History Of Police Encounter

போலீஸ் என்கவுண்டர் உருவான கதை

Source : India Today

போலீஸ் கதாபாத்திரத்தை மையப்படுத்தி வெற்றி பெற்ற நிறைய படங்களில் நாம் கேட்ட பிரபலமான வார்த்தை என்கவுண்டர். உண்மையில் இந்த என்கவுண்டர் சட்டம் உருவான கதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

Encounter killing எனப்படும் இந்த சட்டம் தெற்கு ஆசியாவில் கடைபிடிக்கப்படும் ஓர் சட்டம் ஆகும். முக்கியமாக இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது. உண்மையில் இந்த சட்டத்தை விளக்கும்போது நீதிக்குப்புறம்பாக காவல் துறை மற்றும் ராணுவம் சட்டத்தை பயன்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் சமூக விரோதிகள், மற்றும் தீவிரவாத குற்றவாளிகளுடன் சண்டையிடும்போது தங்களை காத்துக்கொள்ளும் ஒரு நடவடிக்கையாக இது கூறப்படுகிறது.



1990 மற்றும் 2000 ஆண்டுகளின் இடைப்பட்ட காலகட்டத்தில் தான் இந்த சட்ட நடவடிக்கை இந்தியாவில் தலைதூக்க ஆரம்பித்தது. இந்தியாவில் முதல் என்கவுண்டர் மும்பையில் 1982, ஜனவரி 11 ம் தேதி நடத்தப்பட்டது. இதில் மன்யா சர்வ் என்ற ரவுடி ராஜா தம்பட் மற்றும் இசக்கி பகவான் என்ற போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 1900 முதல் 2000 ஆம் ஆண்டுகளில் சட்டவிரோத மற்றும் பெரும் குற்றச்செயலில் ஈடுபடும் மாஃபியா குற்றவாளிகளை ஒழிக்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். இதற்குப்பிறகு இந்த நடவடிக்கை  இந்தியாவின் பல நகரங்களுக்கு பரவியது.

20ஆம் நூற்றாண்டில் இந்த நடவடிக்கை மிகவும் பிரபலமானது. அதே நேரம் பல போலியான ஜோடிக்கப்பட்ட என்கவுண்டர் நிகழ்வுகள் நடைபெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது போன்ற சர்ச்சைக்குரிய பல போலி எனவுன்டர்கள் விமர்ச்சனத்துள்ளானது.

பெரும்பாலும் இந்த நடவடிக்கை மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தாவில் அதிகம் நடைபெற்றது. பல எனவுன்டர்கள் பொய்யாக ஜோடிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட ஆரம்பித்தது.

Source: Hindustan Times


2003 வரை சுமார் 1200 குற்றவாளிகள் எனவுண்டரில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 2009 முதல் 2013 வரை இது போன்ற 555 வழக்குகள் பதிவாகியுள்ளது. அதிக என்கவுண்டர்கள் செய்த முதல் 5 இடங்களில் மும்பை போலீசார் தான் உள்ளனர். என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என கூறப்படும் பிரதீப் சர்மா தான் இந்த பட்டியலில் முதல் இடத்தில உள்ளார். இதுவரை 312 என்கவுண்டர் இவரால் நிகழ்த்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments