15 Proofs Your Body Is Really Amazing
ஐரோப்பிய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் உலகத்திலேயே மிகவும் அற்புதமான ஒரு படைப்பு என்றால் அது நிச்சயம் ஒரு மனித உடல் தான். ஒவ்வொரு நாளும் இதை நிரூபிக்கும் வகையில் பல நிரூபணங்கள் ஆராய்ச்சியின் மூலம் நாம் கண்டு வருகிறோம். அதைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.![]() |
image source elitereaders.com |
1. மனிதனின் உடல் தசைகளானது மிகவும் வலிமையானது. அதுவும் உடல் சார்ந்த பயிற்சிகளின் போது அது மேலும் வலுவடைகிறது. நமது முகத்தில் உள்ள தாடை பகுதியானது சுமார் 200 பவுண்ட் சக்தியுடன் செயல்படுகிறது, அதாவது சுமார் 91 கிலோ அழுத்தம். மேலும் ஒரு மனிதனால் தூக்கப்பட்ட அதிகபட்ச எடை சுமார் 442 கிலோ. இது ஓர் அதிகாரப்பூர்வமான உலக சாதனை ஆகும்.
![]() |
image source nationalgeographic |
2. உங்கள் மொத்த உடல் எடையில் சுமார் 1 முதல் 2.3 கிலோ வரை நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. மேலும் உங்கள் வாய்ப்பகுதியினுள் பல பாக்டீரியாக்கள் வாழ்ந்து வருகின்றன. இருந்தும் நீங்கள் பயப்பட தேவையில்லை, இவைகளால் உங்கள் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது
3. உலகத்தில் எத்தனை கோடி பேர் வாழ்ந்தாலும் அவர்களது உடல் உறுப்புகள் தனித்தன்மை வாய்ந்தவை. உதாரணத்திற்கு உங்கள் கைரேகை, உலகில் பல கோடி மக்கள் வாழ்ந்தாலும் அதே எண்ணிக்கையில் தனித்தன்மை வாய்ந்த கைரேகைகள் உள்ளன. அதுமட்டுமல்ல, உங்கள் நாக்கில் உள்ள ரேகைகளும் மனிதனுக்கு மனிதன் வேறுபட்ட தகவமைப்பை கொண்டுள்ளன. அதாவது ஒவ்வொரு மனிதனுடைய நாக்குப்பகுதியினுள் இருக்கும் ரேகைகள் கைரேகைகளைப்போன்றே தனித்தன்மை வாய்ந்தவை.
Read More : உங்களை வியக்க வைக்கும் 5 விசித்திர இடங்கள்
![]() |
image source DentaGama |
4. உங்கள் மூளையானது வெறும் 2 சதவீதம் மட்டுமே ஓய்வெடுத்துக்கொள்கிறது. கிட்டத்தட்ட உங்கள் மூளை தான் உங்கள் மொத்த உடம்பின் பவர் சப்ளை ( power supply ). நீங்கள் உறங்கும்போது கூட 20% அளவில் உங்கள் மூளை வேலை செய்து கொண்டிருக்கிறது.
5. பாம்பு தோலுரிப்பதை போல் மனித உடம்பில் தோல் செல்கள் தினந்தோறும் லட்சக்கணக்கில் கழிவாக வெளியேற்றப்படுகிறது. பெரும்பாலும் 80 சதவீத கழிவுகள் நீங்கள் அதிகம் பயன்படுத்தும் உங்கள் வீட்டினுள் தான் விழுகிறது.
6. நம் உடம்பில் இருந்து வெளியேறும் வியர்வைக்கு மணம் கிடையாது. மேலும் வியர்வையில் இருந்து வெளியேறும் பாக்டிரியாக்கள் வெளியிலிருந்து உங்களை தீண்டும் பாக்ட்டீரியாக்களை நெருங்க விடாமல் செய்கிறது.
![]() |
image source Everyday Health |
![]() |
image source buoy health |
![]() |
image source brightside |
7. கால் பாதத்தில் அமைந்துள்ள சுண்டு விரலானது நம் பாதத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். நீங்கள் நடக்கும்போது உங்களை சமநிலையில் நடக்க வைப்பது இந்த சுண்டு விரல் எனப்படும் சிறிய விரல் தான். உங்களுடைய கால் சுண்டுவிரலில் அடிபட்டிருந்தால் உங்களால் நிலையாக நடக்க முடியாது. உங்களில் பல பேர் இதை நிஜ வாழ்க்கையில் உணர்ந்திருக்க வாய்ப்புள்ளது..
