காப்பர் - டி ( Copper - T ) பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்
கருத்தடை முறை எனும் போது உலக அளவில் அதிக அளவு புழக்கத்தில் இருப்பது அறுவை சிகிச்சை முறை தான். அறுவை சிகிச்சை மூலம் முற்றிலுமாக கரு உருவாவதை தவிர்த்து விடலாம். இதற்கு அடுத்த இடத்தில் இருப்பது கருத்தடை மாத்திரைகள். இவை தற்காலிகமாக கரு உருவாவதை தவிர்க்க பயன்படுத்தப்படுகிறது. தற்காலிக கருத்தடைக்கு தற்போது கருத்தடை மாத்திரைகளுக்கு அடுத்து பிரபலமாகி வருவது காப்பர்-டி எனும் முறை. நாம் இங்கே பார்க்கப்போவதும் இந்த காப்பர்-டி பற்றி தான்.![]() |
image source scientific animations |
காப்பர்-டி பற்றி சில வரியில்:
ஐ.யூ.டி (Intra Uterine Device) எனப்படும் இந்த சாதனம் பல வடிவில் உள்ளது, ஆனால் இந்தியாவில் T வடிவிலான சாதனம் தான் பிரபலம். எனவே இது காப்பர்-டி என இங்கு அறியப்படுகிறது. பிளாஸ்டிக் மற்றும் காப்பர் உலோகத்தால் இந்த சாதனம் உருவாக்கப்படுகிறது. இந்த சாதனம் 12 ஆண்டு வரை உங்களுக்கு பலனளிக்கும் என உத்தரவாதம் தரப்படுகிறது. இந்த காப்பர்-டி ஐ ஆசியாவில் 27%, வட அமெரிக்காவில் 6.1% மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் 2% பேர் பயன்படுத்துகின்றனர்.
இது எவ்வாறு செயல்படுகிறது என பார்த்தால், இந்த கருவியை பெண்ணின் கருப்பையில் பொருத்தி விடுகிறார்கள். உறவின் போது பெண்ணின் கருப்பையில் நுழையும் விந்தணுக்களை இந்த சாதனத்தில் உள்ள தாமிரமானது முற்றிலுமாக அழித்து விடுகிறது, எனவே பெண்கள் கருவுருவதற்கான வாய்ப்பு தவிர்க்கப்படுகிறது. இவ்வாறு தான் இந்த சாதனம் வேலை செய்கிறது.
![]() |
image source Getty images |
Read: Average Age Of Lose Virginity By Countries
காப்பர்-டி ஆல் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்:
1. காப்பர்-டி அணிவதால் சில பெண்களுக்கு அதிகமான ரத்த போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய் போன்றவை நிகழ்கிறது.
2. காப்பர்-டி சரியாக பொருத்தப்படவில்லை என்றால் உள்ளேயே சீல் பிடித்து துர்நாற்றம் அடிக்க ஆரம்பிக்கிறது, பிறகு இதனால் நோய்த்தொற்று ஏற்படுகிறது.
3. காப்பர்-டி ஐ 6 மதத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள், காரணம் இதில் உள்ள காப்பர் தான் கரு உருவாவதை தடுக்கிறது, இதில் காப்பர் இல்லாமல் போனால் அணுக்கள் இதை துளைத்துக்கொண்டு கருப்பையில் சென்று விடும்.
![]() |
image source hindigagan.com |
![]() |
image source medical news today |
4. காப்பர்-டி சரியாக பொறுத்தப்படாத நிலையில் கருத்தரித்து விட்டால், கரு கருப்பையில் உருவாவதற்கு பதிலாக கருக்குழாயில் உருவாகி விடும். அவ்வாறு நடந்தால் அறுவை சிகிச்சை மூலம் தான் இதை சரி செய்ய முடியும்.
5. திருமணம் ஆகாத பெண்கள் இதை உகயோகிப்பதை தவிர்க்க வேண்டும், ஏனென்றால் பிற்காலத்தில் உங்களுக்கு கரு தங்காமலேயே போயிடலாம்.
6. காப்பர்-டி கர்ப்பபைக்கு உள்ளே இருந்தால் மயக்க மருந்து கொடுத்து அதை எடுக்க முடியும், ஒரு வேலை பெண்ணுக்கு வலி தாங்க முடியாமல் அதிர்ச்சியில் உயிர் பிரியும் அபாயமும் உள்ளது.
Read : Must You Listen Before Start Jogging
இதனால் வெறும் தீமைகள் மட்டுமே ஏற்படுகிறது என சொல்லி விட முடியாது, நன்மையான விஷயங்களும் உண்டு, அதைபற்றி இங்கு பார்க்கலாம்.
1. ஒரு காப்பர்-டி ஐ நீங்கள் பொருத்திக்கொண்டால் அதன் தரத்தை பொறுத்து 12 ஆண்டுகள் வரை அது பயனளிக்கும். ஆனால் லாப நோக்கங்களுக்காக இது பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படுவதில்லை.
2. பொதுவாக கருத்தடை மாத்திரைகளே அதிக அளவில் விளம்பரம் செய்யப்படுகிறது, இதனால் அதிக அளவு லாபம் கிடைக்கிறது.
![]() |
image source TheHealthSite.com |
3. உலகம் முழுவதும் உள்ள பெண்கள் எழுந்தவுடனே கருத்தடை மாத்திரைகளை சாப்பிடுவதாக ஒரு சர்வே கூறுகிறது. இந்த மாத்திரையில் உள்ள ரசாயன கலவை உங்கள் கருத்தரிப்பதற்கான வாய்ப்பை 1% ஆக மாற்றி விடுகிறது. பிறகு நீங்கள் குழந்தைகள் வேண்டும் எனும்போது கரு உருவாக பல ஆயிரங்கள் அல்லது லட்சங்கள் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
4. கருத்தடை மாத்திரை சாப்பிட்ட பின்னரும் ஒரு வருடத்திற்கு 1,60,000 பெண்கள் கருத்தரிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது.
![]() |
image source :h9224209.beget.tech |
இப்படி ஒப்பிடும் பொழுது நீங்கள் கருத்தடை மாத்திரைக்கு பதிலாக காப்பர்-டி ஐ தேர்வு செய்யலாம். ஆனால் காப்பர்-டி அணிந்த பிறகு அதிகப்படியான ரத்தப்போக்கு, நோய்தொற்று ஏற்பட்டால் மருத்துவரிடம் சென்று இதை கழட்டி விடுவது நல்லது.
0 Comments