தூங்கிய நிலையில் 96 kmph வேகத்தில் கார் ஓட்டி அதிர வைத்த ஜோடிகள்
நவீன உலகத்தில், எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு பல முன்னணி கார் நிறுவனங்கள் மின்சார கார்களை போட்டி போட்டு தயாரிக்கின்றனர். அதில் ஒரு முன்னணி கார் நிறுவனம் தான் டெஸ்லா.அமெரிக்காவில் இந்த கார்கள் மிகவும் பிரபலமாக உள்ளது. 200 மைல் வேகம், ஆட்டோ பைலட் வசதி, பேட்டரி சார்ஜ் செய்யும் வசதி மற்றும் மேலும் பல அம்சங்கள் இந்த காரில் உள்ளது. இந்த காரின் ஆரம்ப விலையே 50 லட்ச ரூபாய். ஆனாலும், இந்த காரின் வியாபாரம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்த காரில் உள்ள ஒரு சிறப்பம்சமே தற்போது ஒரு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் Dakota Randall என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஒரு வீடியோ. இந்த வீடியோ மிகவும் வைரலாகி பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இந்த வீடியோவை அவரே தனது மொபைல் மூலம் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் டெஸ்லா நிறுவன கார் ஒன்று சுமார் 90 முதல் 95 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த காரின் ஓட்டுநர் உறங்கிக்கொண்டு உள்ளார். மேலும் அவருடன் அவரது தோழி ஒருவரும் முன் இருக்கையில் அமர்ந்து உறங்கிக்கொண்டு உள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ரேண்டால் பல முறை அபாய ஒலியை எழுப்பியுள்ளார், ஆனால் அவர்கள் அதை சட்டை செய்யாமல் மிகவும் அயர்ந்து உறங்கிக்கொடுள்ளனர்.
டெஸ்லா நிறுவன கார்களில் ஆட்டோ பைலட் எனப்படும் தானியங்கி வசதி உள்ளது. வாகன ஓட்டுநர் காரின் ஸ்டியரிங்கை இயக்க வேண்டியதில்லை. அவர்கள் அந்த வசதியை தேந்தெடுத்து விட்டு உறங்கிக்கொண்டு இருப்பது பிறகு தெரிந்தது. சுமார் 20 வினாடிக்கு மேல் அவர் இந்த விடியோவை பதிவு செய்துள்ளார். கார் ஓட்டுநர் தானியங்கி வசதியை நம்பி உறங்குவதும், காரின் 90 கிலோமீட்டர் வேகமும் பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இது சாலை போக்குவரத்து பாதுகாப்பு சம்பந்தமாக பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
Read: World's Top 10 Fastest Animals in Land
அதேவேளை இந்த வீடியோவை படம் பிடித்த Dakota Randall கூறும்போது, அந்த சம்பவம் வினோதமாக இருந்ததால் தான் நான் அதை படம் பிடித்தேன். ஒரு வேலை அந்த காரில் பயணித்தவர்கள் வேண்டுமென்றே நடித்தார்களா என்று எனக்கு தெரியாது. மேலும் இந்த விடியோவை பதிவு செய்வதில் எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என அவர் கூறுகிறார்.
Read: Top 5 Greatest masked villains of all time
இந்த சர்ச்சைக்கு நடுவே டெஸ்லா நிறுவனத்திற்கு ஆதரவாக பல மக்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Read: World Top 5 Biggest Police Officers
Read: Top 10 Unique Facts Of Asia
0 Comments