10 Most Dangerous Dogs In The World

உலகின் ஆபத்தான டாப் 10 நாய்கள்


 விலங்குகளிலேயே மனிதனின் மிக நெருங்கிய நண்பனாக விளங்குவது நாய்கள் தான். மேலும் இந்த நாய்கள் சிறந்த காவல்காரனாகவும், இருந்து வருகிறது. இவற்றில் சில இனங்கள் மிகவும் மூர்க்கத்தனமானது, எந்த அளவிற்கு என்றால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு விபரீதமானது. அந்த வகையில் மிகவும் ஆபத்தான உலகின் டாப் 10 நாய்களைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 10. The Wolf dog


dogsnet.com

 நம்ம ஊரில் இதை ஓநாய் என்று அழைப்போம், இது கிட்டத்தட்ட ஒரு காட்டு நாய் தான். இந்த வகை நாய் இனங்களின் கலப்பினங்கள் பெரும்பாலும் வீட்டில் வளர்க்கப்பட்டு வருகிறது. இது நாம் சாதாரணமாக வீட்டில் வளர்க்கும் நாய்களை விட உருவத்தில் பெரியதாக இருக்கும். அந்த கால மனிதர்கள் இந்த நாய்களை வளர்த்து பிறகு வேறு இனங்களாக திரித்து வந்தவை தான் வீட்டு நாய்கள் என உயிரியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த வகை கலப்பின நாய்கள் மனிதர்களுடன் நன்கு பழகினாலும், இவை மிகவும் ஆபத்தானவை. பொதுவாகவே இந்த நாய்கள் காட்டில் பெரிய விலங்குகளை கூட்டமாக சேர்ந்து தாக்கி வேட்டையாடி உண்பதை வழக்கமாக கொண்டுள்ளவை என்பதால் இவை கொஞ்சம் ஆபத்தானவை. மேலும் குறிப்பிட்ட சில நாடுகளில் இந்த நாயை வளர்ப்பதற்கு தடையும் உள்ளது.


9. Brazilian Mastiff

pinterest.com


இந்த நாயின் தாயகம் என்று பார்த்தால் அது பிரேசில் தான். இந்த நாய் கூர்மையான மோப்பசக்தி, தீவிரமான தாக்கும் மனப்பான்மை, தயவுதாட்சனையே காட்டாத அணுகுமுறை போன்ற பாத்திரங்களுக்கு சொந்தக்காரன். இதன் மிரட்டும் உடலமைப்பு, ஒரு அடிக்கு தொங்கும் நாக்கு, இதை பார்த்தாலே மனிதர்கள் அரண்டு போய்விடுவார்கள். இந்த நாய்கள் சுமார் 2.5 அடி உயரமும் 100 பவுண்ட் எடையும் கொண்டுள்ளது. பயிற்சியின் போது மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும் இந்த நாய்களிடம் அடையாளம் தெரியாதவர்கள் யாரும் மாட்டிக்கொண்டால் அவர்களின் நிலைமை கவலைக்குரியது தான். இந்த நாய்கள் ஜப்பானில் தடை செய்யப்பட நாய் இனம் என்பது குறிப்பிடத்தக்கது.


8. Presa Canario இந்த நாய்கள் பெரிய நாய் இனங்களில் அரிதாக காணப்படும்  நாய்கள். சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்ட நாய்களை மட்டும் தான் நீங்கள் செல்ல பிராணியாக வளர்க்க முடியும். மேலும் நாய் வளர்ப்பில் அனுபவம் உள்ள கை தேர்ந்த ஆட்களால் தான் இந்த நாயை கைலயாள முடியும். பெரும்பாலும் இந்த நாய்கள் (guard dog) பாதுகாப்பு மற்றும் காவல் போன்ற தேவைகளுக்காக வளர்க்கப்படுகிறது. ஸ்பானிஷ் மொழியில் இந்த நாய்கள் "Canarian catch dog" எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நாயின் சிறப்பம்சம் என்று பார்த்தால் வலிமையான மனபலம், சக்தி வாய்ந்த உடல், வேட்டையாடும் குணம் போன்றவை என்று சொல்லலாம். மேலும் இந்த நாய்கள் fighting dog breed வகையை சார்ந்தது.

Read More : Top 10 Strongest Animals In The World

 

 

7. The Husky


the spruce pets

 சைபீரியன் ஹஸ்கி என அழைக்கப்படும் இந்த நாய்கள் மிகவும் அழகானவை. மேலும் இது ஒரு sled dog, அதாவது நம்ம ஊர் மாட்டுவண்டி மாதிரியே பனிச்சறுக்கு விளையாட்டுகளில் நம்மை இந்த நாய்கள் இழுத்துச்செல்லும். இந்த நாய்கள் மிகவும் சுறுசுறுப்பானவை, மற்றும் அதீத வேட்டை திறனை பெற்றுள்ளன. இந்த நாயை பராமரிப்பவர் இந்த நாய்களுக்கு தொடர் பயிற்சி அளிக்க வேண்டும். என்ன தான் விளையாட்டு பிள்ளையாக இருந்தாலும் தான் சந்திக்கும் புதியவர்களை அலற வைத்து விடும். 2006 முதல் சுமார் 6 பேர் இந்த நாயால் உயிரிழந்துள்ளனர்.
6. Alaskan Malamute

pinterest.com


 உலகின் மிகப்பெரிய நாயினங்களில் இந்த நாயும் ஒன்று. இந்த நாய்கள் சுமார் 100 பவுண்டு எடை கொண்டது. இந்த நாய்கள் sled dog எனவும் அழைக்கப்படுகிறது. பனிச்சறுக்கு விளையாட்டுகளில் இந்த நாய்கள் பயன்படுத்தப்படுகிறது. அதே போல இந்த நாய்கள் வேட்டை நாய்களாகவும் பயன்படுத்தப்படுகிறது. பனிக்கரடிகளையே விரட்டு அளவுக்கு சக்தி வாய்ந்தது இந்த நாய்கள். ஆனால், சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்ட நாய்கள் மனிதர்களுடன் நன்கு விளையாடும் தன்மை கொண்டதாக உள்ளது. தன் எஜமானை தவிர மற்றவர்களுக்கு இந்த நாய்கள் மிகவும் ஆபத்தானவைகள்.


5. The Bull Mastiff

pinterest.com


உலகின் பெரிய நாய் இனங்களில் இந்த நாயும் ஒன்று. சுமார் 2.3 அடி உயரம், 120 பவுண்டு எடை, சக்தி வாய்ந்த உடல், முரட்டுத்தனம் போன்றவை இந்த நாயை  ஓர் அச்சுறுத்தும் விலங்காக அடையாளப்படுத்துகிறது. இந்த இனம் சாதாரண செல்ல பிராணி போன்று அல்லாது பாதுகாப்பிற்காக வளர்க்கப்படும் ஒரு நாய் ஆகும். இந்த நாயை பற்றி அறியாத மக்கள் இதன் அருகில் நெருங்கினால் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாவார்கள். மனிதர்களை தாக்கும் நாய் வகைகளில் இந்த நாய்கள் முதன்மையானதாக உள்ளது, முக்கியமாக குழந்தைகள். இதனால் தாக்கப்படும் மக்கள் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாவார்கள்.

