10 Most Crazy And Weird Reataurants In The World

உலகின் 10 வினோதமான ரெஸ்ட்டாரண்டுகள்

இந்த உலகில் உள்ள மக்களுக்கு பொதுவான பிடித்தமான விஷயம் என்றால் அது உணவு தான் என  நிச்சயமாக சொல்லலாம். நல்ல சுவையான உணவுக்கு எப்போதுமே மக்களின் ஆதரவு இருக்கும். அதே போல சாப்பிடும் இடமும் முக்கியம். சில இடங்களில் நீங்கள் சாப்பிடும் அந்த இடமானது ஒரு புது அனுபவத்தை கொடுக்கும். அதற்கு காரணம் அங்கே உள்ள இயற்கை சார்ந்த சூழலாக இருக்கலாம், அல்லது இசை, கேளிக்கை விஷயங்கள் போன்றவையும் ஒரு காரணமாக இருக்கலாம். இன்றய உலகில் வாழும் மக்கள் எல்லாவற்றிலும் ஒரு புதுமையை விரும்புகின்றனர், அது அவர்களை திருப்திப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். அப்படி உங்களால் செய்யமுடிந்தால் அங்கே நீங்கள் தான் கிங் என்று சொல்லலாம். அந்த அடிப்படையில் உங்களின் புதுமையான எண்ணங்களுக்கு தீனி போடும் வகையில் அமைந்துள்ள 10 உணவு ரெஸ்டாரன்டுகள் பற்றி நாம் இங்கு பார்க்கலாம்.

# Red Whine Spa

winebusiness.com


 சாதாரணமாகவே நீச்சல் குளம் என்றால் நமக்கு ரொம்பவே பிடிக்கும். அதுவே முழுக்க முழுக்க மது மற்றும் ஒயினால் நிரப்பப்பட்திருந்தால் எப்படி இருக்கும். இது கிட்டத்தட்ட அப்படிதான். ஜப்பானில் அமைந்துள்ள ஒரு ரெஸ்டாரண்ட் தான் Yunessun spa resort. இங்குள்ள நீச்சல் குளம் முழுக்க முழுக்க சிகப்பு ஒயினால் நிரப்பப்பட்டுள்ளது. அதுவும் சுமார் 12 அடி ராட்சத பாட்டிலில் இருந்து ஒயின் கொட்டுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் இங்கே குளிக்கவும் செய்யலாம், குடிக்கவும் செய்யலாம். மேலும் இந்த சிகப்பு ஒயினில் குளிப்பதால் உங்களின் உடல் செல்கள் வளர்ச்சியடைவதாக சொல்லப்படுகிறது

# Fish Cafe 

engineeringdiscoveries.com
வியட்நாமின் HO Chi Minch நகரில் அமைந்துள்ள ஒரு ரெஸ்டாரண்ட் தான் இந்த பிஷ் கஃபே. மூன்று தளங்களை கொண்ட இந்த காபி ஷாப்பில் முதல் இரண்டு தளங்களும் சாதாரணமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மூன்றாவது தளமானது வெள்ளம் புகுந்த வீடு போல பார்க்க வித்தியாசமாக வடிவமைத்துள்ளனர். இதில் உட்காரும் வகையில் furniture களும் போடப்பட்டுள்ளது.

மேலும் இந்த தண்ணீரில் மீன்களும் விடப்பட்டுள்ளது. நீங்க இந்த தளத்திற்குள் நுழையும்போதே உங்களுடைய காலணிகளை வெளியவே விட்டிடனும். உங்கள்  காலை நீருக்குள் நனைத்தவாறே நீங்கள் விரும்பியதை ஆர்டர் செய்து வாங்கி உண்ணலாம். அதுவும் அந்த அழகான வண்ண மீன்கள் உங்கள் கால்களை தொட்டு செல்வது ரொம்ப அற்புதமான ஒரு உணர்வை கொடுக்கிறது. இதைப்பற்றி அந்த ரெஸ்டாரண்ட் உரிமையாளர் கூறும்போது எனக்கு மீன்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். புதுமையான விஷயங்களை செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும், எனவே தான் இந்த ரெஸ்டாரண்டை உருவாக்கினேன் என்கிறார் கூலாக. மேலும் இந்த இடத்தில 24 மணி நேரமும் நீரை சுத்தப்படுத்தி மாற்றும் சிஸ்டம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Read More : தாய்லாந்து பற்றிய 10 சுவாரசிய உண்மைகள்# War Bunker Hotel

visitmanchester.com


War Bunker என்பது ராணுவ வீரர்கள் சண்டையின்போது தங்களை மற்றும் தங்கள் பொருட்களை பதுக்குவதற்காக சில கட்டுமானங்களை கட்டியிருப்பார்கள். இவை பெரும்பாலும் நிலத்திற்கு கீழே பாதாள அறைகளாக தான் வடிவமைப்பார்கள். அப்படிப்பட்ட கைவிடப்பட்ட ஒரு பாதாள ரயில் பாதையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு ஹோட்டல் தான் லண்டனில் அமைந்துள்ள Blitz Air Raid Shelter. 1940 களில் இருப்பது போல பழைய ஸ்டைலில் ட்ரிங்க்ஸ், பாடல், பழைய ரேடியோ, மற்றும் ட்ரங்க் பொட்டி என அசத்துகின்றனர். மேலும் அந்த கால போலீஸ் மற்றும் கிளாசிக் நாடகங்கள் என உங்களை பழைய காலத்திற்கே அழைத்து செல்கின்றது இந்த ரெஸ்டாரண்ட்.


# Modern Toilet Restaurant

pinterest


தைவானின் தலைநகரான ( Taipei ) தாய்பெய்யில் அமைந்துள்ள ஒரு வினோதமான ரெஸ்டாரண்ட் தான் மாடர்ன் டாய்லெட் என இங்கு அழைக்கப்படுகிறது. பெயர்க்கேற்றது போல் இங்குள்ள அனைத்து உட்காரும் இருக்கைகள் மற்றும்  உணவு அருந்தும் டேபிள்கள் என அனைத்தும் கழிவறை பொருட்களின் வடிவில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு ஏன், மெனு கார்டில் உள்ள அனைத்து உணவு வகைகளின் வடிவங்களும் மனித மலங்களின் வடிவத்தில் வைக்கப்பட்டுள்ளன. இங்கே தரப்படும் ஐஸ் கிரீம், பான் கேக் என அனைத்து உணவுகளும் மனித மலங்களின் வடிவத்தில் தயாரித்து தரப்படுகிறது. உணவு பரிமாறும் பாண்டங்கள் கூட கழிவறையில் பயன்படுத்தும் பொருட்களின் வடிவத்தில் உள்ளன. இங்கு வரும் வாடிக்கையாளர்களும் எந்தவொரு தயக்கமும் இன்றி உணவுகளை சுவைக்கின்றனர். கிட்டத்தட்ட இங்கே வந்தால் ஒரு டாய்லட்டிற்குள் அமர்ந்து கொண்டு சாப்பிடும் எண்ணம் தான் உங்களுக்கு வரும்.

# Jail Restaurant In Bangalore

tripadvisor.in


இந்தியாவின் பெங்களூரில் அமைந்துள்ளது இந்த ஜெயில் ஹவுஸ். இந்த ரெஸ்டாரண்ட் கிட்டத்தட்ட ஓர் ஜெயில் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜெயில் போன்ற அறைகள், கை விளங்குகள், கைதிகள் அறை போன்ற டிசைன்களுடன் இந்த ஹோட்டல் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு மெனு கார்டு தருவது, மற்றும் உணவு சப்ளை செய்யும் ஊழியர்கள் ஜெயில் வார்டன் போன்ற சீருடையில் வருகின்றனர்.  அதற்காக ஜெயில் சாப்பாடு போன்றே இருக்காது, நல்ல உணவை எதிர்பார்க்கலாம். சிறைக்கு சென்று களி உண்ணும் ஆசை உள்ளவர்கள் கட்டாயம் இங்கே ஒரு விசிட் பண்ணலாம்.

Read More: இராணுவமே இல்லாத உலகின் டாப் 10 நாடுகள்# Vampire Cafe

pinterest


ஜப்பானின் டோக்கியோ நகரத்தில் அமைந்துள்ளது இந்த Vampire Cafe. இந்த ரெஸ்டாரண்டில் உங்களை பயமுறுத்தும் வகையில் நீங்கள் சாப்பிடும் டேபிள், கைகழுவும் இடம் என அணைத்து இடங்களிலும் எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகள், மெழுகுவர்த்தி மற்றும் சிதறிய ரத்தம் என திகில் அனுபவத்தை கொடுக்கும் வகையில் வடிவமைத்திருக்கிறார்கள். உங்களுக்கு உணவுகளை பரிமாறும் ஊழியர்கள் உட்பட அனைவருமே ரத்தக்காட்டேரி படத்தில் வருபவர்கள் போல மேக்கப் செய்துள்ளனர். உங்களுக்கு கொடுக்கப்படும் மெனு கார்டு கூட ஏதோ ஒரு சிலுவை புத்தக வடிவில் பயமுறுத்துகிறது. உங்களுக்கு கொடுக்கப்படும் உணவுகளில் கூட மண்டை ஓடு வடிவிலான ஸ்னாக்ஸ் மற்றும் கோடாரி போன்ற வடிவங்கள் அந்த பாண்டங்களில் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஒரு த்ரில்லான அனுபவத்தை விரும்புபவர்கள் இந்த ரெஸ்டாரண்டிற்கு தாராளமாக ஒரு விசிட் போகலாம்.


