What happen To You After Bites Mosquitoes

உங்களை கொசு கடித்த பிறகு என்ன நடக்கிறது தெரியுமா??

நீங்க ஒரு பூங்காவில் இருந்தாலும் சரி, அல்லது உங்கள் நபர்களுடன் எங்காவது சுற்றுலா சென்றாலும் சரி அல்லது உங்கள் வீட்டிலேயே இருந்தாலும் சரி, அழைக்கா விருந்தித்தாளியாக நிச்சயம் வந்து விடுவார்கள்  இந்த கொசுக்கள்.

image source Cambridge news

இயற்கை பல விசித்திர உயிரினங்களுக்கு உலகத்தில் இடம் கொடுத்துள்ளது. ஒரு ஆக்டோபாஸாக இருந்தாலும் சரி அல்லது ஜெல்லி மீனாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு உயிரினத்திற்கும் பல வித்தியாசமான தகவமைப்புகளை இயற்கை கொடுத்துள்ளது, அதைப்போலத்தான் இந்த கொசுக்களுக்கும்.

image source lapazgroup.net

image source pest strategies

 Read : சவுதி அரேபியாவில் நீங்கள் கட்டாயம் செய்யக்கூடாத டாப் 10 விஷயங்கள்


இந்த கொசுவின் ஆரம்பம் என்று பார்த்தால் 50 முதல் 100 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இருக்கலாம் என வல்லுநர்கள் கருதுகின்றனர். கிட்டத்தட்ட அது டைனோசர் வாழ்ந்த காலம். அவைகளையே இந்த கொசு விட்டுவைக்கவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . உலகின் எப்படிப்பட்ட இடங்களிலும் வாழக்கூடிய தன்மை கொண்டது இந்த கொசுக்கள் . இவற்றிற்கென்று எந்தவொரு பருவநிலையும் கிடையாது. உலகத்தில் 3000 வகையான கொசுக்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது தங்களை காத்துக்கொள்ள மற்றும் எண்ணிக்கையை பெருக்கிக்கொள்ள சிறு நீர் தேக்கங்கள் போதுமானது.

மற்ற உயிரினங்களை போலவே கொசுவிலும் ஆண், மற்றும் பெண்  பாலினங்கள் உள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் பெண் கொசுக்கள் மட்டும் தான் ரத்தத்தை உருஞ்சிகின்றன. ஆனால், ஆண்  கொசுக்கள் பூக்கள் மற்றும் தாவரங்களிடம் இருந்து  தான் உணவை எடுத்துக்கொள்கின்றது. மொத்தத்தில் ஆண் கொசுக்களை சைவ பிரியர்கள் என கூறினாலும் தவறில்லை. மேலும் உருவ அளவில் ஆண் கொசுவை விட பெண் கொசுதான் பெரியது. மேலும் பொதுவாக ஆண் கொசுக்கள் நம்மை கடிப்பதில்லை. மேலும் பெண் கொசுதான் ரிங்கார சப்தத்தை எளுப்பிக்கொண்டு செல்கிறது. இது ஒருவகையில் எதிர்பாலின கொசுக்களுக்கு தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒரு வழிமுறை என்றும் சொல்லலாம்.

image source:   WebMdகொசுக்களின் ஆயுள் பற்றி பார்த்தால் அதிகபட்சம் ஒரு மாதம் முதல் இரண்டு மாதங்கள். அதிலும் ஆண் கொசுக்களின் ஆயுட்காலம் வெறும் இரண்டு வாரங்கள் தான். மனிதர்களில் ஆண்களைப்போல கொசுக்களின் சமுதாயத்தில் துறுதுறுவென்று ஓடிக்கொண்டே இருப்பவர்கள் பெண் கொசுக்கள் தான். அதற்கு தகுந்த வேட்டையாடும் இடங்களை தேர்வு செய்ய இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர் வரை பயணம் மேற்கொள்கின்றது.

How to find you
infabbleisland.com

கொசுக்கள் உங்களின் உடல் உஷ்ணத்தை வைத்தே உங்களை அடையாளம் கண்டு கொள்கிறது. மேலும் நாம் விடும் மூச்க்காற்றின் அழுத்தத்தை வைத்தே மனிதர்கள் இருக்கும் தூரத்தை கணித்துவிடுகிறது. 20 மீட்டர் தொலைவில் இருந்தே உங்களை கொசுக்களால் உணர முடியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

Read:  WWE சூப்பர்ஸ்டார்களால் செய்யப்பட்ட 6 கின்னஸ் சாதனைகள்

 


Important Body Organs 

image source mnn.com

கொசுக்களுக்கு உதவும் உறுப்புகள் என்று பார்த்தால் நூற்றுக்கணக்கான லென்ஸை கொண்ட அவற்றின் கூர்மையான கண்கள், மற்றும் உடல் முழுதும் உள்ள சிறிய ரோமங்களின் மூலம் பெரிய விலங்குகளின் அசைவுகளை  கொசுக்களால் உணர முடியும். முதலில் கொசுக்கள் தங்களது இரையை சரியாக தேர்ந்தெடுத்துக்கொள்கிறது. முடிந்த அளவு அசைவு இல்லாத ஆட்களை தேர்வு செய்கிறது.  சரியாக மூன்று நிமிடம் கிடைத்தால் அதன் வயிறு நிரம்பும் அளவுக்கு இரத்தத்தை குடித்துவிடும். கொசுக்கள் ரத்தம் உறிய பயன்படுத்தும் கூர்மையான குழல்பகுதியானது 5 அடுக்கு குழல்களால்  உருவானது. எனவே தான் அதனால் அழுத்தமாக மனிதனின் தோலை துளைக்க முடிகிறது. அதனால் தான் கொசு நம்மை கடிக்கும்பாது ஊசி குத்துவது போல் வலி ஏற்படுகிறது.

கொசுக்கள் ரத்தத்தை உறிஞ்சுவது மட்டும் கிடையாது, சில வேதிப்பொருட்களை நமது உடலில் செலுத்துகிறது. அது குடிப்பிட்ட இடத்தில  இரத்த ஓட்டத்தை குறைக்கிறது, இதன் காரணமாகத்தான் கொசு கடித்த இடத்தில சிவப்பு நிற திட்டுகள் தோன்றுகிறது. இதனால் தான்  உடலில் நோய்த்தொற்றுகள் ஏற்படுகின்றன.


Why mosquito Need Blood?

image source wired.com


image source endmosquitoes.com

ஆண் கொசுக்கள் தங்களுக்கு தேவையான உணவை பூக்கள் மற்றும் தாவரங்களில் இருந்து பெற்றுக்கொள்கிறது. ஆனால் பெண் கொசுக்களுக்கு அதிகப்படியான புரோட்டீன் மற்றும் சத்துக்கள் தேவைப்படுகிறது. காரணம் பெண்கொசுக்களுக்கு ஒருநாளில் பலமுறை முட்டையிட வேண்டும், அதற்கு பெண் கொசுக்களுக்கு அதிகப்படியான சத்துக்கள் தேவைப்படுகிறது. எனவே அதன் காரணமாக  அது ரத்தத்தை தேர்வு செய்கிறது.


Read :

McDonald's Banned Countries In The World Read : 

Why Most Planes Painted Are White??Post a Comment

0 Comments