What Happens When You Eat Expired Food

காலாவதியான உணவை உட்கொண்டால் இது தான் கதி ??

இப்போது சாதாரணமாக எல்லோரது வீட்டிலும் குளிர்சாதனப்பெட்டி வந்துவிட்டது. எனவே, அநேக மக்கள் உணவுப்பொருட்களை அதில் வைத்து பதப்படுத்தி உண்கின்றனர். மேலும் குளிர்சாதனப்பெட்டியில் இருப்பதால் உணவுப்பொருட்கள் கெடாமல் இருப்பதாக மக்கள் நினைக்கின்றனர். ஆனால், அது தவறு. குளிசாதனப்பெட்டியில் வைத்தாலும் ஒவ்வொரு உணவும் குறிப்பிட்ட நாள் தான் பாதுகாக்க முடியும். அதைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

Source : GETTY


1. Expired eggs:

காலாவதியான முட்டைகள் சால்மனில் எனும் நஞ்சு தாக்குதலுக்கு உட்பட்டு விஷமாக மாறுகிறது. இந்த கெட்டுப்போன மற்றும் அழுகிய முட்டையை நாம் உண்பதால் நமக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் அதனைத்தொடர்ந்து வாந்தி மற்றும் காய்ச்சல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மேலும் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இவர்களுக்கு உடனடியாக ஆண்டிபையோட்டிக் சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இவற்றை தவிர்க்க சுகாதாரமில்லாத முட்டையை உண்பதை தவிர்க்க வேண்டும்.

Source: Medical News Today


குளிசாதனப்பெட்டிக்குள் வைத்திருந்தாலும் சமைக்கும் போது முட்டையின் தரத்தை சோதிப்பது அவசியம். இதற்கு மிக எளிமையான வழி, கொஞ்சம் வெந்நீரை தம்ளரில் ஊற்றி அதனுள் அந்த முட்டையை போடுங்கள். போட்டவுடன் முட்டை கீழே சென்றுவிட்டாள் முட்டை நன்றாக உள்ளது. ஆனால், முட்டை மிதந்தால் அந்த முட்டை கெட்டு விட்டது அல்லது காலாவதி ஆகிவிட்டது என்று அர்த்தம்.

குளிர்சாதனப்பெட்டிக்குள் இருக்கும் முட்டையை வெளியே எடுத்து விட்டால் 2 மணி நேரத்திற்குள் அதை சமைத்து விடுவது நல்லது.

Read More: Stomach Sleeping Making Your Life Is Dangerous



2. Expired Milk :

தற்போது நாம் அத்தியாவசிய உணவாக பயன்படுத்தும் பாலானது தற்போது பல வகைகளில் நமக்கு கிடைக்கிறது. நாம் கடைகளில் பாக்கட்டுகளில் வாங்குகிறோம், தற்போது புரூட்டி ஜூஸ் போல பல வகை டப்பாக்களில் அடைத்தும் விற்கப்படுகிறது. நாம் எவ்வளவு தான் பதப்படுத்தினாலும் பாலை 2 நாட்களுக்கு மேல் பயன்படுத்த முடியாது.

Source: SheKnows


பால் கெட்டு விட்டது என்றால் அதன் மனமே காட்டி கொடுத்து விடும், மேலும் கொதிக்க வைக்கும்போது பால் பிரிந்து விடும். நாம் இதனை அலட்சியப்படுத்தி உட்கொண்டால் கடுமையான வயிற்று வலியும், செரிமானப்பிரச்சனையும் ஏற்படும். மேலும் இந்த பிரச்சனை  இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு தொடரும். எனவே தயவுசெய்து அதை குப்பையில் போட்டுவிடுங்கள் இல்லையென்றால் நாம் குப்பையாகிவிடுவோம்.

Read More: Top 6 Benefits and Side Effects Of The Copper - T



3. Expired Cheese

தற்போது பல பேருடைய காலை உணவாக பிரட் மற்றும் வெண்ணெய்  உள்ளது. மேலும் பல பேர் சான்விட்ச் போன்ற உணவுகளிலும் வெண்ணெய் கலந்து உண்கின்றனர். ஒருவேளை கெட்டுப்போன வெண்ணெயை உட்கொண்டால் உங்களுக்கு என்ன ஆகும்.


Source : Telegraph

 உண்மையில் கெட்டுப்போன வெண்ணை உங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. காலாவதியான வெண்ணெயில் பச்சை நிறத்தில் தோன்றும் பகுதியை மற்றும் நீக்கி விட்டு நீங்கள் தாராளமாக இதை உண்ணலாம். ஒருவேளை உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் பச்சை நிற பகுதியை நீக்கி விட்டு சிறிதளவு வெண்ணெயை சாப்பிட்டுப்பாருங்கள். உங்களுக்கு எந்தவொரு உபாதையும் ஏற்படவில்லை என்றால் நீங்கள் அதை தாராளமாக உண்ணலாம். ஒரு உண்மை என்னவென்றால் மேலை நாடுகளில் காலாவதியான வெண்ணைக்கு தான் அதிக கிராக்கி உள்ளது.

Read More: ஓட்டப்பயிற்சிக்கு ( Jogging ) முன் நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டியவை

 Read More: கடுமையான விளைவுகளை சந்திக்குக்கும் Gay, Lesbian, and Bisexual Community 

 Read More: நம் உடலில் நடக்கும் 10 விஷயங்கள்

 






Post a Comment

0 Comments