# Casa Bonita 

vice.com


அமெரிக்காவில் அமைந்துள்ள ஒரு பிரபலமான ரெஸ்டாரண்ட் தான் Casa Bonita. இந்த மெக்சிகன் ரெஸ்டாரண்ட் சுமார் 52000 சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் இங்கு உணவருந்தலாம். முழுக்க வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் இந்த ரெஸ்டாரண்டில் மேஜிக் ஷோக்கள், துப்பாக்கி சண்டை, பொழுது போக்கு விளையாட்டுகள், இசை மற்றும் 30 க்கும் மேற்பட்ட  செயற்கை நீர்வீழ்ச்சிகள் என முழுவதும் பொழுதுபோக்கு அம்சங்களால் நிரப்பப்பட்டுள்ளது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் என நிச்சயம் இந்த இடம் அவர்களுக்கு ஒரு புது அனுபவத்தை கொடுக்கும் என்றே சொல்லலாம்.

# O'Naturel

CNN.com

nakedwanderings.com

2017 ல் பாரிஸ் நகரத்தில் திறக்கப்பட்ட ஒரு ரெஸ்டாரண்ட் தான் இது. பெயரை கேட்டவுடன் இயற்கை உணவை மட்டும் பரிமாறுவார்கள் என நினைத்தால் அது உங்கள் தவறு. இங்கு ஸ்பெஷல் என்னவென்றால் பிறந்த மேனியே அமர்ந்து உண்பது தான், அதாவது நிர்வாணமாக..  சுமார் 40 இருக்கைகளுடன் அல்டிமேட்டாக திறக்கப்பட்டுள்ளது இந்த ரெஸ்டாரண்ட். இந்த இடத்தில் அமைந்துள்ள முதல் நிர்வாண ஹோட்டல் இது தானாம். இங்கே உணவருந்த ஒரு தலைக்கு 55 முதல் 60 டாலர்கள் வரை கட்டணம் பெறப்படுகிறது. வாயை துடைக்கும் துண்டை தவிர எந்தவொரு துணியும் உடம்பில் இருக்கக்கூடாது என்பதே ஒரே நிபந்தனை. இதைப்பற்றி அந்த நிறுவனம் கூறும்போது முழுமையான சுதந்திரத்துடன் இயற்கையாக பிறந்த மேனியாக மக்கள் தங்கள் விரும்பும் உணவை விரும்பி உண்ணும் அனுபவத்தை கொடுப்பது தான் என சொல்கிறது அந்த நிறுவனம்.

# Hospitalis Restaurant 

telegraph.co.ukகிழக்கு ஐரோப்பாவில் உள்ள Latvia ல் உள்ள இந்த ரெஸ்டாரண்ட் தான் மிகவும் வித்தியாசமான ஒரு உணவகம் என்றே சொல்லலாம். இந்த ரெஸ்டாரன்டின் உள்ளே நுழைந்தால் பார்க்க முழுக்க ஒரு மருத்துவமனைக்கு உள்ளே நுழைந்தது போல் இருக்கும். நோயாளிகளை படுக்க வைக்கும் கட்டில்கள், அறுவை சிகிச்சை அறைகள் மற்றும் வெள்ளை நிறத்தில் மருத்துமனையில் உள்ளது போலவே இருக்கைகள் என அசத்துகின்றனர். இங்கே வரும் வாடிக்கையாளர்களை கூட ஒரு ஒரு நோயாளியை கவனிப்பது போல் கவனிக்கின்றனர். நன்றாக வருபவரின் கையை கட்டி வைத்து நர்ஸுகள் வந்து உணவை ஊட்டி விடுகின்றனர். உணவு பரிமாறும் தட்டில் ஸ்பூனிற்கு பதிலாக அறுவை சிகிச்சைக்கு பயன்படும் கத்தி, இடுக்கி போன்றவைகள் வைக்கப்பட்டுள்ளது. நாம் தக்காளி சாஸிற்கு பாட்டிலை பயன்படுவது போல இங்கே மருத்துவமனை ஊசிகள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இங்கே உங்களுக்கு உணவை பரிமாறும் அனைவரும் டாக்டர்கள் மற்றும் நர்ஸுகளின் உடையில் உள்ளனர். இங்கே உங்களுக்கு மருந்தும் ஊசியும் மட்டும் கிடையாது. மற்றபடி ஒரு மருத்துவமனைக்கு வந்து சென்றது போல உணர்வீர்கள்.

Read More : தகாத உறவு ஏற்பட என்ன காரணம் தெரியுமா??

Post a Comment

0 Comments