10 Dangerous Animals You Should Run Away From

பார்த்தவுடன் ஓட்டம் பிடிக்க வேண்டிய 10 விலங்குகள்

இந்த உலகம் பல லட்சக்கணக்கான விலங்குகளையும் மேலும் அதில் பல இனங்களையும் உருவாக்கி உள்ளது. அதில் சில வகைகள் தனது வாழ்வாதாரத்திற்காக பிற இனங்களை அழிக்கவும் தயங்குவது கிடையாது. அப்படிப்பட்ட மேலும் பார்த்தவுடனேயே நாம் ஓட்டம் பிடிக்க வேண்டிய சில விலங்குகளை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

image source nps.gov10. சுறா மீன்கள் ( Sharks )நீங்கள்  இந்த பிராணியை பார்த்தால் உடனே உங்கள் இடத்தை காலி செய்ய வேண்டும், மேலும் நீங்கள் ஒரு சிறந்த நீச்சல் தெரிந்தவராக இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் இங்கே முதலில் பார்க்கப்போவது சுறாவைப்பற்றித்தான். பல மீடியாக்களும், சினிமாக்களும் இந்த சுறாவைப்பற்றி நிறைய பேய்க்கபேய்க்கதைகளை படம் போட்டு காட்டியிருப்பாங்க, அதில் வரும் அனைத்தையும் பொய் என சொல்லி விட முடியாது. அதன் உருவங்களை மட்டும் தான் அதில் மிகைப்படுத்தி காட்டியிருப்பார்கள் மற்றபடி அதன் குணம் அதுதான்.சுறாவைப்பொறுத்தவரை அதன் முன்னே வரும் எதுவாக இருந்தாலும் துவம்சம் செய்வது தான் அதன் வழக்கம். அது பிற மீன்களாக இருந்தாலும் சரி அல்லது மனிதர்களாக இருந்தாலும் சரி. 2018 ல் மட்டும் 66 தாக்குதல்கள் மனிதர்கள் மேல் நிகழ்த்தப்பட்டுள்ளது, மேலும் வருடத்திற்கு சராசரியாக 20 தாக்குதல்கள் சுறாக்களினால் நடத்தப்படுகிறது. கடல் வாழ் விலங்குகளில்  மிகவும் அபாயகரமான வேட்டை விலங்காக இந்த சுறாக்கள் அறியப்படுகிறது. சுறாக்களில் முக்கியமாக இத்தகைய தாக்குதலில் ஈடுபடுவது வெள்ளை சுறா மற்றும் டைகர் சுறா தான்.

Read More: World's Top 10 Fastest Animals In Land
9. எறும்புகள் ( Ants )

image source Quoraஎறும்புகள் அவ்வளவு பெரிய ஆபத்தான விலங்குகளா என நீங்கள் யோசிக்கலாம் அதுவும் சுறாக்களை விட. உண்மை என்ன என்றால் ஆமாம் என்று தான் சொல்ல வேண்டும். வருடத்திற்கு சராசரியாக 30 பேர் எறும்புகளால் கொல்லப்படுகின்றனர். உலகில் எப்படிப்பட்ட மிகப்பெரிய விலங்காக இருந்தாலும் இந்த எறும்புகளின் படை அதை சூழ்ந்து கொண்டால் அதன் நிலைமை அவ்வளவு தான். அதிலும் குறிப்பாக புல்லட் எறும்பு என அறியப்படும் அந்த எறும்பின் சக்தி அபாரமானது. இந்த புல்லட் எறும்பு உங்களை கடித்து விட்டால் அதன் வலி 24 மணிநேரம் நீங்கள் உணருவீர்கள். ஒருவேளை புல்லட் எறும்பாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, எறும்பு கூட்டத்தை கண்ணில் கண்டால் கொஞ்சம் தூர விலகி இருங்கள்.8. தேனீக்கள் ( Bee )

image source goodhousekeeping.com


உலகில் நாம் அச்சப்பட வேண்டிய ஒரு விலங்கினங்களில் தேனீக்கள் முக்கியமானது. அமெரிக்காவில் மட்டும் வருடத்திற்கு சுமார் 50 பேர் தேனீக்களால் தாக்கப்பட்டு சிகிச்சைக்கு வருகின்றனர். 2000 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை சுமார் 1109 பேருக்கு இந்த தேனீக்கள் சாவுமணி அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேனீக்கள் உங்களை கொட்டி விட்டால் வலி கடுமையாக இருக்கும், மேலும் உங்களுக்கு உடனடி சிகிச்சை அவசியம். ஒரு தேனீயின் கடியால் உங்கள் உயிருக்கு பாதிப்பு ஏற்படாது ஆனால் பல தேனீக்கள் ஒன்று சேர்ந்து தாக்கினால் உங்கள் கதி அவ்வளவு தான். எனவே நீங்கள் தேனீக்களை இந்த பக்கமாக பார்த்தல் நீங்க அந்த பக்கமாக போயிடுங்க.7. மான்கள் ( Deer )

