People Getting Shy To Treat These 5 Disease

வெளியில் சொல்ல வெட்கப்படும்  5 பிரச்சனைகள்





நோய் தாக்கம் என்பது மனிதர்களுக்கு மிகவும் சாதாரண ஒன்று தான். நோய் வருவதும் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதும் இயல்பான ஒன்று. இருந்தும் சில நோய்களுக்கு மக்கள் சிகிச்சை எடுக்க தயங்குகின்றனர், இவ்வளவு ஏன் வெளியில் சொல்லக்கூட கூச்சப்படுகின்றனர். அப்படிப்பட்ட சில சம்பவங்களைப்பற்றி தான் நாம் இங்கு காணப்போகிறோம்.



#1 வாய் துர்நாற்றம் 

Source : MalayalamEmagazine

முதலில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் வந்த இந்த நோய் தற்போது 20 வயது முதலேயே பாதிக்கிறது. இந்த பிரச்சினையினால் உங்கள் திருமண வாழ்க்கை மற்றும் தாம்பத்திய உறவில் கூட விரிசல் ஏற்படலாம். இதனுடைய அடிப்படை என்று பார்த்தால் உணவு முறை, மற்றும் வாழ்க்கை முறை ஆகும். தற்போது அனைவரும் பாரம்பரிய உணவை மறந்து பிட்ஸா, பர்கர் என ( Fast Food ) ஐ புகுந்து விளையாடுவது தான். மேலும் இந்தியாவில் 13 வயதில் இருந்தே புகைப்பழக்கம் ஆரம்பித்துவிடுவதும் ஓர் முக்கிய காரணம் ஆகும். ஆரம்பத்திலேயே உரிய சிகிச்சை மற்றும் உணவு பழக்கங்களை மாற்றிக்கொண்டால் எளிதில் இதில் இருந்து விடைபெறலாம்.



 #2 பிறப்புறுப்பில் ஏற்படும் காயங்கள் 

Source : BusinessInsider

ஆண்களும் சரி, பெண்களும் சரி சுகாதாரத்திற்காக குறிப்பிட்ட நாட்களில் பிறப்புறுப்பில் உள்ள முடிகளை கலைவது இயல்பு தான். ஆனால், அவ்வாறு செய்யும்போது உறுப்பில் ஏதேனும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டால் சிரமமாகி விடும். வெளியே சொல்ல வெட்கப்பட்டு அதை அப்படியே விட்டு விடுவதால் அந்த இடத்தில் கிருமி தொற்று ஏற்பட்டு பல பிரச்சனைகளை கொடுக்கின்றன. இதற்கு வருமுன் காப்பதே சிறந்தது. ஷேவ் செய்வது என முடிவு செய்து விட்டால் முதலில் கத்தரி மூலம் லேசாக ட்ரிம் செய்து கொள்வது நல்லது. பிறகு, புது ரேசரை பயன்படுத்தி காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம். முடிந்த அளவு கெமிக்கல் நிறைந்த ஹேர் ரீமூவல் க்ரீம்களை உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது.





#3 மார்பகப்புற்று நோய் 

Source : HealthImaging

பெண்களுக்கு வரும் புற்று நோய்களில் மார்பகப்புற்று நோய்  இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள லட்சம் பெண்களில் 36 பேருக்கு இந்த புற்று நோய் இருப்பதாகவும், இது கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. தற்போதும் இதைப்பற்றி பெண்கள் விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர் மற்றும் இதைப்பற்றி வெளியில் பேசவும், சிகிச்சைக்கு அணுகவும் தயக்கம் காட்டுகின்றனர். பெரும்பாலும் இந்த புற்று நோய் தாய்ப்பால் புகட்டாத பெண்களுக்கும், அதிக கருத்தடை மாத்திரையை உபயோகப்படுத்துபவர்களுக்கும் வருகிறது. உரிய நேரத்தில் சிகிச்சை எடுக்காமல் போனால் இது மரணத்தில் கொண்டு போய் சேர்க்கும்.


#4 மாதவிடாய் பிரச்சனை 

Source : Medlife

இந்தியாவில் நகர்ப்புறங்களில் இது சாதாரணமாக ஆகி விட்டாலும் இங்குள்ள கிராமப்புறங்கள், மற்றும் வடஇந்தியாவில் இந்த பிரச்சனை மிகவும் இழிவாகவும், தீட்டாகவும் பார்க்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் வடஇந்தியாவில் நாப்கின் பற்றிய விழிப்புணர்வு கூட இல்லாமல் உள்ளனர். உண்மையில் மாதவிடாய் என்பது ஒரு தீண்டத்தகாத நோய் கிடையாது. ஒரு பெண் தாய்மை நிலையை அடைய தயாராவதையே இது குறிக்கிறது. எனவே இது சம்பந்தமாக எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை ஆரம்பத்திலேயே சிகிச்சை மூலம் சரி செய்வது நல்லது.


#5 மூலநோய் 


நாற்பது வயதை கடந்த ஆண், பெண் இருபாலருக்கும் வரும் நோய்களில் ஒன்று தான் மூலநோய். புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் மட்டும் ஒரு வருடத்திற்கு 10 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு பின்னாளில் கடுமையான மலச்சிக்கல், ரத்தப்போக்கு, ஆசனவாயில் வலி போன்ற பிரச்சனைக்கு ஆளாகின்றனர். பெரும்பாலும் அமர்ந்து வேலை செய்பவர்கள், தொடர்ந்து முக்கி முக்கி மலம் கழிப்பவர்கள், கடினமான இருக்கைகளை பயன்படுத்துபவர் போன்றோருக்கு எளிதில் இந்த நோய் வருகிறது. சில பேருக்கு குடும்ப வகையாகவும் வருகிறது. ஆரம்பத்திலே சிகிச்சை மேற்கொள்வதின் மூலம் இதை தவிர்க்கலாம்.






Post a Comment

0 Comments