ஆஸ்திரேலியா காட்டுத்தீ : 50 லட்சம் விலங்குகள் உயிரிழந்த சோகம்
ஆஸ்திரேலியாவுடைய நியூசௌத்வேல்ஸ் மற்றும் விக்டோரியா போன்ற பகுதிகளில் பெரிய அளவில் காட்டுத்தீ பரவி எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீயானது கடந்த வருடம் செப்டம்பரில் இருந்து எரிந்து கொண்டு இருக்கிறது. இதை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசாங்கம் விழிபிதுங்கி நிற்கிறது. சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட அமேசான் காட்டில் ஏற்பட்ட தீவிபத்தை விட இது கொடுமையானதாக அறியப்படுகிறது. இதுவரை இதற்கு 25 ற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாகவும், இலட்சக்கணக்கில் மக்கள் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்ததாகவும் கூறப்படுகிறது.![]() |
image source DowntoEarth |
![]() |
image source harbingersdaily |
இதைத்தாண்டி கொடுமையான விஷயம் என்று பார்த்தால் அப்பாவி காட்டு விலங்குகளின் கொடுமையான மரணம் தான். அதுவும் 50 லட்சத்திற்கும் மேல் தாண்டியிருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே இங்கு மழை கிடையாது. தொடர்ந்து காடு எரிந்து கொண்டிருக்கும் இந்நிலையில் வெப்பம் 100 டிகிரியை தாண்டியுள்ளதாக அங்கே உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
![]() |
image source aljazeera |
இந்த தீ விபத்தில் பல கங்காருகள், செம்மறி ஆடுகள், கோலா கரடிகள் மற்றும் காட்டினில் வாழும் பல சிறு சிறு விலங்குகள் உயிரிழந்துள்ளது மிகவும் வேதனைக்குரியது. பல தனித்துவமான காட்டு விலங்குகளுக்கு சொந்தம் கொண்டாடும் ஆஸ்திரேலியாவின் இந்நிலையை பார்த்து வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர். பொதுவாக கோலா கரடிகள் தண்ணீர் அருந்தாதாம். மரங்களிலிருந்து தான் தனக்கு தேவையான நீரை பெற்றுக்கொள்ளுமாம். ஆனால், பல கோலா கரடிகள் மனிதனிடம் தஞ்சம் பெற்று நீர் அருந்தும் காட்சி பல உள்ளங்களை கண்கலங்க வைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் பல்லுயிர் வல்லுநர் கிரிஸ் கிக்மேன் கூறும்போது கங்காரு, ஈமு மற்றும் அந்த காட்டில் வாழும் பறவைகள் தீயை கண்டு வேறு இடத்திற்கு ஓடியிருக்கலாம். ஆனால், சின்ன சின்ன விலங்குகள் மற்றும் அந்த காட்டையே நம்பி வாழும் சிறிய விலங்குகள் அங்கேயே சிக்கி உயிரை விடும் சூழல் ஏற்பட்டுள்ளது என கவலையுடன் தெரிவித்துள்ளார்.
![]() |
image source caltura collectiva |
(Batlow) என்ற இடம் ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் அதிகம் பாதித்த ஒரு இடம். இங்கே உள்ள சாலையில் பயணித்த ஊடக துறையை சேர்ந்த ஒருவர் அங்கே ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார்.
![]() |
AOL.com |
அந்த வீடியோவில் அந்த இடம் முழுவதும் கரும்புகைகள் சூழ்ந்துள்ளது. தெருவோரம் பல விலங்குகள் கருகிய நிலையில் கிடக்கின்றன. இதைப்பற்றி அவர் கூறும்போது, " இதற்கு முன் இந்த இடத்தை இவ்வாறு கண்டதில்லை, என் இதயமே இதனால் வலிக்கிறது. இந்த புகைப்படங்களை வெளியிடுவதற்காக என்னை மன்னித்து விடுங்கள். ஆனால் இதைப்பற்றி நிச்சயம் உலகம் அறிய வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த தீவிபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் உலகையே சோகத்தில் உறவைத்துள்ளது. இந்நிலையில் Pray For Australia என்ற ஹேஸ்டேக் ஆன்லைனில் ட்ரெண்டாகி வருகிறது. நீங்களும் உங்களால் முடிந்த அளவு இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், அப்பாவி விலங்குகளுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்...
0 Comments