கர்ம வீரர் காமராஜர் பற்றி பெரிதும் அறிந்திடாத 10 விஷயங்கள்

10 Interesting Facts About King Maker Kamaraj

தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களில் குறிப்பிடத்தக்க ஒரு சிறந்த மனிதர் தான் அய்யா பெருந்தலைவர்  காமராஜர் அவர்கள். அவரைப்பற்றிய 10 சுவாரசியமான விஷயங்களை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.1. பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் இவர் தான்.

2. எளிமைக்கும், நேர்மைக்கும் முன்னுதாரணமாக அறியப்படும் காமராஜர் 9 ஆண்டுகள் முதல்வராக தமிழ்நாட்டை ஆட்சி செய்தார். இவரது ஆட்சி காலம் தமிழ்நாட்டின் பொற்காலம் எனவும் சொல்லப்படுகிறது.

3. இவரை "கருப்பு காந்தி" என பலரும் கூறுகின்றனர். மேலும் இவரை தென்னாட்டு காந்தி, பெருந்தலைவர், படிக்காத மேதை என பலராலும் பாராட்டப்பட்டவர். 1976 ல் இவரது மறைவுக்குப்பின் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

4. தனது பள்ளிப்படிப்பை தொடர முடியாத நிலையில் தனது உறவினரது துணிக்கடையில் வேலை செய்து வந்தார். பல தேச தலைவர்களின் பேச்சால் கவரப்பட்ட இவர் விடுதலைக்கான போராட்டங்களில் பங்கு கொண்டார். தன்னுடைய 16 வது வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.


Read More : தாய்லாந்து பற்றிய 10 சுவாரசிய உண்மைகள்image source one India Tamil


5. 1940ல் வேலூர் சிறையில் காமராஜர் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் இருக்கும்போதே விருதுநகர் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 9 மாதம் சிறை வாழ்க்கைக்குப்பிறகு வேலூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவர் செய்த முதல் காரியம் தன் பதவியை ராஜினாமா செய்ததுதான். ஒரு பதவியில் இருந்து கொண்டு அங்கு செய்ய வேண்டிய கடமையை சரிவர செய்ய இயலாவிட்டால் அந்த பதவியில் இருக்கக்கூடாது என்பது காமராஜரின் நிலைப்பாடாக இருந்தது.

6. காமராஜரால் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் சில நுட்பமான விஷயங்கள் கடைபிடிக்கப்பட்டிருந்தது.  வெறும் 8 பேர்களை மட்டும் கொண்ட அமைச்சரை உருவாக்கப்பட்டது. அதில் அவரை எதிர்த்து போட்டியிட்ட சி. சுப்பிரமணியம் மற்றும் அவரை சிபாரிசு செய்த பக்தவத்சலம் ஆகிய இருவரையும் அமைச்சரவையில் இணைத்திருந்தார். மேலும் அவரது அமைச்சரவையில் இருந்த முக்கிய இருவர் மாணிக்கவேலு நாயக்கர் மற்றும் ராமசாமி படையாச்சி ஆகியோர். இவர்கள் இருவரும் காங்கிரசுக்கு  எதிராக போட்டியிட்டு தி.மு.க ஆதரவோடு வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


image source thehindu.com


7. 1963 ல் K-PLAN ( காமராசர் திட்டம் ) என்ற ஒரு புது திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் தங்களது பதவிகளை இளைய சமுதாயத்திற்கு  விட்டுக்கொடுத்து கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும். இதை ஜவஹர்லால் நேருவிடமும் கூறினார், இதை நேருவும் ஏற்றுக்கொண்டார் .இந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய கையேடு தனது முதலமைச்சர் பதவியை 1963 ல் ராஜினாமா செய்து விட்டார்.

image source tamil-desiyam.com

image source The Hindu


Read More: ராயல் என்ஃபீல்ட் " Bullet " உருவான கதை8. இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட கருது வேறுபாடு காரணமாக காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. சிண்டிகேட் காங்கிரசு எனப்படும் காமராசர் தலைமையிலான கட்சி அதிக செல்வாக்குடன் இருந்தது. ஆனால் தி.மு.க கட்சியின் பெரும் வளர்ச்சியால் காங்கிரஸ் பலம் குன்றிப்போனது. எனவே தனது அரசியல் பயணத்தை தமிழக அளவில் சுருக்கிக்கொண்டார்.

9. ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை காமராசர் கைவிட்டார், மேலும் தமிழ்நாட்டில் பள்ளிக்கூடத்தின் எண்ணிக்கை 27,000 ஆக உயர்ந்தது. 1960 களில் காமராசரால் அறிமுகப்படுத்த மதிய உணவு திட்டம் தான் பின்னாளில் 1980 களில் எம்.ஜி.ஆர் ஆல் விரிவுபடுத்தப்பட்டது. 2004 ஆம் ஆண்டு காமராஜ் என்கிற பெயரில் அவருடைய வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படம் வெளியானது. அதன் ஆங்கில பதிப்பு 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

10. எம்.ஜி.ஆர் காமராசர் பற்றி கூறும்போது "காமராசர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி" என குறிப்பிடுகிறார். மேலும் "தியாகச் சுடர் மற்றும் தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றவர் என கருணாநிதி காமராசர் பற்றி கூறுகிறார். சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்குக் காரணம் நமது காமராசர்தான் என்று தந்தை பெரியார் காமராசர் பற்றி கூறியுள்ளார்.

Read More: மர்மங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த இந்தியாவின் டாப் 5 இடங்கள்


image source Dhinamalar


தொடர்ந்து மூன்று முறை தமிழக முதல்வர், அகில இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் என நாட்டின் பெரிய பதவிகளில் இருந்தாலும் அவர் மறையும் போது அவரது சட்டைப்பையில் சிறிதளவு பணம் மட்டுமே இருந்தது. அவருக்கென்று சொந்தமாக ஒரு வீடோ, வங்கிக்கணக்கோ எதுவும் கிடையாது. அவர் தனது வாழ்நாளின் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments