இந்த நிலையில் படுத்து உறங்கினால் உங்கள் ஆரோக்யம் கேள்விக்குறி தான்
உலகில் உள்ள பல மக்களிடம் அவர்கள் உறங்கும் நிலையை பற்றி ஒரு சர்வே எடுக்கப்பட்டது. அந்த சர்வேயில் பெரும்பாலும் மக்கள் தலை குப்புற படுக்கும் நிலையை விரும்புகிறார்கள். அந்த நிலையில் உறங்குவது தான் மிகவும் சொகுசாக இருப்பதாக எண்ணுகிறார்கள். ஆனால், அந்த நிலையில் படுத்து உறங்குவது மிகவும் தவறானது மற்றும் உங்களது ஆரோக்கியத்திற்கும் தீங்கானது. இது ஒருவேளை உங்கள் வாழ்க்கைக்கே பெரும் ஆபத்தாக முடியலாம்.![]() |
image source verywellhealth.com |
1. நீங்கள் தலைகுப்புற நிலையில் உறங்கும்போது உங்களின் தலை ஒரு புறமாக திரும்பி இருக்கும். இதனால் உங்கள் மூளைக்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவு வெகுவாக குறைந்து விடுகிறது. அதேபோல உடம்பில் கெட்ட கொளுப்புக்கள் தேங்கி விடுகின்றன. மேலும் இந்த நிலையில் உறங்கும்போது மூளைக்கு செல்லவேண்டிய பிராண வாயு முழுமையாக தடைப்படுகிறது.
![]() |
image source CGTrader |
2. இந்த நிலையில் உறங்கும்போது மார்புக்கூடு மேல் அதிகப்படியான அழுத்தம் ஏற்படுகிறது. நுரையீரல் மேல் ஏற்படும் அழுத்தத்தால் உங்களது சராசரியான சுவாசம் தடைபடுகிறது. மேலும் இந்த நிலையில் தூங்கி எழுந்திருக்கும்போது நீங்கள் அதிகப்படியான உடல் அசதியை உணர்வீர்கள். மேலும் நன்றாக உறங்கி எழுந்தவுடன் கிடைக்கும் உற்சாகத்தை நீங்கள் இழக்கிறீர்கள். மேலும் மார்புத்தசைகளின் மேல் ஏற்படும் அதிகப்படியான அழுத்தத்தால் மார்பக வீக்கம், மார்பில் நீர்க்கட்டி உருவாகுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
![]() |
image source MedicineNet |
3. இதே நிலையில் நீங்கள் உறங்கும்போது உங்களின் வயிற்றுப்பகுதியில் அதிகப்படியான அழுத்தம் உண்டாகிறது. இதனால் வழக்கமான அதன் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் உங்கள் ஆரோக்யம் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. இதே நிலையில் நீங்கள் தொடர்ந்து உறங்கும் போது Acid Reflux என்ற பாதிப்புக்குள்ளாகி வயிறு உப்புதல், வாயுப்பிரச்சனை மற்றும் அல்சர் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
Read: Impacts of Gay, Lesbian, and Bisexual Community
![]() |
image source 1075koolfm.com |
![]() |
image source self.com |
4. தலை குப்புற நிலையில் தூங்கி எழுந்தவுடன் உங்களின் முகத்தை நீங்கள் கண்ணாடியில் பார்த்ததுண்டா?? ஒரு நாள் இரவு முழுக்க நீங்கள் உங்கள் முகத்தை தலையணையில் புதைத்து உறங்குவதால், உங்கள் முகத்தில் முற்றிலுமாக இரத்த ஓட்டம் தடைபடுகிறது. தொடர்ந்து முகத்தில் ஏற்படும் தொடர் அழுத்தத்தினால் முகத்தில் ஏற்படும் நீர்தேக்கத்தின் காரணமாக உங்கள் முகம் ஈரப்பசையை இழந்து காணப்படும், முக்கியமாக உங்களின் மூக்கு மற்றும் கன்னம். மேலும் தொடர்ந்து அழுத்தி நெருக்கி அதாவதொரு elastic போன்ற அசைவுகளால் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுகிறது. மேலும் இந்த சுருக்கங்கள் உங்கள் தோள்பட்டை மற்றும் மேல் உடற்பகுதியிலும் படர்கிறது.
