நகரத்தின் மொத்த மக்களும் ஒரே கட்டிடத்தில் வாழும் வினோதம்
கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்!! எப்போதாவது நாம் டிராபிக் ஜாமில் சிக்காமல் நாம் போக வேண்டிய இடத்திற்கு செல்ல முடிகிறதா?? ஒவ்வொரு நாளும் பெரும் இரைச்சல், சுற்றுப்புற மாசு ( pollution ), கொஞ்சம் கூட நேரமில்லாமல் ஏதாவதொன்றை தேடி ஓடிக்கொண்டு இருக்கிறோம்.![]() |
image source npr.org |
கொஞ்சம் இப்படி யோசித்துப்பாருங்கள்! ஒரே இடத்தில் நமக்கு தேவையான அனைத்தும் கிடைத்தால் எப்படி இருக்கும்?? கட்டிடத்தின் லிஃப்டிற்குள் நின்று கொண்டு ஒரு பட்டனை அழுத்தினாள் சூப்பர் மார்கெட், ஒரு பட்டனை அழுத்தினால் மருத்துவமனை, இன்னொரு பட்டனை அழுத்தினால் காபி ஷாப், நினைத்தாலே நமக்கு பூரிப்பை ஏற்படுத்துகிறது இல்லையா...
![]() |
image source shutterstoct |
கற்பனைக்கு நன்றாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் இது சாத்தியமா?? ஆனால், உண்மையில் அலாஸ்காவின் ஒரு நகரத்தில் இது சாத்தியமாக உள்ளது. நிச்சயமாக நாம் அதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
Read: 5 Mystery Places In India
அலாஸ்கா மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் தான் விட்டைர் ( Whittier ). உலகின் எங்கேயும் பார்க்க முடியாத சில விநோதங்கள் இந்த நகரத்தில் காணப்படுகிறது. சுற்றிலும் பனிப்பாறைகளுக்கு நடுவே இந்த நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் மக்கள்தொகை மிகவும் குறைவு, அதுவும் நீங்கள் எதிர்பார்ப்பதை விட குறைவு. இறுதி ஆண்டின் கணக்கெடுப்பின்படி 220 குடிமக்கள் இங்கு வாழ்கின்றனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த 220 குடிமக்களும் ஒரே ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கின்றனர்.
![]() |
image source zillow.com |
![]() |
image source lateet.com |
அந்த மக்களின் அத்தியாவசியமான பள்ளிக்கூடம், அங்காடி, மருத்துவமனை அனைத்துமே அந்த ஒரு கட்டிடத்திலேயே அமைந்துள்ளது. நீங்கள் லிப்ட்டிற்குள் சென்று வெறும் பட்டனை அழுத்தினால் மட்டும் போதும். இந்த கட்டிடம் Begich Tower என அழைக்கப்படுகிறது.
இந்த கட்டிடத்திற்குள் இரண்டு சூப்பர் மார்கட், தகவல் தொலை தொடர்பு நிலையம், காவல் நிலையம், தபால் நிலையம், மருத்துவனை மற்றும் விளையாட்டு மைதானம் என அனைத்து வசதி வாய்ப்புகளும் உள்ளது. மேலும் இந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் மக்கள் வணக்க வழிபாட்டில் ஈடுபடும் வகையில் ஒரு சர்ச்சும் உள்ளது. குறிப்பிட்ட எந்தவொரு தேவைக்கும் நீங்கள் இந்த கட்டிடத்தை விட்டு வெளியே செல்லவேண்டிய அவசியமில்லை. பல இயற்கை அழகிற்கு நடுவே ஒரு தனிமைப்படுத்தப்பட்ட கட்டிடமாக இந்த கட்டிடம் உள்ளது.
Read: 5 Ancients Rules Broken In India
![]() | |||||
image source LittleThings.com |
![]() |
image source LittleThings.com |
![]() |
image source alaskapublic.org |
இந்த மக்களின் முக்கிய வருமானம் மீன் பிடித்தலின் மூலம் கிடைக்கிறது. மேலும் பெரிய அளவில் இங்கு வாகனங்கள் வந்து செல்லும் அளவிற்கு இங்கே வசதி வாய்ப்புகள் கிடையாது. அதே நேரம் இந்த நகரத்தில் வாழ்வது அவ்வளவு எளிதான காரியமும் கிடையாது. அடிக்கடி மாறும் தட்பவெப்பநிலை மற்றும் பெரும்பாலும் உறைநிலையில் இருக்கும் வானிலை போன்றவற்றால் இந்த நகரம் மக்கள் வாழ்வதற்கு கொஞ்சம் சவாலான இடம் தான். நவம்பர் முதல் ஜனவரி வரை இந்த நகரத்தில் சூரியனை பார்ப்பதே கடினம், அந்த அளவிற்கு உறைநிலையில் இந்த இடம் காணப்படும்.
![]() | |||
image source TripAdvisor |
![]() |
image source All That interesting.com |
இந்த இடத்தை நீங்கள் அடைய ஒரே ஒரு சுரங்கப்பாதை மட்டுமே உள்ளது. இரவு நேரங்களில் இந்த சுரங்கப்பாதை மூடப்பட்டு விடும். இதனால் இங்கு திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் பெரும்பாலும் நடப்பதில்லை. ஒருவேளை யாராவது முயற்சி செய்தாலும் மிக எளிதாக பிடிபட்டுவிடுவார்கள்.
உலகின் மிகவும் குறைவான மக்கள் தொகை கொண்டநகரங்களில் இதுவும் ஒன்று. மேலும் சராசரி ஆண்டு மக்கள் தொகை விகிதமும் இங்கு மிகக்குறைவு. மேலும் இங்கு வசிக்கும் அண்டை வீட்டினர் ஒருவருக்கு ஒருவர் உதவியாகவும், நல்ல முறையிலும் பழகி வருகின்றனர். மேலும் எந்த நேரத்திலும் நீங்கள் காவல்துறையின் உதவியாய் நாடலாம்.
Read: " Grand Prismatic " Hot spring and Facts In Tamil
குளிர்காலத்தில் இங்கு பெய்யும் பனிப்பொழிவினால் சுமார் தரையிலிருந்து 20 அடிக்கு பனிக்கற்கள் நிரம்பி விடும். மேலும் இங்கு பனிப்பொழிவின் போது சுமார் 95 kph வேகத்தில் காற்று வீசுகிறது. எனவே இந்த கட்டிடத்தின் ஜன்னல்கள் மிகவும் உறுதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அனைத்து மக்களும், படிக்கும் மாணவர்களும் அடுத்த பருவத்திற்காக தங்களை தயார் செய்கின்றனர். அங்குள்ள தோட்டத்தில் விசேஷ உபகாணங்களுடன் தங்களுக்கு தேவையான தாவர உணவுகளை கோடை காலத்தில் தயார் செய்கின்றனர்.
இந்த நகரத்தின் வரலாற்றை பற்றி நாம் கொஞ்சம் பார்க்கலாம். முதன் முதலாக 1943 ல் தான் இந்த நகரம் உருவானது. இரண்டாம் உலகப்போரின்போது ராணுவ வீரர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் இந்த இடம். மேலும் அமெரிக்க ராணுவ வீரர்கள் அலாஸ்காவிற்குள் நுழையும் எல்லைப்பகுதியாவும் இது இருந்தது. இந்த துறை சார்ந்த குடும்பங்களும், சிவில் பணியில் வேலை செய்யும் மக்களும் இங்கு குடியேறினர். மேலும் Buckner Building எனப்படும் குடியிருப்பு கட்டிடமும் இங்கு இருந்தது.
![]() |
image source atlasobscura.com |
பிறகு இந்த கட்டிடம் காலசூழ்நிலையால் கைவிடப்பட்டது. அந்த காலத்தில் அலாஸ்காவின் மிகப்பெரிய கட்டிடங்களாக இந்த கட்டிடங்கள் இருந்தன. 1964 ல் இங்கு ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது, மேலும் சுனாமி அலையும் தாக்கியது. இந்த இயற்கை பேரழிவினால் இந்த நகரம் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது, மேலும் சுமார் 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சேதங்கள் இங்கே ஏற்பட்டுள்ளது. இந்த பேரழிவிற்கு பின்னர் இந்த கட்டிடங்கள் மக்களால் கைவிடப்பட்டது.
இங்குள்ள பெரும்பாலான மக்கள் இங்குள்ள துறைமுகத்தில் வேலை செய்கின்றனர். மேலும் பல சுற்றுலா பயணிகளும் இங்கு வருகை தருகின்றனர். கோடை காலத்தில் சுற்றுலா வாசிகளின் வருகை அதிகமாக காணப்படும்.
image source Anchorage Daily News |
![]() |
image source nathanmenkveld.com |
![]() |
image source atlasobscura.com |
அழகான பனிப்பாறைகள், பிரம்மாண்ட வன நிலங்கள் போன்றவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கிறது. மேலும் புகைப்பட கலைஞர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பல இயற்கை அழகு இங்கே கொட்டிக்கிடக்கிறது. மேலும் இங்கே கடலில் நீங்கள் பயணிக்கும்போது கடல் சிங்கம், திமிங்கலங்கள், சீல்கள் மேலும் பனிக்கரடிகள் மற்றும் கருப்பு நிற மான்களை இங்கே காண முடியும். மேலும் இதை சுற்றிய இடங்களில் சுற்றுலா பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரெஸ்டாரன்டுகள், தங்கும் விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
0 Comments