NASA Remembers The Great Warrior "Tipu Sultan "
நாசாவில் நினைவுகூறப்படும் இந்தியன் என சொல்லப்படும்போது நிச்சயமாக நமக்கு நினைவுக்கு வருவது நமது விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம் தான். ஆனால் நாம் இங்கு பார்க்கப்போவது ஐயா அப்துல்கலாம் பற்றி கிடையாது. டாக்டர் அப்துல் கலாம் பற்றி தற்போது உலகமே போற்றி நினைவு கூர்ந்து வருகிறது. நாம் இங்கே பார்க்கப்போவது வரலாற்றில் கைவிடப்பட்ட, தற்கால அரசியல் தலைவர்கள் பேச மறுக்கும் ஒரு இந்திய அரசனைப்பற்றிய வரலாறு. தாய்நாட்டில் மறக்கடிக்கப்பட்டாலும் அமெரிக்காவின் நாசாவில் இன்றளவும் போற்றப்படும் ஒரு ஆசானாக பார்க்கப்படுகிறார். அவர் தான் மைசூர் புலி என செல்லமாக அழைக்கப்படும் மாவீரன் திப்பு சுல்தான்.இந்தியா தன் வரலாற்றில் பல வீரதீர மன்னர்களை கண்டுள்ளது. தற்போதும் அவர்கள் இங்கு போற்றப்பட்டு தான் வருகின்றனர். ஆனால் இவர்களை தவிர்த்து திப்புவிடம் இருந்த ஒரு தனித்தன்மை என்னவென்றால் அது அவருடைய போர்திறன் யுக்தி தான். ஒரு போர் என்றால் வில்லும், அம்பும், யானைப்படையும், குதிரைப்படையும் என்று இருந்த காலத்தில் முதன்முதலாக ராக்கெட் யுக்தியை பயன்படுத்தியவர் திப்பு சுல்தான் தான். கையில் துப்பாக்கி தோட்டாக்களுடன் தைரியமாக முன்னேறி வந்த பிரிட்டிஷ்காரர்களை அந்த புதுமை தான் கதிகலங்க வைத்தது.
![]() |
image source friday times |
![]() |
image source wikipedia |
உண்மையில் கிழக்கிந்திய கம்பெனி எனப்படும் பிரிட்டிஷ் படையால் திப்புவால் பயன்படுத்தப்பட்ட ராக்கெட்டை சமாளிக்க முடியவில்லை. திப்புவின் ராக்கெட் தொழிநுட்பத்தை பார்த்து ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கினர். திப்புவின் படையை சமாளிக்க முடியாமல் ஆங்கிலேய படைத்தளபதி ஆர்தர் வெலெஸ்லி போரிலிருந்து பின்வாங்கினார். இதையே ஆங்கிலேயர்களின் அச்சமடைந்ததற்கு ஒரு உதாரணம் என்றும் சொல்லலாம். ஆனால் இதற்குப்பிறகு மாவீரன் நெப்போலியனையே ஆர்தர் வெலெஸ்லி வெற்றி கண்டார் என்பது குடிப்பிடத்தக்கது.
விண்வெளி பொறியியலாளரும், விண்வெளி ஆணையத்தின் முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் ரோடம் நரசிம்மாவின் கல்விக் கட்டுரையில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
![]() |
Dr. Roddam Narasimma |
ராக்கெட் தொழில் நுட்பத்தில் திப்பு சுல்தான் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் முன்னேற்றம் பற்றிய சான்றுகள் தற்போது வெளியிடப்படவில்லை. அதைப்பற்றி சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பே வெளியிட்டு விட்டனர்.
சில பேர் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் திப்பு சுல்தானின் உருவப்படம் வைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். நிச்சயமாக அது உண்மை கிடையாது, ஆனால் ஒரு சம்பவத்தை இங்கு நிச்சயமாக பதிவு செய்ய வேண்டும்.
ஒரு முறை அமெரிக்காவின் ஆராய்ச்சி மையமான நாசாவுக்கு நமது முன்னாள் குடியரசுத்தலைவர் மற்றும் விஞ்ஞானி அப்துல் கலாமிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அங்கு சென்ற அப்துல் கலாம் ஒரு ஓவியத்தை கண்டு வியப்படைந்தார். அந்த படத்தில் ராக்கெட் குண்டுகள் பாய்ந்து செல்கிறது, பிரிட்டிஷ் படை வீரர்கள் பதறி ஓடுகிறார்கள், மிரளும் குதிரைகள், இந்த ஓவியத்தின் நாயகன் திப்பு சுல்தான் தான். ஆங்கிலேயருக்கு எதிராக திப்பு சுல்தான் போர் செய்து வெற்றிகண்ட சம்பவம் தான் அங்கு ஓவியமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
![]() |
image source The Wire |
திப்புவின் ராக்கெட் தொழில்நுட்பத்தை அவரது தாய்நாடு மறந்துவிட்டது. ஆனால் நவீன ராக்கெட் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் நாசாவில், இந்த தொழில்நுட்பத்தின் முன்னோடியாக திப்புவை பெருமைப்படுத்தி உள்ளது. ஒரு இந்தியனாக எனக்கு இது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக அப்துல் கலாம் வியந்து கூறி உள்ளார்.
![]() |
image source /bengaluru.citizenmatters.in |
திப்புவால் உருவாக்கப்பட்ட ராக்கெட் குண்டுகள் சுமார் 2 கிலோமீட்டர் கடந்து தாக்கும் சக்தி பெற்றதாக இருந்தது. ஒற்றை சக்கர வாகனத்தில் இருந்தே இதை பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
ஐரோப்பாவில் உருவாக்கப்பட்ட அனைத்து ராக்கெட்டுகளின் அடிப்படையும் திப்புவை சேர்ந்தது என்பது வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
திப்பு சுல்தானின் தொழில்நுட்பத்தை ஆங்கிலேயர்கள் மேம்படுத்தி வளர்ச்சி அடைந்த அதேவேளை, நமது நாட்டின் தொழில்நுட்பத்தை நமே மேம்படுத்தி இருந்தால் நமது நாடு மேலும் வளர்ச்சிச்சியடைந்திருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை...
0 Comments