10 Amazing Inventions From India

உலகம் வியக்கும் இந்தியாவின் 10 கண்டுபிடிப்புகள்


உலகின் மிகவும் தொன்மையான நாகரீகத்தை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பல மொழி பேசும் மக்கள் ஒருங்கிணைத்து வாழ்வதை நாம் இங்கு காண முடியும். கல்வி, நாகரீகம், விஞ்ஞானம் போன்றவற்றில் பல கண்டுபிடிப்புகளை நாம் அறிந்திருப்போம். அவற்றில் நமது இந்தியர்களின் பங்களிப்பும் நிறைய உள்ளது என்பதை நம்மில் பலர் அறிவதில்லை.

உலகின் பெரும்பான்மையான மக்கள் பயன்பெறும் வகையில் இந்திய மக்களால் கண்டுபிடிக்கப்பட்ட அரிய கண்டுபிடிப்புகள் பற்றி நாம் இங்கு பார்க்கலாம்.

#1. பூஜ்ஜியம்

ஆரம்ப காலத்தில் வாழ்ந்த மக்கள் எதுவுமே இல்லாத காரியத்தை மேலும் ஒன்றும்மில்லை என்ற நிலையை குறிப்பதற்கென்று எந்தவொரு குறியீடும் அந்த காலத்தில் கிடையாது. இந்தியாவில் 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வாழ்ந்த கணித மேதை ஆரியபட்டா தான் முதன்முதலில் பூஜ்ஜியம் (0) என்ற குறியீட்டை கன்டுபிடித்தார். நமக்கு நன்றாக தெரியும் எப்படிப்பட்ட கணித விகிதமாக இருந்தாலும் பூஜ்ஜியத்தின் உதவியின்றி எதுவுமே செய்ய முடியாது. தற்போது  நாம் பெருதும் நம்பியுள்ள கணினியின் பைனரி சிஸ்டமே பூஜ்ஜியம் மற்றும் எண் ஒன்றை அடிப்படையாகக்கொண்டது தான். அப்படிப்பட்ட இந்த அறிய கண்டுபிடிப்பை உலகிற்கு அளித்தது நமது இந்தியா தான்.

#2. செஸ் விளையாட்டு ( Chess )

Source : Chess.com

உலகின் மிகவும் பிரபலமான மற்றும் அதிக மக்கள் விரும்பும் விளையாட்டுகளில் செஸ் விளையாட்டும் ஒன்று. இந்த செஸ் விளையாட்டும் இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விளையாட்டு தான். சதுரங்கம் என்ற பெயரில் 6 ஆம் நூற்றாண்டில் இந்தியர்களால் விளையாடப்பட்ட ஒரு விளையாட்டு இதுவாகும். மேலும் அறிவாற்றலை மேம்படுத்தும் ஒரு விளையாட்டாக இது மிகவும் பிரபலம்.

#3. Ruler வரைவுகோல்

Source: History Of Pencil

இந்திய நாகரீகத்தில் கி.மு 1500 களிலேயே ஸ்கேல் அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தகால கட்டிட தொழிநுட்பத்தில் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் உதவியைக்கொண்டே அந்தக்கால கோபுரங்களில் ஏணிப்படிகள் உருவாக்கப்பட்டுள்ளது. 

#4. வயர்லெஸ் தொலைத்தொடர்பு ( Wireless )

Source : India Today
Source ; India  Today

ரேடியோ தொழில்நுட்பம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது மார்க்கோனி தான். இந்த கண்டுபிடிப்புக்காக இவருக்கு 1909 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால், இந்தியாவை சேர்ந்த ஜெகதீஸ் சந்திர போஸ் 1895 ஆம் ஆண்டிலேயே ரேடியோ தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து கொல்கத்தாவின் டவுன்ஹாலில் பொதுமக்கள் முன்னிலையில் 75 அடி தூரத்திற்குள் இதை செயல்படுத்திக்காட்டி ஓர் செயல் விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்த தொழில்நுட்பத்தை இவர் அறிமுகம் செய்திருந்தாலும் இதற்கு அவர் எந்தவொரு காப்புரிமையும் பெறவில்லை. இதனால் இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்திய மார்க்கோனி இதன் பெருமையை தக்க வைத்துக்கொண்டார்.

