( Men's Puberty ) ஆண் பூப்பெய்தல் எப்போது நடக்கிறது
( Puberty ) அதாவது வயதுக்கு வருதல் அல்லது பருவ வயதை அடைதல் அப்படியும் சொல்லலாம். பூப்பெய்தல் எனவும் சொல்லப்படுகிறது. பொதுவாக நாம் இதை பெண்களுக்கு தான் கேள்விப்பட்டிருப்போம்,
புனித நீராட்டு விழா என்ற பெயரில் நிகழ்ச்சிகள் செய்வதையும் நாம் பார்த்திருப்போம். ஆண்களுக்கு இதே போல பூப்பெய்தல் எப்போது நடக்கிறது என்பதை பற்றி இங்கு பார்க்கலாம். ஒரு பெண் பூப்பெய்து விட்டால் அவள் தாய்மையடையும் நிலையை அடைகிறாள் என்றும் சொல்லலாம். பூப்பெய்தல் நிகழ்வுக்குப்பிறகுதான் அவர்களுக்கு மாதவிடாய் என சொல்லப்படக்கூடிய மாதத்தில் மூன்று நாள் இரத்தப்போக்கு ஏற்படுகிறது. அதே போல ஒரு ஆண் இன்னொரு உயிரை உருவாக்கும் நிலை, அதாவது விந்தணுக்கள் உற்பத்தி தொடங்கும் நிலை தான் இது. ஆனால், பெண்களுக்கு ஏற்படுகின்ற இரத்தப்போக்கு போல ஆண்களுக்கு எந்த நிகழ்வும் ஏற்படாது, மாறாக அந்த பருவ வயதை அடைவது தான் அது.
Read More: Average Age Of Lose Virginity By Countries
![]() |
Source : Hindustan Times |
![]() |
Source : news.yahoo.com |
இந்த நிகழ்வு ஒவ்வொருவருக்கும் வேறுபடும், பொதுவாக 10 முதல் 12 வயது தான் ஆண்களுக்கான இந்த பருவ வயதின் தொடக்கம். இந்த வயதில் தான் ஆண்களுக்கு விந்தணுக்கள் உற்பத்தியானது தொடங்குகிறது. இந்த வயதில் தான் ஆணின் விதைப்பைகள் மற்றும் ஆணுறுப்பு வளர்ச்சி அடைகிறது. மேலும் அந்தரங்க பகுதியில் முடி முளைக்க ஆரம்பிக்கிறது. மேலும் உடலின் பெரும் பகுதிகளில் இந்த முடி வளர்ச்சி அதிகமாகிறது. ஆரம்பத்தில் லேசாக முளைக்கும் இந்த முடிகள் பிறகு அடர்த்தியாக மாறுகிறது. முக்கியமாக ஆண்களின் மார்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் முடிகள் வளர ஆரம்பிக்கிறது.
அடுத்ததாக பாதம், கை மற்றும் கால்களின் வளர்ச்சி அதிகமாகிறது, மற்ற நேரத்தை விட இந்த காலங்களில் இதன் வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஆண்களில் சில பேருக்கு மார்பக வளர்ச்சியும் இருக்கும். மேலும் ஆண்களுக்கு மெல்லிய குரல் மாறி கனத்த குரலாக மாறும். அந்தரங்க உறுப்புகளில் முடி வளர்ச்சியை தொடர்ந்து தாடி, மீசை மற்றும் அக்குள் முடி வளர்ச்சி ஆரம்பிக்கிறது பிறகு கை, கால்களில் முடி வளர்ச்சி அதிகரிக்கிறது.
Read More: Impacts of Gay, Lesbian, and Bisexual Community
![]() |
Source : Healthline |
ஆணுறுப்பின் வளர்ச்சியை தொடந்து ஆணுறுப்பில் விறைப்பு தன்மை ஏற்பட ஆரம்பிக்கும், இது ஹார்மோன் சுரப்பினாலும் பாலியல் ரீதியான எண்ணங்களாலும் ஏற்படும், இருந்தும் இந்த மாற்றங்கள் அனைத்தும் இயல்பானவையே. தொடர்ந்து விந்தணுக்களின் உற்பத்தி அதிகமாகி விரைப்புப்புத்தன்மை காரணமாக அவை வெளியேறுகின்றன. இது சில பேருக்கு தூக்கத்திலும் ஏற்படும், ஒரு முறை விந்தணுக்கள் வெளியேறி விட்டால் பிறகு உடல் அதை திரும்ப திரும்ப உற்பத்தி செய்கிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் 16 வயதிற்குள் ஏற்பட்டு விடுகிறது.
0 Comments