Presige Movie 2006 In Tamil

கிறிஸ்டோபர் நோலனின் தரமான படைப்பு

 Mystery + Thriller = Prestige


 
image source fanart.tv

கிரிஸ்டோபர் நோலனோட இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு  வெளியான பிரஸ்டீஜ் படத்தை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போறோம். பொதுவாகவே கிரிஸ்டோபர் நோலனோட படம் என்றாலே படம் பயங்கர ட்விஸ்டாகவும், நேர்த்தியாகவும் இருக்கும். ஒரு சில சீன்களை நீங்க பார்க்காம விட்டால் கூட படம் புரியாது, படத்துடைய ஒவ்வொரு சீன்களும் அவ்வளவு முக்கியம். அந்த மாதிரி ஒரு தரமான படம் தான் இது. படத்தில் இரண்டு ஹீரோக்கள் கிறிஸ்டியன் பேல் மற்றும் ஹக் ஜேக்மேன். இரண்டு பேருமே தரமான ஹீரோக்கள். கதைப்படி இரண்டு பேரும் நண்பர்கள். இரண்டு பேரும் ஒரு மேஜிக் கம்பனியில் helper ஆ  இருக்காங்க. ஜான் கட்டர் என்பவர் அந்த மேஜிக் ஷோவை நடத்துகிறார். இந்த  குரூப்ல ராபர்ட்டுடைய மனைவியும் வேலை செய்கிறாள். அதாவது Huge Jackman ன் மனைவியும். நண்பர்களாக உள்ள ராபர்ட்டும், போர்டனும் ஒரு மேஜிக் ஷோவில் வேலை செய்து கொண்டு உள்ளனர். அப்போது கை, கால்கள் கட்டிய நிலையில் ஒரு பெண் நீர் நிரம்பிய கண்ணாடி தொட்டியில் இறக்கப்படும் ஒரு மேஜிக் செய்யப்படுகிறது. இந்த மேஜிக்கை ராபர்ட்டின் மனைவி தான் செய்கிறார். அவரது கையை கட்டும் போது போர்டன் ( Christian Bale ) கொஞ்சம் twist ஆன முடிச்சை போட்டிடறாரு, இதனால் அந்த முடிச்சை அவிழ்க்க முடியாமல் ராபர்ட்டுடைய மனைவி இறந்து விடுகிறார். இதற்குப்பிறகு ராபர்ட்டும், போர்டனும் எதிரியாக மாரிடறாங்க. தனித்தனியே சென்று இரண்டு பேருமே பெரிய Magician ஆக மாறிடராங்க. இருந்தாலும் அவர்களுக்குள்ளே பகையும், ஈகோவும் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதனால் இரண்டு பேரும் மற்றவர் மேஜிக் ஷோ நடத்தும் போது மாறு வேடத்தில் போவதும், மற்றவங்க ட்ரிக்சை தெறிஞ்சுக்கிட்டு அதைவிட சிறப்பா செய்ய முயற்சி செய்றாங்க. மனைவியுடைய இறப்புக்கு பலி வாங்க துடிக்கும் ராபர்ட் ஒரு முறை போர்டன் ஷோ நடத்தும் போது உள்ளே நுழையும் அவர் அந்த ஷோவில் குளருபடி செய்றாரு, போர்டனுடைய இரண்டு விரல்கள் துண்டாயிடுது. இதற்குப்பிறகு ராபர்ட் பண்ற அனைத்து ஷோக்களிளும் போர்டன் உள்ளே நுழைந்து ராபர்ட்டை அசிங்கப்படுத்துறான்.

Image From Prestige Movie

பிறகு போர்டன் Transporter Man என்கிற ஒரு புதுமையான ஷோ செய்கிறாரு. இதுல போர்டன் மக்கள் மத்தியில் ரொம்ப பிரபலமாக ஆக மாறிடரார். போர்டனுடைய அந்த மேஜிக்குடைய சீக்ரட்டை அடைய ராபர்ட் தன்னுடைய அசிஸ்டன்ட் ( Olivia ) ஒலிவியாவை spy ஆக அனுப்புறாரு. ஒலிவியாவும் போர்டனுக்கு தெரியாமல் அவனுடைய சீக்ரட் டைரியை தூக்கிட்டு வந்து ராபர்ட்டிடம் கொடுக்கிறா. ஆனால் அந்த டைரியில் அந்த மேஜிக்குடைய சீக்ரட் இல்லாதனால ராபர்ட் ஏமாந்து போயிடறான். அதனால் போர்டனுடைய அசிஸ்டன்டை கடத்தி பிளாக்மெயில் பண்றான், அப்போதும் அவனுக்கு அந்த சீக்ரட் கிடைக்கவில்லை. இதற்குப்பிறகு டெஸ்லா என்கிற ஒருத்தன் கூட சேர்ந்து ராபர்ட் Transporter Man  மேஜிக்கை செய்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைகிறார். இந்த ட்ரிக்சை தெரிஞ்சிக்க போர்டன் அங்க போகிறாரு, அங்க ஏற்படுற குளருபடியில் ராபர்ட் இறந்திடுறாரு, இந்த குற்றத்திற்காக போர்டனுக்கு மரண தண்டனை வழங்கிடறாங்க, ஆனால் உண்மையில் ராபர்ட் இறந்திருக்க மாட்டார். ஒரு ட்ரிக்சை பயன்படுத்தி போர்டனை பலி வாங்கி இருப்பார். ஆனால், கிளைமேக்சில் இதைவிட பெரிய ட்விஸ்டை போர்டன் வெச்சிருப்பாரு இதை படத்தை பார்த்து நீங்க தெரிஞ்சுக்கோங்க. கிறிஸ்டோபர் நோலனுடைய இந்த படம் பெரிய பாராட்டுகளை பெற்ற மிகப்பெரிய வெற்றிப்படம். படத்தில் மேஜிக் ஷோ பண்றதுல இருக்கிற ரிஸ்கையும், ஈகோவால் ஏற்படுகிற பேராபத்தை பற்றியும் படம் தெளிவுபடுத்துது. படத்துடைய திரைக்கதை மிகவும் மிரட்டலா பண்ணியிருப்பாங்க, இந்த படத்தை பார்த்திங்கன்னா நீங்களும் நிச்சயமாக கிறிஸ்டோபர் நோலனுடைய ரசிகராக மாறிடுவீங்க. இந்த படம் தமிழ் டப்பிங் available கிடையாது. படத்துடைய டவுன்லோட் லிங்க் இங்க இருக்கு, விருப்பமமுள்ளவங்க பயன்படுத்திக்கோங்க...

குறிப்பு : ஒரு வேலை படத்தின் கிளைமாக்ஸ் புரியலைன்னா கமெண்ட் பண்ணுங்க நண்பா...


Post a Comment

0 Comments