நீச்சல் போட ஆபத்தான உலகின் 10 விசித்திர இடங்கள்
கோடை வெப்பத்தை சமாளிக்க தண்ணீரில் போடும் ஒரு குளியலைப்போன்ற சிறந்த தீர்வு இருக்க முடியாது. அதுவும் நீச்சலுக்காகவே பிரத்தியேகமாக உள்ள இடங்கள் என்றால் சொல்லவே வேண்டாம் அப்படியொரு குஷியாக இருக்கும். நண்பர்களுடன் சேர்ந்து swimming spot ல் கிடைக்கும் சந்தோசம் மற்றும் உற்சாகம் வேறு எதிலும் கிடைக்காது. அப்படியிருக்க உலகின் சில பிரமிப்பான மற்றும் கொள்ளை அழகுடன் இருக்கும் சில நீர்நிலைகளில் நீங்களே விரும்பினாலும் ஒரு நீச்சல் போட முடியாது, அப்படிப்பட்ட சில இடங்களைப்பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.10. The Boiling Lake
![]() | |
earth tripper |
The Boiling Lake என சொல்லப்படும் இந்த நீர்நிலை பார்க்க அவ்வளவு அழகாக உள்ளது, அதேநேரம் ஆபத்தும் கூட. ஏனென்றால் எந்நேரமும் கொதிநிலையிலேயே இந்த ஏரி காணப்படுகிறது. இந்த இடம் மனிதன் நீச்சல் போடுவதற்கு உகந்த இடம் கிடையாது அதேவேளை மனித உடல் தாங்கும் வெப்பநிலையை விட இந்த ஏரியில் தண்ணீரின் வெப்பம் மிக அதிகமாக உள்ளது. இந்த பகுதியின் சில இடங்களில் கொப்பளிக்கும் வெப்ப நீரூற்றுகளும் காணப்படுகிறது. இந்த இடத்தில ஒரு நீச்சல் போட நினைப்பது என்பது கிட்டத்தட்ட ஒரு தற்கொலைக்கு சமம் என்று தான் கூற வேண்டும்.
9. Devil"s Pool
உலகப்புகழ் பெற்ற விக்டோரியா நீர்வீழ்ச்சி பகுதியில் அமைந்துள்ள குளிக்கும் வகையில் இயற்கையாகவே அமைந்துள்ள ஓர் நீச்சல் குளம்தான் இந்த டெவில்ஸ்பூல். . பல ஆயிரம் அடி உயரத்தில் இயற்கையாகவே இந்த சிறிய நீச்சல் குளமானது உருவாகியுள்ளது. இங்கு நீங்கள் குளிக்கலாம், செலஃபி போட்டோ எடுக்கலாம், அதோடு நிறுத்திக்கொள்வது நல்லது. ஏனென்றால், நீங்கள் உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான விக்டோரியா நீர்வீழ்ச்சியில் உள்ளீர்கள். இங்கு நீரின் வேகம் மிக அதிகமாக இருக்கும். கைதேர்ந்த திறமையான ஆட்களின் கண்காணிப்பில் தான் இங்கு நீங்கள் குளிக்க முடியும்.
8. jacob's well
![]() |
popsugar.com |
டெக்சாஸ் பகுதியில் அமைந்துள்ள ஓர் அழகான இடம் தான் இந்த ஜேக்கப் வெல். கிட்டத்தட்ட பரந்த நீர்ப்பரப்பிற்கு மத்தியில் பார்ப்பதற்கு ஒரு கிணறு போல தோற்றமளிக்கிறது. இந்த நீர்ப்பரப்பிற்கு கீழே அமைந்துள்ளது ஒரு குகைப்பகுதி ஆகும். இந்த இடத்தில நிறைய பேர் காணாமல் போய் உள்ளனர். எனவே இங்கு நீச்சல் போட தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தும், இங்கு வரும் மக்கள் அதையும் மீறி விளையாடிக்கொண்டு தான் உள்ளனர். இந்த தண்ணீர் மிகவும் குளிர்ச்சியானது மேலும் இங்கு குளிப்பதால் புத்துணர்ச்சி கிடைப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
Read More : இராணுவமே இல்லாத உலகின் டாப் 10 நாடுகள்
7. Bubbly Creek
சிகாகோவில் அமைந்துள்ள ஓர் நீர்நிலை தான் இந்த பப்ளி கிரீக். மிகப்பெரிய கட்டிடங்கள், ஹோட்டல்கள், சுற்றுலா பயணிகளை கவரும் பல அம்சங்கள் என பல இருந்தாலும் இந்த நீர்நிலை மட்டும் அதற்கு விதிவிலக்காக உள்ளது. கிட்டத்தட்ட நம்ம ஊர் கூவம் நதி போல தான் இதுவும். புயல் காலகட்டங்களில் உண்டான கழிவுகள், மற்றும் சாக்கடைகள் இந்த நீரில் கலந்துள்ளது. பல இடங்களில் மனித கழிவுகள் கூட இங்கே மிதப்பதை பார்க்க முடிகிறது. மேலும் சுமார் 8 முதல் 15 அடி ஆழம் கொண்ட இந்த நீர்நிலையின் அடிப்பகுதியில் மண்சேருகளும், இறந்த விலங்குகளின் அழுகிய உடல்கள் சிக்கியுள்ளன. மேலும், இதிலிருந்து விஷவாயுக்கள் வெளிப்படுகிறது. இதற்குப்பிறகும், இந்த இடத்தில் குளியல் போட நீங்கள் நினைக்க மாட்டீர்கள் என நம்புகிறோம்.