5. கழுத்து திரும்பிய நிலையில் ஒரு நாள் முழுக்க நீங்கள் தூங்கும்போது கழுத்தின் ஒரு பகுதியின் இரத்த ஓட்டம் முற்றிலும் தடைபடுகிறது. இதனால் நீங்கள் தூங்கி எழுந்தபிறகு வலியும், கழுத்து சுளுக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இதை தவிர்க்க நீங்கள் உங்கள் தலையணையை கழுத்தோடு சேர்த்து வைப்பது சிறந்தது. இதன் மூலம் இது போன்ற பிரச்னையை தவிர்க்கலாம்.
Read : Why Most Planes Painted Are White??
![]() |
image source mirror.co.uk |
6. இந்த நிலையில் நீங்கள் உறங்கும்போது உங்கள் முதுகுத்தண்டில் பெரிய அளவில் அழுத்தம் ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சியாக முதுகுத்தண்டில் வலி ஏற்படுகிறது.
7. இதயம் தொடர்ந்து அழுத்தப்படுவதால் மனஅழுத்தம் ஏற்பட்டு சீரற்ற நிலையில் இரத்தம் பாய்கிறது. மேலும் சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படுகிறது.
Read: Must You Listen Start Jogging
![]() | |||||||||||||||
image source mycirclecare.com |
![]() |
image source thestar.com |
8. சில ஆடைகளில் பட்டன்கள் மற்றும் சில அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்கும். சில பேர் ஆடைகளில் உள்ள பாக்கெட்டுகளில் பொருட்களை வைக்கும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். அந்த ஆடையை உடுத்த நிலையில் நீங்கள் குப்புற படுத்து உறங்கும்போது அந்த பொருட்களினால் உடலில் குறிப்பிட்ட இடத்தில் அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் அசவுகரியத்தால் உங்களது தூக்கம் பாதிக்கப்படுகிறது.
9. நீங்கள் நேரடியாக வானத்தை பார்த்த நிலையில் உறங்கும்போது கீழ்இடுப்பு பகுதியில் ஏற்படும் வியர்வையால் அந்த இடத்தில அரிப்பு ஏற்படுகிறது.
10. நீங்கள் இடது புறமாக திரும்பிய நிலையில் உறங்கும்போது Acid Reflux பிரச்னை ஏற்பட்டு உடல் பருமன் உட்பட பல பிரச்சனைகள் உடலில் ஏற்படுகிறது. மேலும் பல கெட்ட கனவுகள் இடதுபுறமாக படுத்து உறங்குபவர்களுக்கு வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
![]() |
image source Pinterest.com |
![]() |
image source pregnancy pillow |
11. வலது புறமாக ஒருக்களித்து படுப்பதே படுக்கையில் சிறந்த நிலையாகும். அவ்வாறு நீங்கள் உறங்கும்போது உங்களுடைய இரத்த ஓட்டம் சீராக இருக்கும், மேலும் உங்களுடைய ஞாபக மறதி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடல் சார்ந்த இடையூறுகளில் இருந்து விடுபடலாம்.
12. பொதுவாக நீங்கள் சரியான படுத்து உறங்கும் வழிமுறையை கடைபிடித்தால் நிம்மதியான உறக்கம், மற்றும் ஆரோக்கியமான வாழ்விற்கு அது அடித்தளமாக இருக்கும். சரியான தூக்கம் இருந்தாலே உங்களுடைய உடலில் உள்ள பெரும்பாலான பிரச்சனைகள் தீர்ந்து விடும். எனவே, உறங்கும் வழிமுறையை தேர்ந்தெடுப்பதில் கவனமாக செயல்படுவது முக்கியமான ஒன்று.
0 Comments