#5. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை 


கி.பி 600 ஆம் நூற்றாண்டில் சுஸ்ருதா என்ற மருத்துவ நிபுணரால் மருத்துவம் மற்றும் அறுவைசிகிச்சை தொடர்பான ஒரு விரிவான புத்தகத்தை எழுதியுள்ளார். அந்தக்காலத்தில் மருத்துவ அறுவைசிகிச்சை துறையில் தந்தையாக அழைக்கப்படுகிறார். இதற்காக அவர் நூற்றுக்கணக்கான மருத்துவ குணம் கொண்ட தாவரங்களை பயன்படுத்தி உள்ளார். இதில் மூக்கு மாற்றியமைத்தல் அறுவைசிகிச்சை மற்றும் முகத்தின் தோல் மாற்று அறுவைசிகிச்சை போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த 20 ஆம் நூற்றாண்டில் பெரும் வளர்ச்சி அடைந்திருக்கும் பிளாஸ்டிக் சர்ஜரிகளின் அடிப்படை இந்திய மருத்துவ முறை தான்.

#6. கண்புரை அறுவைசிகிச்சை


பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை மட்டுமில்லாமல் கண்புரை அறுவைசிகிச்சையின் தாயகமும் இந்தியா தான். கருவிழி மீது படரும் தேவையில்லாத ஒரு படலத்தை அறுவைசிகிச்சை மூலம் நீக்குவது தான் இந்த மருத்துவம். தற்போது இதற்கு மேலைநாடுகளில் பல்வேறு சிகிச்சைமுறைகள் வந்துவிட்டாலும் முதன்முதலாக இந்த அறுவைசிகிச்சை முறையை உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் இந்தியர்கள் தான்.

#7. யோகா
Source : India Today

உலகின் மிகவும் பிரபலமான ஆரோக்யம் சார்ந்த கலைகளில் யோகா முக்கிய இடத்தை பெற்றுள்ளது. உலகின் புகழ் பெற்ற நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் தங்களை இளமையாக வைத்துக்கொள்ள உதவுவது இந்த யோகா தான். இதற்கு உலக மக்கள் இந்தியாவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் யோகா பயிற்றுவிக்கப்படுகிறது. இது உங்கள் உடலுக்கு கொடுக்கும் பயிற்சியும் தாண்டி உங்கள் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது. மேலும் உங்களை இளமையுடன் வைக்கிறது. மேலும் ஜூன் 21 ஆம் நாளை சர்வதேச யோகா தினமாக இந்திய பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

#8. ஷாம்பூ ( Shampoo )


இந்த ஷாம்பூ என்ற வார்த்தை இந்தியில் சாம்போ ( champo ) என்ற வார்த்தையில் இருந்து வந்ததாகும். இதற்கு அர்த்தம் உங்கள் உடலுக்கு மசாஜ் செய்வதாகும். இந்தியாவில் 1762 ல் தலை மசாஜ் செய்வது வழக்கத்தில் இருந்தது. இதற்கு முதலில் பயன்படுத்தப்பட்ட ஷாம்புகள் இயற்கை எண்ணெய்கள் மற்றும் மூலிகைகள். பிறகு மேலைநாடுகளில் இதற்கு புதுவடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக கருகருவென ஜொலிக்கும் இயற்கை கூந்தலுக்கு உலக மக்கள் இந்தியாவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

#9. யுனிவெர்சல் போர்ட்  ( USB )


Universal Serial Bus எனப்படும் இந்த தொழில்நுட்பம் கணினி உலகின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர் ஒரு அமெரிக்காவாழ் இந்தியரான அஜய் பட் என்பவர். இவர் 1990 களில் INTEL நிறுவனத்தில் என்ஜினியராக பணிபுரிந்தார். இவரது இந்த கண்டுபிடிப்பால் கணினி துறையில் ஓர் மிகப்பெரிய புரட்சியே ஏற்பட்டது எனலாம். இந்த போர்ட் வசதி உலக அளவில் தயாரிக்கப்படும் அனைத்து கணினிகளில் இணைக்கப்பட்டது. மேலும் இதை மையப்படுத்தி  பல கணினி சார்ந்த பெண்டிரைவ், ஹார்டிஸ்க்குகள், டேட்டா கேபிள்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வளவு பயனுள்ள ஒரு கண்டுபிடிப்பை உலகிற்கு வழங்கியது ஒரு இந்தியர் என்பது இங்கே முக்கியமான ஒன்று.

#10. பொத்தான்கள் ( Buttons )

Source: GyanPro

ஆடை கலாச்சாரத்தில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய ஒன்று தான் ஆடையில் வைத்து தைக்கப்படும் பொத்தான்கள். இந்தியாவின் மிகப்பெரிய நாகரீகங்களில் ஒன்றான மொகஞ்சதாரோவில் தான் இந்த பொத்தான்கள் முதன் முதலாக பயன்படுத்தப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாகும். ஆரம்பத்தில் வெறும் இரண்டு துளைகளுடன் இந்த பொத்தான்கள் வடிவமைக்கப்பட்டிருந்தது, பிறகு பல வடிவங்களில் இது தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
Post a Comment

0 Comments