6. Lake Karachay
![]() |
earthtripper.com |
ரஷ்யாவில் அமைந்துள்ள ஒரு சிறிய ஏரி தான் இந்த காராச்சே. 1951 முதல் இந்த இடமானது நியூக்ளியர் கழிவுகளை கொட்டும் இடமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏரியை சுற்றி சில வாழ்விடங்கள் இருந்தாலும் இந்த ஏரி மிகவும் ஆபத்தானது. பார்க்க அழகாக இருந்தாலும் இந்த நீரானது முழுக்க முழுக்க கதிரியக்க ரசாயன கழிவுகள் கலந்துள்ளது. எனவே, இந்த ஏரியில் குளிப்பதோ அல்லது நீச்சல் போடுவதோ மிகவும் ஆபத்தானது. சுருக்கமாக சொல்லப்போனால் இந்த ஏரியில் குளிப்பதும் சயனைடு குப்பியை கடிப்பதும் ஒன்று.
5. Nile River
எகிப்திய நாகரீகத்தில் நைல் நதிக்கு ஒரு மிகப்பெரிய பங்களிப்பு உள்ளது எனலாம். தற்போது இந்த நைல் நதியில் நீராடுவது மற்றும் நீச்சல் போடுவதென்பது கொஞ்சம் ஆபத்தான காரியமாக உள்ளது. காரணம், இந்த நதியில் பல விஷமுள்ள பாம்புகள், சிலந்திகள் மற்றும் மூர்க்கத்தனமான விலங்குகளுக்கு புகலிடமாக உள்ளது. இவற்றில், முக்கியமாக நாம் அச்சப்பட வேண்டியது முதலைகள் பற்றி தான். உலகில் உள்ள முதலைகளில் மிகவும் ஆபத்தான முதலைகளாக இந்த நதியில் வாழும் முதலைகள் அறியப்படுகிறது. இந்த முதலைகள் கடிக்கும் சக்தியானது சுமார் 3700 பவுண்டுகள் ஆகும். ஒவ்வொரு வருடமும் இந்த பகுதியில் சுமார் நூற்றிற்கும் மேற்பட்ட தாக்குதல்கள் முதலைகளால் பதிவாகியுள்ளது. எனவே இந்த நதியில் நீந்துவதும் முதலைக்கு நம் உடலை தானம் செய்வதும் ஒன்று.
Read More : சாக்கடல் பற்றிய 10 அரிய தகவல்கள்
4. Hoover Dam
![]() |
interactive.wttw.com |
இந்த அணையானது அமெரிக்காவின் நிவேடா மற்றும் அரிசோனா ஆகிய மாகாணங்களுக்கு நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. பெரும் வெள்ளப்பெருக்கையும் அதன் மூலம் ஏற்படும் மிகப்பெரிய சேதத்தை தவிர்க்கவும் உருவாக்கப்பட்ட அணை தான் இது. இந்த இடத்தில குளிப்பதோ அல்லது நீச்சல் அடிப்பதோ சட்டப்படி குற்றம். இந்த அணையின் கட்டுமானத்தின்படி பல வழிகளில் நீர் இந்த அணைக்கு வந்து சேருகிறது, எனவே இந்த நீரோட்டத்தின் வேகமானது அதிகமாக இருக்கும். 665 அடி உயரம் கொண்ட இந்த அணையில் சுமார் 500 அடிக்கு நீர் நிறைந்து காணப்படுகிறது. எனவே இந்த அணையில் குளிப்பதென்பது மிகவும் ஆபத்தானது. அத்துமீறுபவர்களுக்கு 330 டாலர்கள் அபராதமாக விதிக்கப்படுகிறது.
