இந்தியாவில் மட்டுமே பார்க்க முடியும் 15 தனித்துவமான விஷயங்கள்

15 Things That only Possible In India

நிச்சயமாக உலக மக்களின் பார்வையில் இந்தியா ஒரு தனித்துவமான நாடு தான். காரணம், உலகின் 2 ஆவது மக்கள் தொகை கொண்ட நாடு, பல ஆயிரக்கணக்கான கோவில்கள், பல்லாயிரம் மொழி பேசும் மக்கள் மற்றும் பல மதத்தை சேர்ந்த மக்கள் ஒன்றாக வாழும் நிலைபாடு மற்றும் காதல் சின்னம் தாஜ்மஹால் என அடுக்கிக்கொண்டே போகலாம். அவற்றில் சிலவற்றை நாம் இங்கு பார்க்கலாம்.
1. ஆங்கில மொழி அதிகமாக பேசப்படும் உலகின் 2 ஆவது நாடு இந்தியா ஆகும். ஆங்கிலம் பேசும்  நாடுகள் என்று சொன்னாலே நமக்கு நினைவுக்கு வருவது அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகள். அடுத்த முறை ஆங்கிலம் பேசும் உலக நாடுகள் என்று  சொன்னால் நமக்கு முதலில் நினைவுக்கு வர வேண்டிய நாடு இந்தியா தான். கிட்டத்தட்ட 125 மில்லியன் மக்கள் இந்தியாவில் ஆங்கிலம் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இது இந்தியாவின் மக்கள் தொகையில் 10 சதவீதம் ஆகும்.

2. இந்தியாவில் போலீஸ்காரர்கள் மீசை வைத்திருப்பதை கம்பீரமாக கருதுகின்றனர். ஆரம்பகால பொம்மலாட்டத்தில் கூட காவலர்களை மீசையுடன் தான் அடையாளப்படுத்துவார்கள். அந்த மீசையை மழிக்க 50 ரூபாய் தான் செலவாகும், இருந்தாலும் இங்கு போலீஸ்காரர்கள் மீசையை  வளர்ப்பதை தனி அடையாளமாக எண்ணுகிறார்கள்.


Read More : ஹாலிவுட்டையே அலற வைத்த டாப் 5 சீரியல் கில்லர்கள்


image source daily hunt

3. இந்தியாவை பொறுத்தவரை இங்கு 6 விதமான பருவநிலைகள்  காணப்படுகிறது. கோடைகாலம் , இலையுதிர்காலம், வசந்த காலம், மழைக்காலம், குளிர்காலத்திற்கு முந்தியகாலம் மற்றும் குளிர்காலம். இதில் வசந்த காலம் மிகவும் விசேஷமானது, இந்த மாதங்களில் இந்தியாவின் பிரபலமான ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.


 4. இந்தியாவில் வந்தோரை வரவேற்கவும், நன்றி சொல்லவும் தலையை அசைக்கும் ஒரு வழக்கம் உள்ளது. இது இந்திய மக்களின் கலாச்சார வழிமுறையாகவும் இருந்து வருகிறது. இந்த முறையை உலக மக்கள் " Indian Head Shake " என அழைக்கிறார்கள். சரி என்பதற்கும் புரிந்து கொண்டேன் என்பதை விளக்கவும் இவ்வாறு தலையை அசைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

image source VideoHive

5. உலகின் மிகப்பெரிய மதங்களில் ஒன்றான ஹிந்து மதத்தின் தாயகம் இந்தியா தான். மேலும் இந்நாட்டின் 80 சதவீத மக்கள் ஹிந்து மதத்தை பின்பற்றும் மக்களாக உள்ளனர். இருந்தும் உலகின் பிற பெரிய மதங்களான கிறித்துவம், இஸ்லாம், சீக்கிசம் மற்றும் புத்த மதத்தை பின்பற்றும் மக்களும் இங்கும் அதிகமாக வாழ்கின்றனர். இருந்தும், இங்குள்ள மக்கள் மிகவும் ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வருகின்றனர்.

6. உலகின் மிகப்பெரிய குடும்பம் இந்தியாவில் தான் வாழ்ந்து வருகிறது.. சியோனா சானா ( Ziona Chana ) என்பவர் மிசோரம் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு 39 மனைவிகள், 94 குழந்தைகள் மற்றும் 33 பேரக்குழந்தைகள் உட்பட 180 பேர் குடும்பத்தில் உள்ளனர். இந்த குடுப்பதிற்கு ஒரு நாள் சமைக்க 100 கிலோ அரிசி, 60 கிலோ உருளைக்கிழங்கு மற்றும் 39 கோழிகள்  தேவைப்படுகிறது. உலக சாதனை புத்தகத்திலும் இவர் இடம் பெற்றுள்ளார்.