8. உங்கள் நகம் மற்றும் ரோமங்கள் உடலின் ஒரு பகுதியை விட இன்னொரு பகுதி வேகமாக வரளக்கூடியது. அதற்கு காரணம், அங்கே வித்தியாசப்படும் ரத்த ஓட்ட அளவுதான்.
Read More : உலகின் சக்தி வாய்ந்த டாப் 10 விலங்குகள்
9. நம்மால் நாம் பேசக்கூடிய சப்தத்தை கூட்டவோ அல்லது குறைக்கவோ நம்மால் முடியும். உங்களால் அதிக நேரம் சப்தமாக கத்த முடியாது, காரணம் அவ்வாறு தொடர்ந்து கத்தினால் அது உங்கள் உடலுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் உங்கள் மூலையானது துரிதமாக செயல்பட்டு உங்களை தொடர்ந்து அதிக சப்தம் எழுப்ப முடியாமல் செய்து விடுகிறது.
![]() |
image source Medical News Today |
![]() |
image source Step To Help |
10. மிருகங்களில் வேட்டையாடும் மிருகங்கள் உண்டு, அதேபோல வேட்டையாடப்படும் மிருகங்களும் உண்டு. இந்த விலங்குகளின் பண்புகள் ஒன்றிற்கொன்று மாறுபடுகிறது. ஆனால், மனிதனால் இந்த இரு நிலைகளிலும் தங்களை மாற்றிக்கொண்டு சாந்தமாகவோ அல்லது ஆக்ரோஷமாகவோ என இரண்டு நிலைகளிலும் தங்களை நிலைநிறுத்த முடியும்.
11. மனிதனின் சிறுநீரகமானது சுமார் 2 மில்லியன் லிட்டர் நீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. மேலும் ரத்தத்திலிருந்து கழிவு நீரை பிரிக்கும் திறனும் கொண்டது.
![]() |
image source Oneindia Tamil |
12. கொட்டாவி என்பது நமது உடலின் சோர்வைக்குறிக்கிறது. எப்போது உங்கள் உடல் சக்தியிழந்து சோர்வடைகிறதோ, அப்போது நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்பதை கொட்டாவி மூலம் உங்களுக்கு உடல் தெரியப்படுத்துகிறது.
Read More : பேத்தை மீன் ( "Puffer Fish" )பற்றிய சுவாரசியமான 10 தகவல்கள்
13. உங்கள் உடலில் மெல்லிய பறவை இறகை வைத்து சீண்டினால் கூச்சம் ஏற்படும். அதேவேளை, ஒரு பூச்சி அல்லது ஏதாவது விஷஜந்துக்கள் உங்கள் உடலில் பட்டால் அலறியடித்துக்கொண்டு எழுந்து விடுவோம். இந்த வித்தியாசத்தை உங்களுக்கு உணரவைப்பது உங்களுடைய தோல் தான்.
![]() |
image source desertusa.com |
![]() |
image source Healthline.com |
14. நீங்கள் உங்கள் மூக்கை வெறும் மணத்தை அறியும் ஒரு உறுப்பாக மட்டும் அறிகிறோம். ஆனால் அந்த மூக்கு அமைந்துள்ள இடத்தைப்பற்றி நாம் யோசிப்பதில்லை. உண்மையில் நம்முடைய பார்வையை ஒருநிலைப்படுத்தவும், மேலும் உங்கள் பார்வை நடுக்கோட்டில் அமையவும் இந்த மூக்கானது இரு கண்ணிற்கு நடுவே அமைந்துள்ளது.
![]() |
image source Hindustan Times |
15. உங்கள் மூக்கு வெறும் சுவாசிக்கும் உறுப்பு மட்டும் கிடையாது. ஒரு சிறந்த சுத்திகரிப்பு சாதனமாகவும் செயல்படுகிறது. நாம் சுவாசிக்கும் காற்றில் கலந்துள்ள அனைத்து மாசுகளையும் சுத்திகரிப்பு செய்து தான் உள்ளே அனுப்புகிறது. அதனால் தான் பெரியவர்கள் சொல்வார்கள் வாய் வழியாக சுவாசிப்பதை தவிர்க்க வேண்டும் என்று...
கிட்டத்தட்ட அனைத்து மனித உடல்களும் இந்த நடவடிக்கைளை சரியாக செய்து வருகின்றது. மனிதர்களாகிய நாம் தான் இறைவன் கொடுத்த இந்த பொக்கிஷத்தை சரியாக பராமரிப்பது அவசியம்.
0 Comments