How To Use Credit Cards Without Charges

கிரெடிட் கார்டு பணத்தை வட்டி இல்லாமல் 50 நாட்கள் முழுமையாக பயன்படுத்தலாம்??

தற்போது பெரும்பான்மையான மக்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வருகிறார்கள். பணக்கார மனிதர்கள் மட்டும் இதை பயன்படுத்தியது போய் நடுத்தர மக்களும் தற்போது இதை அதிகமாக பயன்படுத்தும் வகையில் நிலை மாறியுள்ளது. கிரெடிட் கார்டை சரியாக பயன்படுத்தினால் உங்களது கிரெடிட் கார்டு வரம்பை பொறுத்து 50,000 அல்லது 2,00,000 ரூபாயை சரியாக 50 நாட்களுக்கு முழுமையாக நீங்கள் பயன்படுத்த முடியும். அதற்கு சில விதிமுறைகளை பற்றி உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.
இதை சரியாக கடைபிடித்தால் நீங்கள் பயன்படுத்திய பணத்திற்கு ஒரு ரூபாய் கூட பணம் கட்ட வேண்டிய அவசியம் இருக்காது.

image source livemint.com




நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 3 விஷயங்கள் statement date, billing date and due date.


Statement date:

Statement date என்பது நீங்கள் பொருளை வாங்குவதற்கான முதல் தேதியை நீங்கள் கண்டிப்பாக  தெரிந்து கொள்ள வேண்டும். statement படி முதல் 30 நாட்கள் பில்லிங் தொகையாக கணக்கிடப்படும். உதாரணத்திற்கு உங்களின் statement date ஜனவரி 1 என்றால் உங்களுடைய பில்லிங் தேதி ஜனவரி 30. ஜனவரி 1 முதல் ஜனவரி 30 வரை நீங்கள் பயன்படுத்திய தொகையே உங்களுடைய பில் தொகையாக வரும்.

Read More: நம்பமுடியாத பல அம்சங்களுடன் ( Post Office Saving Account )



Billing date:

கிரெடிட் கார்டை பொறுத்தவரை நீங்கள் பயன்படுத்தும் முதல் 30 நாட்கள் தான் கணக்கிடப்படும். நிறைய பேர் கிரெடிட் கார்டை பயன்படுத்தி எப்போது பொருள் வாங்கினாலும் பணம் கட்ட நமக்கு 40 நாளுக்கு மேல் நேரம் கிடைப்பதாக தவறாக புரிந்து வைத்துள்ளனர். இதன் காரணமாகவே பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர். நீங்கள் ஜனவரி 1 முதல் ஜனவரி 30 வரை பயன்படுத்திய தொகையை மொத்தமாக கட்ட வேண்டும்.

Grace Period:

இது தான் நமக்கு கிடைக்கும் போனஸ் என்று சொல்லலாம். கிரெடிட் கார்டு வழங்கும் ஒவ்வொரு வங்கியும் வித்தியாசமான grace period ஐ வைத்துள்ளன. அதாவது 18 முதல் 22 நாட்கள் கணக்கிடப்படுகிறது. இது வங்கிக்கு வங்கி மாறுபடும். அதாவது நீங்கள் ஐவரி 1 முதல் 30 வரை பயன்படுத்திய தொகையை 20 நாள் கழித்து பிப்ரவரி 20 ஆம் தேதி கட்டினால் போதும்.

Bill Date :

ஜனவரி 1 முதல் 30 ஆகிய 30 நாட்கள் பயன்படுத்திய தொகையை grace period ஆன 20 நாட்கள் கழித்து பிப்ரவரி 20 ஆம் தேதி கட்ட வேண்டும். பிப்ரவரி 20 என்பது தான் உங்களுக்கான bill date அல்லது due date.

Read More: 5 நிமிடத்தில் ZERO BALANCE பேங்க் அக்கௌன்ட்டை தொடங்குங்கள்



How To Utilize 50 Days:

உங்களுக்கு இதில் சில சந்தேகம் எழலாம், நாம் 30 நாட்கள் தானே பயன்படுத்தினோம் என்று. இது தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான கட்டம்.  அதாவது ஜனவரி 1 முதல் 30 வரை பயன்படுத்திய தொகையை பிப்ரவரி 20ல் கட்ட வேண்டும்.

அதேவேளை நீங்கள் பிப்ரவரி 1 ஆம் தேதி ஒரு பொருளை வாங்கினால் அதற்கான தொகையை மார்ச் 20 ஆம் தேதி காட்டினாள் போதும். ஏனென்றால் உங்களது statement date படி ஜனவரி 1 முதல் 30 வரை பயன்படுத்திய தொகையை பில் போடு விடுவார்கள். அந்த 30 நாட்களுக்கான தொகையை நீங்கள் பிப்ரவரி 20 ஆம் தேதி கட்ட வேண்டும். அதேநேரம் அடுத்த statement date பிப்ரவரி 1 முதல் 30 நாட்கள். இந்த 30 நாட்கள் பயன்படுத்தும் தொகைக்கான பில்லை நீங்கள் grace period ஆன 20 நாட்களை கடந்து மார்ச் 20 ஆம் தேதி கட்டினால் போதும். ஆக உங்களுக்கு 50 நாட்கள் முழுமையாக பணம் கட்ட அவகாசம் கிடைக்கும்.

முக்கிய குறிப்பு : உங்களுடைய இந்த 50 நாட்களை சரியாக பயன்படுத்த நீங்கள் உங்களுடைய PURCHASEstatement date ன் முதல் 5 நாட்களுக்குள் திட்டமிட வேண்டும். அவ்வாறு திட்டமிட்டால் 1 ரூபாய் கூட வட்டியில்லாமல் நீங்கள் பயன்படுத்திய தொகையை மட்டும் கட்டினால் போதுமானது.



Post a Comment

0 Comments