 4. The Doberman

pinterest.com

 உலகத்திலேயே எந்தவொரு அச்சமும் இல்லாமல் மனிதனிடம் நெருங்கும் சில நாய் இனங்களில் இந்த நாயும் ஒன்று. இந்த நாயை வளர்ப்பவர்களிடத்தில் நல்ல நட்புடன் பழகும் இந்த நாய், அறிமுகமில்லாத நபர்களை நடுங்க வைத்திடும் வகையில் இதன் தோற்றம் உள்ளது. வியக்க வைக்கும் மோப்ப சக்தி காரணமாக இந்த நாய்கள் தொலைந்தவர்களை தேடும் பணிக்கு கச்சிதமானது. மிகவும் புத்திகூர்மை வாய்ந்த இந்த நாய்கள் மனிதர்கள் பயிற்சியின் போது கொடுக்கும் கட்டளைகளை உடனடியாக புரிந்துகொண்ட செயல்படுகிறது. இந்த  நாயின் சக்தி வாய்ந்த கடிக்கும் விசை எலும்புகளையே நொறுக்கிவிடும். பயிற்சியின் போது இந்த நாய்களின் செயல்பாடு ஆக்ரோஷமாக இருக்கும்.


Read More : கடலில் வாழும் டாப் 10 அரக்கர்கள்

3. the Caucasian shepherd


animalso


உலகில் உள்ள பலம்  வாய்ந்த நாய்களில் இந்த நாய்களும் ஒன்று. சுமார் 2.6 அடி உயரமும், சாதாரணமாக 50 முதல் 70 கிலோ வரை எடையும் கொண்டுள்ளது இந்த நாய். இந்த நாய்கள் மிகவும் புத்திசாலியானவை. சரியான பயிற்சி இருந்தால் மட்டும் தான் இந்த நாயை உங்களால் கையாள முடியும். இந்த நாய்கள் கடிக்கும் சக்தியானது ஒரு சிங்கத்திற்கு இணையாக இருக்குமாம், வேட்டையின் போது கரடிகளையே இந்த நாய்கள் துரத்திவிடும். அதேவேளை இந்த நாயை வளர்ப்பவர்களுக்கு மிகச்சிறந்த பாதுகாவலனாக இருக்குமாம். 2. the rottweilerஇந்த இனமும் fighting dog வகையை சார்ந்தது தான். இந்த நாய்கள் வளரும்போதே ஆக்ரோஷமாக வளர்கின்றன. தன்னை வளர்க்கும் முதலாளியை காக்க கடுமையாக சண்டையிடும் இந்த நாய்கள் எதிரியை கடுமையாக தாக்கி நிலைகுலைய வைக்கின்றன. இயற்கையிலேயே ஆக்ரோஷமான இந்த நாய்களுக்கு இவற்றை மேலும் ஆபத்தானவைகளாக மாற்ற கடுமையான பயிற்சிகள் மனிதர்களால் கொடுக்கப்படுகிறது.  மேலும் மீட்பு பணிக்காகவும் இந்த நாய்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த நாயை வளர்ப்பது மிகவும் ஆபத்தானது, இந்த நாயினால் ஏதாவது மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு இந்த நாயை வளர்ப்பவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்கா சட்டம் சொல்கிறது.

1. The Pitt bull

knysna keep

உலகின் மிகவும் அச்சுறுத்தலான நாய் என்றால் அது இதுதான். இயற்கையாகவே மிகவும் ஆக்ரோஷமான இந்த நாய்கள் சிறந்த fighting dog களாக அறியப்படுகிறது. மிகவும் வலிமையான உடல், எனர்ஜி மற்றும் உடற்கட்டு காரணமாக இது bulldog எனவும் அழைக்கப்படுகிறது. என்ன தான் மனிதர்களுடன் நெருங்கி பழகினாலும் இந்த நாய்கள் மிகவும் அச்சுறுத்தலானது. மனிதர்களின் மேல் பல தாக்குதலில் நடத்தியுள்ள இந்த நாய்கள் பல மரணங்கள் நிகழ காரணமாக இருந்துள்ளது. 2017 ல் நாய்களால் தாக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 57. இதில் Pitt bull ஆல் தாக்கப்பட்டு இறந்தவர்கள் 40 மட்டும் பேர். எனவே உலகின் அச்சுறுத்தலான நாய் என்றால் நிச்சயமாக Pit Bull தான் இருக்க முடுயும்

For Video : 
Post a Comment

0 Comments