Image source lifehacker

நீங்கள் நினைக்கலாம் மான்களை பார்த்து நாம் ஏன் ஓட வேண்டும் அவை சாதுவான பிராணிகள் தானே என்று. உண்மையில் அவை சிங்கம் புலிகளுக்கு தான் அப்பாவி விலங்கு, ஆனால் நமக்கு கிடையாது. உண்மையில் பல விபத்துகள், பல காயங்கள் மற்றும் பல பேர் இறப்பிற்கு இந்த மான்கள் காரணமாக உள்ளது. அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 3300 டாலர்கள் மதிப்புடைய சொத்துக்கள் சேதமடைவதற்கு இந்த மான்கள் காரணமாக உள்ளது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இவை கடிக்கவோ அல்லது முட்டவோ தேவையில்லை இவை அருகில் போனாலே இவை போடும் குதியாட்டத்தில் பல சம்பவங்கள் அரங்கேறி விடும், மரண சம்பவம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. விலங்கியல் நிபுணர்களும் மானிடம் நெருங்குவது பற்றி எச்சரிக்கின்றனர். நீங்கள் வாகனத்தில் பயணித்தாலுமே இவை அருகில் செல்வது ஆபத்தானது.

Read More: 10 Most Dangerous Dogs In The World6. யானைகள் ( Elephants )

Image source 12go.asia


நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே மிகவும் வலுவான மற்றும் மிகப்பெரிய விலங்கு யானை தான். ஆய்வின்படி ஒவ்வொரு வருடமும் சுமார் 500 பேர் யானையால் கொல்லப்படுகின்றனர். எந்த அளவிற்கு யானைகள் மனிதர்களிடம் சாதாரணமாக பழகுகிறதோ அந்த அளவிற்கு அது ஆபத்தானது. ஒவ்வொரு வருடமும் பொது இடங்களில் யானைகளால்  ஏற்படும் சேதங்களும், விபத்துகளும்  நிகழ்ந்தவண்ணம் தான் உள்ளது. அதுவும் யானைகள், கூட்டமாக இல்லாமல் தனியாக இருந்தால் அவ்வளவு தான், எதிரில் உள்ளவர்களுக்கு சாவு நிச்சயம். யானைகள் தாக்கும் முறை என்று பார்த்தால், ஒன்று நம்மை தூக்கி எரிந்து விடும் அல்லது கீழே தள்ளி மேலே ஏறி நின்றுவிடும். சுமார் 5 டன் எடையுள்ள இந்த மிருகம் உங்கள் மேல் ஏறி நின்றால் உங்கள் நிலை என்ன?? எனவே யானையை எந்த இடத்தில் கண்டாலும் 50 அடி தள்ளியே நில்லுங்கள், முடிந்தால் இடத்தை காலி செய்திடுங்கள்.5. நீர்யானைகள் ( Hippo )
உலகின் மிகவும் ஆபத்தான விலங்குகளில் நீர்யானைகளும் ஒன்று. ஆப்ரிக்காவில் சிங்கம் மற்றும் முதலைகளால் ஏற்படும் இறப்பை விட நீர்யானைகளால் ஏற்படும் மரணங்கள் ஆகும். வருடத்திற்கு சுமார் 500 மரணங்கள் நீர்யானைகளால் நிகழ்கிறது. மேலும் உலகின் 3 ஆவது மிகப்பெரிய விலங்கான இதனால் ஒரே கடியில் முதலையையே கொல்ல  முடியும். மற்ற மிருகங்கள் போல் அல்லாமல் மனிதர்களை கண்டவுடன் துரத்துகிறது. தரை, நீர் என இரு இடங்களிலும் இந்த நீர்யானைகள் ஆபத்தானவை. சில வருடங்களுக்கு முன்னர் சிறு குட்டியாக இருந்த்தது முதல் தன்னை வர்த்தவரை கடித்து கொன்றது குறிப்பிடத்தக்கது. 2 முதல் 4 டன் எடை கொண்ட இந்த ராட்சசனை கண்டால் அங்கிருந்து ஓடி விடுவது தான் சிறந்தது.4. முதலைகள் ( Crocodiles )
பல ஆயிரம் ஆண்டுகளாக பூமியில் வாழ்ந்து வரும் முதலைகள் இன்றளவும் மிக அபாயகரமான விலங்காக உள்ளது. பலம் வாய்ந்த தாடைகள், முட்களால் போர்த்திய தோல் போன்றவற்றால் ஒரு அபாயகரமான கில்லிங் மெஷினாக இந்த முதலைகள் விளங்குகிறது. இந்த முதலைகள் வருடத்திற்கு 240 முதல் 750 தாக்குதல்களை நடத்துகின்றன, இந்த தாக்குதலில் 63% இறப்பில் தான் முடிகிறது. உப்பு நீர் முதலைகளால் மட்டும் சுமார் 30 பேர் வருடத்திற்கு கொல்லப்படுகின்றனர். இந்த முதலைகள் மனிதர்களை தேடி போய்  கொல்வது கிடையாது, ஆனால் வழியில் மாட்டிக்கொண்டால் அதற்கு மதிய உணவு நாம் தான். எனவே, முதலைகள் உள்ள நீர்நிலைகள் என்றால் எட்டிக்கூட பார்க்க வேண்டாம் மீறி பார்த்தால் தலையை இழக்க வேண்டியதுதான்.