3. Pink Lake
![]() |
reddit.com |
இந்த ஏரி ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ளது. இது உப்பு ஏரி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏரி முழுக்க முழுக்க பிங்க் நிறத்தில் பார்க்க ரொம்ப அழகாகவும், விசித்திரமாகவும் உள்ளது. இதற்கு காரணம் இந்த நீரில் உள்ள ஒரு வகை பாசிகள் தான். அவை சிவப்பு நிற நிறமிகளை வெளிப்படுத்துவது தான் இதன் காரணம். சாக்கடல் போலவே இந்த நீரின் உப்பின் அளவு மிகவும் அதிகம். எனவே சில பேருக்கு இந்த நீரில் உள்ள உப்பின் அளவு காரணமாக சில தோல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மேலும் ஏரியின் சில இடங்களில் துர்நாற்றங்கள் வீசுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, இந்த ஏரியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதை அங்கு உள்ள அதிகாரிகள் தடுக்கின்றனர்.
2. Blue Lagoon Of Buxton
![]() |
emergentlandscapes |
இங்லிலாந்தின் buxton என்ற பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய ஏரி தான் இந்த ப்ளூ லகூன். பார்க்க நீல வண்ணத்தில் மிகவும் அற்புதமாக உள்ளது இந்த இடம். பார்க்கும்போதே உள்ளே இறங்கி ஒரு குளியல் போடலாம் என்றுதான் நமக்கு தோன்றும், அந்த அளவிற்கு ஒரு அழகான நீர்ப்பரப்பு. ஆனால், நீங்கள் நுழையும்போதே ஒரு எச்சரிக்கை பலகை உங்கள் முன் வைக்கப்பட்டிருக்கும். சாதாரண குடிநீரின் PH அளவானது 6 முதல் 8.5 ஆகும். ஆனால் இந்த ஏரியின் PH அளவானது 11.5 முதல் 12.3 இருக்கலாம் என அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு அம்மோனியா என சொல்லப்படக்கூடிய ரசாயனத்தில் இறங்குவதற்கு சமம். இதில் இறங்குவதால் முகம் மற்றும் கண்களில் எரிச்சல், வயிற்றுப்பிரச்சனை மேலும் உடல் முழுவதும் தேமல், சொறி சிரங்கு போன்ற பிரச்சனைகள் உருவாகிறது. இதற்கான காரணம் என பார்க்கும்போது இந்த ஏரியின் அடிப்பகுதியில் இறந்த விலங்குகளின் உடல்கள், மற்றும் பழைய வாகனங்களின் உதிரி பாகங்கள் போன்றவை சிதைந்த நிலையில் கிடக்கின்றது. இதிலிருந்து வெளிப்படும் நச்சானது இந்த நீரின் தன்மையை ஒரு ரசாயன கலவையாக மாற்றிவிட்டது. எனவே, நீங்கள் அங்கு போனால் போட்டோ எடுங்க, வீடியோ எடுங்க, ஆனால் ஒரு முங்கா நீச்சல் போட நினைத்தால் ஐ பட விக்ரம் மாதிரி ஆயிடுவீங்க...
1. Amazon Basin
![]() |
interestingengineering.com |
இந்த பகுதி தென் அமெரிக்காவின் வழியாக பாயும் உலகின் மிகப்பெரிய நீர்நிலையான அமேசான் ஆறு ஆகும். கொலம்பியா மற்றும் பிரேசில் வழியாக இந்த ஆறு பயணிக்கிறது. இந்த நீர்நிலையில் மிக சாதாரணமாக மிகப்பெரிய மலைப்பாம்புகள், சிறுத்தைகள் மற்றும் முதலைகள் காணப்படுகின்றன. மேலும் மனிதனின் ஆண்குறியை தாக்கும் மீன்களும் இந்த பகுதியில் அதிகமாக காணப்படுகிறது. பொதுவாக இந்த பகுதியில் இறங்கும் ஆண்களுக்கு இந்த மீன்களால் மிகப்பெரிய ஆபத்து உள்ளது என்றே சொல்லலாம். நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு இந்த இடம் உங்களை வியக்க வைக்கும். ஆனால் இந்த நீரில் இறங்கிவிட்டால் அடுத்த ஆபரேஷன் உங்களுக்கு தான்.
For Video :
0 Comments