What Happened To Bodybuilding Legend Ronnie Coleman?

ரோனி கோல்மனின் இந்த நிலைக்கு என்ன காரணம்??

உலகின் மிகச்சிறந்த பாடிபில்டர்களில் ரோனி கோல்மனும் ஒருவர். பாடிபில்டிங் போட்டிகளில் முக்கிய போட்டியான மிஸ்டர் ஒலிம்பியா  ( Mr.Olympia ) பட்டத்தை இதுவரை 8 முறை வென்று சாதனை படைத்துள்ளார். இதை அவர் எளிதில் செய்து விடவில்லை. பல தோல்வி, கஷ்டங்களை கடந்து தான் இவர் இந்த நிலையை அடைந்தார்.  மொத்தமாக 26 IFBB பட்டங்களை வென்று உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளார். இப்படிப்பட்ட ஒரு பாடிபில்டிங் ஜாம்பவான்  அந்த பால்பில்டிங்னாலயே பெரும் சிக்கலுக்கு ஆளாகி உள்ளார். 
Mr.Olympia
தனது 2007 ஆம் ஆண்டு ( Mr.Olympia ) ற்குப் பிறகு கடுமையான பின்புற வலியால்  அவதிப்படுகிறார். ரொம்ப கனமாக  செய்த front squad மற்றும் leg press னால் கீழ் முதுகு மற்றும இடுப்பு எழும்புகள் சேதமடைந்துள்ளது. இதற்கு முன்னாடி  கூட  இவரது தொழிலால் நிறைய அறுவை  சிகிச்சை செய்து கொண்டுள்ளார். ஆனால் தற்போது நடக்கப்போகும் backbone surgery ஒருவேளை அவரை முழுமையாக நடக்க விடாமல் செய்தாலும் ஆச்சர்யப்படுவதில்லை, காரணம் இவரது அளவு கடந்த உடற்பயிற்சியால் அவரது பின்புற எழும்புகளே தேய்ந்து விட்டது. அடுத்ததாக அந்த சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. இவரது 8 ஆவது பின்புற அறுவைசிகிச்சையில் 4 screw எனப்படும் மெட்டல்களை   இவரது பின்புறத்தில் பொறுத்தியிருக்கிறார்கள். தற்போது இவர்  தன்னுடைய உடல் நலம் குறித்து இன்ஸ்டகிராமில் பதிவு போட துவங்கிட்டாரு. 
 சில மாதங்கள் wheel chair ல் பொழுதை  கழித்த அவர் தற்போது திரும்பவும் தன்னுடைய லவ்வரான ஜிம்முக்கு போய் உடற்பயிற்சியை  ஆரம்பிச்சுட்டாரு. ஆனால் தற்போது ரொம்பவே சாதாரணமான எடைகளை மட்டும் தான் அவர் தூக்கி உடற்பயிற்சி செய்யனும். இதற்குப்பிறகு திரும்பவும் ஜிம்முக்கு வருகிறார், தனது உடற்பயிற்சியை தொடர்கிறார். இந்த சம்பவங்கள் நடந்து எல்லாமே 2018 ஆம் ஆண்டு. இந்த சிகிச்சைகளுக்கே சுமார் 2 மில்லியன் செலவு செய்துள்ளார் ரோன்னி.  இதோடு எல்லாம் முடிந்தது என்று நினைத்த ரோன்னிக்கு அடுத்த சோகம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி காத்திருந்தது. இந்த முறை சாதாரணமாக தெரியவில்லை. உடனடியாக ஒரு அறுவைசிகிச்சை தேவைப்படும் என டாக்டர்கள் கூறுகின்றனர். எனவே பல சர்ஜரிகள் செய்து கொண்ட ரோன்னிக்கு இந்த முறை வலது இடுப்பு பகுதியில் சர்ஜரி செய்ய வேண்டும். தற்போது அவருக்கு hip replacement surgery யும்  பண்ணிட்டாங்க. இப்போதும் ரோன்னி கோல்மேனின் எண்ண ஓட்டங்கள் சொல்வதெல்லாம், திரும்பவும் தன்னால் Leg Press உடற்பயிற்சியை செய்ய முடியுமா என்பது தான்.
Image : Instagram @ronniecoleman8
 இதில் நாம தெரிந்து கொண்ட ஒரே விசயம் Ronnie Coleman என்றைக்கும் இந்த பாடிபில்டிங்கை விடப்போவதில்லை. The Truth Is Ronnie Coleman Is Bodybuilding. இதில் நாம கற்றுக்கொள்ள கூடிய ஒரு விசயம் என்றால், உடற்பயிற்சி செய்யுங்கள் அது தவறே கிடையாது, ரொம்ப நல்ல விசயம் தான். ஆனால், அது உங்கள் உடம்பை வலுவாக்க வேண்டுமே தவிர உங்கள் ஆரோக்கியத்தை நாசம் செய்யும் வகையில் அது அமைந்து விடக்கூடாது. ரோன்னியின் இந்த நிலைமைக்கு அவரது அளவுகடந்த ஆர்வம் தான் என இந்த துறையை சேர்ந்த பல வல்லுநர்கள் சொல்றாங்க. இவ்வளவு நடந்த பிறகும் ரோன்னி இன்னும் பாடிபில்டிங்கை நேசிக்கிறார். இன்னும் பல ஆயிரம் பேருக்கு இன்றும் இவர் மிகப்பெரிய உந்துசக்தியாகவும், முன்னுதாரணமாகவும்  இருக்கிறார்.

Post a Comment

0 Comments