Google CEO Sundar Pichai's salary was just raised to $240 million
கூகிள் நிறுவனத்தின் CEO ஆக செயல்பட்டு வந்த தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை கடந்த மாதம் அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டிற்கும் CEO ஆக நியமிக்கப்பட்டார். இதன் பிறகு சுந்தர் பிச்சையின் சம்பளமும் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ளது.
டிசம்பர் 17 ஆம் தேதி இதைப்பற்றிய செய்தியை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சுந்தர் பிச்சையின் ஆண்டு சம்பளம் 2 மில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 14 கோடிகள். இதுபோக 240 மில்லியன் டாலர்கள் பங்குத்தொகையாக அளிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இதன் மதிப்பு சுமார் 1707 கோடி. மேலும் 2020 - 2022 ற்குள் ஆல்பாபட்டின் பங்குகளில் இருந்து சுமார் 90 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு மட்டும் சுமார் 640 கோடி ஆகும்.
தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர் சுந்தர் பிச்சை. நடுத்தர குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தனது கல்வி அறிவு மற்றும் விடா முயற்சியால் கடந்த 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் ஒரு சாதாரண மென் பொறியாளராக பணியில் சேர்ந்தார். கூகுள் குரோம் மற்றும் கூகுள் டூல்பார் ஆகிய சாப்ட்வேர் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த அவர் 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் CEO ஆக நியமிக்கப்பட்டார். பிறகு, 2017 ல் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் இயக்குனர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். கடந்த மாதம் அந்த அல்பாபெட்டிற்கே CEO ஆகவும் உயர் பதவி அடைந்தார்.
![]() |
image source zdnet.com |
சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவர் இந்த நிலையை அடைவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. பல சிரமங்களுக்கு மத்தியில் போராடும் மாணவர்களுக்கு இவர் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார். மேலும் இந்தியாவே இந்த தமிழனை நினைத்து பெருமை கொள்கிறது. மேலும் ஒரு பேட்டியில் சுந்தர் பிச்சை பேசும்போது, அவருக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர எந்த மொழியும் தெரியாதாம். எனவே, உங்கள் முன்னேற்றத்திற்கும் மொழிக்கும் எந்தவொரு சம்மந்தமும் கிடையாது. இவர் மேலும் பல சாதனைகள் புரிய இறைவன் இவருக்கு அருள் புரியட்டும்.
0 Comments