உலகின் முன்னணி பிராண்டுகளின் லோகோக்களில் ( Logo ) மறைந்துள்ள ரகசியங்கள்
உலகில் நாம் நிறைய பிராண்டுகள் பற்றி கேள்விப்பட்டிருப்போம். உதாரணத்திற்கு டொயோட்டோ, கோகோ கோலா, பிஎம்டபிள்யூ, எல்ஜி மற்றும் மேலும் பல முன்னணி பிராண்டுகள். இந்த ஒவ்வொரு பிராண்டுகளுக்கும் தனக்கென ஒரு அடையாளத்தை வைத்துள்ளனர். அதாவது லோகோ ( Logo ) எனப்படும் குறிப்பிட்ட அடையாளங்களை கொண்டுள்ளனர்.![]() |
image source lawmacs.com |
அந்த லோகோவை பார்த்தாலே குறிப்பிட்ட இந்த பிராண்டுடைய தயாரிப்பு தான் இது என அடையாளம் கண்டுவிடலாம். அந்த லோகோ வெறும் குறியீடாக மட்டும் இல்லாமல் ஒவ்வொரு லோகோவும் ஒரு தனித்துவமான அர்த்தத்தை கொண்டுள்ளது. அந்த குறியீட்டில் உள்ள ஒவ்வொரு நிறம் மற்றும் வரிகளுக்கு கூட ஒரு அர்த்தம் இருக்கும். அப்படி புகழ் பெற்ற சில பிராண்டுகளின் லோகோவுடைய ( Logo ) அர்த்தங்களை நாம் இந்த பதிவின் மூலம் காணலாம்.
1. Hyundai
![]() |
image source Car From Japan |
ஹூண்டாய், இது பிரபலமான கார் நிறுவனம். இதைப்போலவே இந்த கம்பெனியின் லோகோவும் பிரபலம். பலரும் இந்த பிராண்டுடைய முதல் எழுத்து தான் இந்த லோகோ என நினைக்கின்றனர். ஆனால், உண்மையில் இரு நபர்கள் கைகுலுக்குவது போன்று தான் இந்த லோகோ உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்புறம் பார்க்க சாதாரண ஒரு ஆங்கில எழுத்து போன்று இருந்தாலும் உண்மையில் இது தான் அதன் பொருள்.
2. Apple
![]() |
image source The Irish Times |
உலகின் மிகவும் புகழ் பெற்ற கம்பெனி ஆப்பிள் நிறுவனம், அதைப்போன்றே அதன் லோகோ மிகவும் பிரபலம். முதன் முதலாக இந்த நிறுவனத்தின் லோகோவை உருவாக்க பல ஆப்பிள்களின் வடிவத்தை சோதித்துள்ளனர். அந்த டிசைனானது சிம்பிளாகவும் இருக்க வேண்டும், மேலும் தனித்துவமாகவும் இருக்க வேண்டும். பல வாரங்கள் இதற்காக செலவிடப்பட்டது. அப்போது தற்செயலாக அமைந்த ஒரு வடிவம் தான் ஒரு முறை கடிக்கப்பட்ட நிலையில் இருந்த இந்த ஆப்பிள். தற்போது இந்த லோகோ உலகின் மிகவும் பிரசக்தி பெற்ற ஒரு அடையாளமாக திகழ்கிறது.
Read More : நகரத்தின் மொத்த மக்களும் ஒரே கட்டிடத்தில் வாழும் வினோதம்
3. VAIO
![]() |
image source The Logo Smith |
ஜப்பானை சேர்ந்த ஒரு பிரபல நிறுவனம் தான் இந்த VAIO. இது ஒரு டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் லோகுவின் முதல் இரு எழுத்துக்கள் அதிர்வலைகளை குறிக்கும் waves களை அடையாளப்படுத்துகிறது. கடைசி இரண்டு எழுத்துக்கள் கணினியின் டிஜிட்டல் சிக்னலான 1 மற்றும் 0 ஆகும்.
4. Toyota
![]() |
image source Japan Travel Cafe |
![]() |
image source Pinterest |
டொயோட்டா ஜப்பானின் மிகப்பிரபலமான மோட்டார் வாகனங்கள் தயாரிப்பு நிறுவனம். 1920 ன் ஆரம்பத்தில் இந்த நிறுவனம் ஆட்டோமேட்டிக் லூம் எனப்படும் துணி நெய்யும் இயந்திரத்தை தயாரித்து வந்தனர். அதை நியாபகப்படுத்தும் விதமாக ஊசியில் நூல் கோர்க்கும்படி உருவாக்கப்பட்டதே இந்த லோகோ. மேலும் இந்த லோகோவில் ஒவ்வொரு எழுத்தும் நிறுவனத்தின் பெயரை உச்சரிக்கும் வகையில் இருக்கும்.
5. Continental
இந்த நிறுவனம் ஒரு பிரபலமான வாகன டயர் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் லோகோவின் முதல் இரண்டு எழுத்துக்கள் காரின் டயர்களை அடையாளப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
Read More : ராயல் என்ஃபீல்ட் " Bullet " உருவான கதை
6. Adidas![]() |
image source Woden |
இந்த நிறுவனம் சர்வதேச அளவில் விளையாட்டு உபகரணங்களை தயாரிக்கும் ஒரு பெரிய நிறுவனம். இதன் உரிமையாளர் பெயர் அடால்ப் டாசலர்( Adolf Dassler ). இவரின் பெயர் சுருக்கமே இந்த நிறுவனத்தின் பெயராகும். இந்த நிறுவனத்தின் லோகோ மூன்று முறை மாற்றப்பட்டுள்ளது, இருந்தும் இந்த மூன்று லோகோக்களும் மூன்று பட்டைகளைக்கொண்டது. இதன் இறுதியான லோகோவானது ஒரு மலையை நினைவுபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் தங்களது வாழ்வில் ஒவ்வொரு நாளும் பல சவால்களையும், சிக்கல்களும் சமாளித்து முன்னேறி செல்ல வேண்டும் என்பதை கூறும் வகையில் இந்த லோகோ உருவாக்கப்பட்டுள்ளது.
7. Amazon
![]() |
image source Pinterest |
அமேசானின் லோகோ மிகவும் எளிமையாகத்தான் உருவாக்கப்பட்டிருக்கும். மேலும் இந்த லோகோவில் இந்த நிறுவனத்தின் தத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் விஷயம் மக்களை திருப்திப்படுத்துவது, மேலும் இந்த லோகோவில் முதல் எழுத்தில் இருந்து Z என்ற எழுத்திற்கு ஒரு அம்பு குறியீடு இருக்கும். இதற்கு அர்த்தம் A to Z அனைத்து பொருட்களையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே...
Read More : உங்களை வியக்க வைக்கும் 5 விசித்திர இடங்கள்
8. Formula 1
![]() |
image source Race Fans |
பார்முலா 1 என்பது மிகவும் புகழ் பெற்ற கார் பந்தயம் ஆகும். இதன் F1 என்ற லோகோவின் இடைவேளையை உற்று கவனித்தால் அதில் 1 என்ற எண் மறைத்திருக்கும். இது பந்தயத்தில் முதலிடம் பிடிப்பதை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
9. BMW
![]() |
image source autotribute.com |
இது ஒரு புகழ் பெற்ற கார் தயாரிப்பு நிறுவனம் ஆகும். 1916 ல் விமான எஞ்சின் தயாரிப்பில் இந்த நிறுவனம் ஈடுபட்டது. அதை நினைவுபடுத்தும் வகையில் விமான இறக்கையின் வடிவத்தை லோகோவாக வடிவமைத்துள்ளனர். மேலும், ஜெர்மனியில் உள்ள பவேரியா நாட்டின் ( Bavaria ) கொடியை லோகோவின் பின்புற நிறமாக சேர்க்கப்பட்டுள்ளது.
10. LG
![]() |
image source Andrew Kier |
இது பிரபலமான எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம். வாடிக்கையாளரின் முகத்தையே லோகோவாக LG நிறுவனம் வடிவமைத்துள்ளது.மேலும் இந்த லோகோவானது சாதாரண வாடிக்கையாளருக்கும் நிறுவனத்திற்கும் இடையேயான பந்தத்தை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
0 Comments