Indian Most Popular Fish ( வஞ்சிரம் மீன் )

வஞ்சிரம் மீன் பற்றிய சில சுவாரசியங்கள்

வஞ்சிரம் மீன் என்று சொன்னால் தமிழ்நாட்டில் தெரியாதவர்களே இருக்க முடியாது, ஏனென்றால் இந்த மீன் அந்த அளவிற்கு இங்கு பிரபலம். விலை ஆயிரம் ரூபாயாக இருந்தாலும் இந்த மீனை வாங்கி விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவைக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இத்தகைய இந்த மீனின் சுவை பற்றி எல்லோருக்கும் தெரியும், ஆனால் இந்த மீனின் சுபாவம் என்ன மற்றும் இந்த மீனை உண்டால் என்ன பயன் என்று நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.



தமிழ்நாட்டில் இந்த மீனை வஞ்சிரம் மற்றும் சீலா என அழைக்கிறார்கள், அதேபோல கேரளாவில் இந்த மீனை  நெய்மீன் மற்றும் ஐகோரை என்று அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில் seer fish என அழைக்கப்படும் இந்த மீனிற்கு கிங்பிஷ் ( king fish ) என்ற செல்ல பெயரும் உள்ளது. கடலில் வாழக்கூடிய இந்த மீன்கள் மிகவும் வேகமாக நீந்தக்கூடியது. எதிரிகளிடம் மாட்டிக்கொள்ளும் வேளையில் கடுமையாக போராடும் குணம் கொண்டது.

image source bigfishesoftheworld


Read More: Top 10 Countries Without Army Forces

இதன் பற்கள் மிகவும் கூர்மையானது. எனவே இந்த மீனை மீனவர்கள் மிகவும் கவனமாக கையாளுவார்கள். இந்தியாவில் காணப்படும் வஞ்சிரம் மீன்கள்  சுமார் 3 முதல் 5 அடிவரை வளரக்கூடியது, மேலும் சுமார் 5 முதல் 38 கிலோ எடை வரை இருக்கும். இது கடலின் மேற்பகுதியில் துள்ளிக்குதிக்கும் ஆற்றல் கொண்டது. பெரும்பாலான வஞ்சிர மீன்கள் தூண்டிலில் பிடிக்கப்படுகிறது.
மத்தி, இறால் போன்றவற்றை உணவாக உட்கொள்கிறது. இந்தியப்பெருங்கடங்களில் இந்த மீன்கள் அதிகமாக கிடைக்கிறது.

மருத்துவ குணங்கள் என பார்க்கும்போது வஞ்சிரம் மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. மேலும் நல்லவகை கொழுப்புகளும் அதிகம் உள்ளது. இவை இதயத்திற்கு பலம் சேர்க்கக்கூடியது மேலும் உயர்  ரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்தி இதயத்துடிப்பை சீராக்குகிறது. மேலும் இவை குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் பலன்தரக்கூடியது.



மேலும் இந்த மீனில் உள்ள சிறப்பம்சம் என்ன என்றால் இந்த மீனை சுத்தம் செய்யும்போது மிகவும் குறைந்த அளவிற்கே கழிவாக வீணாகிறது. ஒரு மீனை நீங்கள் வெட்டி சுத்தம் செய்தால் 10% மட்டுமே உங்களுக்கு வீணாகிறது. குழம்பு, வறுவல் என இரண்டிற்குமே இந்த மீன்கள் நன்றாக இருக்கும். slice piece என சொல்லப்படும் மிகவும் மெல்லிய அளவிலான மீன் துண்டிற்கு இந்த மீன் பிரபலமானது. எனவே பல ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் இந்த மீன்கள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. மேலும் இந்தியாவில் அதிக மக்களால் விரும்பி உண்ணக்கூடிய மீனாகவும் இந்த வஞ்சிரம் மீன் உள்ளது.

Read More : Amazing Facts About 'Dead Sea'



Post a Comment

0 Comments