Read More: 7 Killer Plants Eats Animals3. நாய்கள் ( Dogs )

Image Source youngalfred.comஇந்த பட்டியலில் நாய்கள் இருப்பது உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கலாம், ஆனால் இது தான் உண்மை. மனிதர்களின் நல்ல நண்பனாக விளங்கும் நாய்கள் எதிகளுக்கு முதலையை விட மோசமான பிராணிகளாக விளங்குகின்றன. பிற காட்டு விலங்குகள் போல் இல்லாமல் நாய்கள் நம்மை சுற்றி பல இடங்களில் காணப்படுகிறது. ஒரு வருடத்திற்கு சுமார் 24000 பேர் நாய்களால் தாக்கப்படுகின்றனர். கடந்த 13 வருடங்களில் 430 பேர் நாய்களால் தாக்கப்பட்டு மரணமடைந்துள்ளனர். இதில் 66% பங்களிப்பு Pit bull எனப்படும் நாய் வகையால் ஏற்பட்டுள்ளது. இனி குரைத்தாலும் சரி, குறைக்காவிட்டாலும் நாய் இருக்கும் பக்கம் நெருங்காதீர்கள்.2. பூரான்கள் ( Centipedes )
 
Image Source Pinterest


உலகில் ஏறத்தாழ 8000 வகையான பூரான்கள் உள்ளது, 3000 வகைகள் பற்றி மட்டும் தற்போது விளக்கப்பட்டுள்ளது. அனைத்து பூரான்களுமே விஷத்தன்மை கொண்டது தான். உலகின் மிகப்பெரிய இனங்கள் அமேசான் பகுதியில் காணப்படுகிறது, இவை 30 சென்டி மீட்டர் நீளம் வளரக்கூடியது. இந்த பூரான்கள் கடிப்பதால் கடுமையான  வலி ஏற்படும். அந்த இடம் சிவப்பு நிறமாக மாறி வீக்கம் ஏற்படுகிறது. சிறு பூரான்கள் மனிதனின் தோலை துளைத்து தாக்க முடியாது. இதன் கடியால் உடல் முழுவதும் ஒரு வகை ஒவ்வாமை ஏற்பட்டு திட்டு திட்டாக மாறுகிறது.1. பாம்புகள்( Snakes )

Image Source elitereaders


 உலகின் ஆபத்தான விலங்குகள் என்றால் அந்த பட்டியலில் இதற்கு தனி இடம் உண்டு. ஆண்டிற்கு பல லட்சம் மக்கள் பாம்புகளால் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். உலகில் பல பிரம்மாண்டமான விலங்குகள் இருந்தாலும் பல ஆயிரம் மக்களை கொள்ளும் விலங்காக இருப்பது இந்த பாம்புகள் தான். சுமார் 7000 முதல் 8000 மக்கள் தங்களின் உயிரை இழக்கின்றனர். இதில் பல சம்பவங்கள் மனிதர்களின் அலட்சியத்தினாலேயே நிகழ்வதாகவே விலங்கியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே நல்ல பாம்பாக இருந்தாலும் சரி, தண்ணி பாம்பாக இருந்தாலும் சரி பார்த்தவுடனே இடத்தை காலி பண்ணிடுங்க..


Post a Comment

0 Comments