Justice Served To Dr. Priyanka Reddy
தெலுங்கானாவில் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி 26 வயதான பிரியங்கா என்ற கால்நடை மருத்துவர் 4 காட்டுமிராண்டிகளால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் எரித்துக்கொள்ளப்பட்டார்.
இந்த சம்பவம் நம் இந்தியாவையே அதிர வைத்தது. திரும்பவும் ஒரு
நிர்பயா என்ற அடிப்படையில் இந்த கொடூர சம்பவம் பார்க்கப்பட்டது.
![]() |
image source OrissaPost |
ஒரு
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் 6 மாத குழந்தை முதல் 60 வயது கிழவி வரை
வன்கொடுமை செய்து கொல்லும் கயவர்கள் நம் இந்தியாவில் தான் உள்ளனர். இதுவரை
எத்தனையோ சிறு குழந்தைகள் இவ்வாறு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை
செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இதுவரை எவ்வளவு போராட்டம் செய்தும்
பலன்கிடைக்கவில்லை.
ஆனால், தற்போது நடந்துள்ள ஒரு சம்பவம் உண்மையிலேயே மிகப்பெரிய
மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்பாவி கால்நடைகளின் உயிர் காக்கும் மருத்துவரான
அந்த அப்பாவி டாக்டர் பிரியங்காவை கொன்ற கயவர்கள் 4 பேரும் என்கவுண்டர்
செய்து கொல்லப்பட்டுள்ளனர். அதுவும் அந்த பெண் எரித்து கொலை செய்யப்பட்ட
அதே இடத்தில் வைத்து என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளது.
Read More : இந்தியாவில் மட்டுமே பார்க்க முடியும் 15 தனித்துவமான விஷயங்கள்
![]() |
image source opindia.com |
தப்பிக்க முயற்சி
செய்ததால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில்
தெழுங்கானா காவல்துறை ஒரு சிறப்பான சம்பவத்தை செய்துள்ளனர். இனி பெண்களை சீண்டும் ஒவ்வொரு அயோக்கியர்களுக்கும் இதே போன்ற தண்டனை
கொடுக்கப்பட வேண்டும். பெண்களை சீண்டினால் இதுதான் தண்டனை என்ற நிலை
வந்தால் தான் நமது நாட்டில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும். மேலும் இது போன்ற
குற்றங்களும் குறையும். தெலுங்கானா போலீசாருக்கு மனமார்ந்த நன்றிகள் ...
Read More: கடலில் வாழும் டாப் 10 அரக்கர்கள்
இந்த 4 பேரும் கொல்லப்பட்டதால் பிரியங்காவுடைய ஆத்மா
சாந்தியடையும் என அவருடைய தந்தை ஶ்ரீதர் கண்ணீர் மல்க நன்றி
தெரிவித்திருக்கிறார்....
பியங்காவுக்கு கிடைத்த இந்த நீதி ஜாதி, மத பேதமின்றி பாதிக்கப்படும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே ஏழை எளிய மக்களின் விருப்பமாகும்.
பொதுமக்களான நீங்கள் இந்த தண்டனை பற்றி என்ன நினைக்கிறீங்க என்பது பற்றி உங்களது கருத்துக்களை இங்கே பதிவிடலாம்....
0 Comments