங்கள் பதிவு செய்ய விரும்பும் உங்கள் நண்பர்களின் அக்கௌன்ட் நம்பர்களை  இதில் பதிவு செய்து கொள்ளலாம்

#9  பிற வங்கிகள் போலவே உங்கள் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்திற்கு 4% சதவீதம் வட்டி உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.


Read: McDonald's Banned Countries In The World




image source business-standard.com


#10  அஞ்சல் சேமிப்பு கணக்கு நடுவண் அரசின் கீழ் உள்ளதால் உங்கள் பணத்திற்கு பாதுகாப்பும் அதிகம் எனலாம்.

#11 மேலும் 6.5 % சதவீதம் லாபம் தரும் Fixed Deposit, பெண் குழந்தைகளுக்கான பல பயனுள்ள சேமிப்பு திட்டங்கள், 5 வருட அதிக லாபம் தரும் சேமிப்பு திட்டங்கள் என பல அம்சங்கள் இங்கே உள்ளது. மேலும் வங்கிக்கடன் போலவே Loan Facility யும் உள்ளது.

 #12  வேலை நாட்கள் என்று பார்த்தல் திங்கள் முதல் சனி வரை செயல்படும். காலை 9 மணி முதல் 3 மணி வரை வேலை நேரம். சனிக்கிழமை 1 மணி வரை மட்டுமே.

 பெரிய வரவு செலவு இன்றி தான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பொருளாதாரத்தை சேமிக்க நினைக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இந்த அஞ்சல் சேமிப்பு வங்கி  மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


Post a Comment

0 Comments