image source iol.co.za
image source .khaleejtimes.com

Read More : ராயல் என்ஃபீல்ட் " Bullet " உருவான கதை


7. இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள மாடுகளுக்கு தனித்தனியே அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. பிற நாடுகளுக்கு இந்த மாடுகள் கடத்தப்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை அமல்படுத்த 7.8 மில்லியன் டாலர்களை இந்திய அரசாங்கம் செலவிட்டுள்ளது.

image source Reacho


image source reviewIn

8. உலக அளவில் மசாலா மற்றும் நறுமண  பொருட்களின் உற்பத்தியில் 75 சதவீதம் இந்தியாவில் தான் பெறப்படுகிறது. 180 வகையான மசாலா பொருட்கள் 160 நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

9. உலக அளவில் மணமுறிவு எனப்படும் விவாகாரத்து விகிதம் இந்தியாவில் தான் குறைவு. 100 திருமணங்களில் 1 திருமணம் விவாகரத்தில் முடிவதாக புள்ளி விவரம் கூறுகிறது.

image source tackledetective.com

Read More: இந்த நிலையில் படுத்து உறங்கினால் உங்கள் ஆரோக்கியம் கேள்விக்குறிதான்


10. திருமத்திற்கு முன்பு மணமகனோ அல்லது மணமகளோ, அவர்களின் சுய ஒழுக்கம், வருமானம் மற்றும் நடவடிக்கை குறித்து கண்காணிப்பதற்கு மணமக்களின் உறவினர்கள் தனியாகவோ அல்லது எதாவது டிடெக்ட்டிவ் உதவியுடனோ மணமக்களை கண்காணிக்கின்றனர். இதன் பிறகு திருமணம் செய்வது இந்தியாவில் கடைபிடிக்கப்படும் வழிமுறைகளில் ஒன்று. இதற்கு இருவீட்டாரும் மறுப்பு சொல்ல முடியாது.

11. இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாணி சிக்னாப்பூர் என்ற கிராமத்தில் மக்கள் குடியிருக்கும் வீட்டிற்கு இன்றுவரை கதவுகள் கிடையாது.  மேலும் அதைப்பற்றி மக்கள் கவலைப்படுவதும் கிடையாது. அந்த கிராமத்தை தெய்வம் காவல் காப்பதாக அந்த கிராமத்து மக்கள் நம்புகின்றனர். அங்குள்ள கடைகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் வங்கிகளுக்கு கூட கதவுகள் கிடையாது.மேலும் பெரிய அளவில் எந்தவொரு குற்றச்சம்பவங்களும் இங்கு நிகழ்வது கிடையாது.

image source BOBIFY

image source starsunfolded.com

12. உலகின் மிகவும் விலையுயர்ந்த மற்றும் சொகுசான வீடு இந்தியாவின் மும்பையில் அமைந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் வீடு தான் அது. இந்த வீட்டின் மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்த வீட்டில் 600 பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர், உள்ளேயே திரையங்கு, 160 கார்கள் நிற்கும் வகையில் கார் பார்க்கிங் வசதி, ஜிம் வசதி மற்றும் ஒரே நேரத்தில் 3 ஹெலிகாப்டர் இறங்கும் வகையில் மிகப்பெரிய இறங்கு தளம் போனறவை இந்த வீட்டினுள் அடக்கம்.

13. புத்திசாலிகள்  விரும்பும் விளையாட்டாக அறியப்படும் செஸ் விளையாட்டின் தாயகம் இந்தியா தான். சதுரங்கம் என அறியப்படும் இந்த விளையாட்டு ஒரு நாட்டை பாதுகாக்கும் வகையில் குதிரைப்படை, யானைப்படை, காலாட்படை என அமைக்கப்பட்டிருக்கும். இந்த காலகட்டத்தில் நாட்டை பாதுகாக்கும் பலவகை தொழில்நுட்பங்கள் இந்த விளையாட்டின் பிரதிபலிப்பு எனவும் சொல்லலாம்.

image source Chessopolis

image source The Economic Times

14. பொதுவாக சுற்றுசூழல் மாசுபாட்டால் அவதிப்படும் உலகின் டாப் 10 இடத்தில்  உள்ள முக்கியமான நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் 7 நகரங்கள் முதல் 7 இடத்தில்  உள்ளது.  இதில், இந்தியாவின் தலைநகரான  டெல்லி கடுமையான காற்று மாசுபாட்டால் ( Air Pollution ) தடுமாறி வருகிறது. வாகன புகை, தொழிற்சாலை கழிவுகள் போன்றவற்றால் டெல்லியில் சுவாசிப்பதே சிரமமாகியுள்ளது. டெல்லியின் இந்த நிலைமையை மாற்ற இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

image source India Today

15. உலகின் அதிக மொழி பேசக்கூடிய மக்களைக்கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு சுமார் 780 மொழிகள் பேசப்பட்டு வருகிறது. 22 மொழிகள் முதன்மையை மொழியாக உள்ளது. மேலும் உலகின் பழமையான மொழியான தமிழ் மொழியின் தாயகமும் இந்தியா தான்.

Post a Comment

0 Comments