6 Bizarre Fashion In The World

உலகில் பரவி வரும் 6 வினோத பேஷன்கள்

பொதுவாகவே நவீன மக்கள் பேஷன் என்ற பெயரில் பல புதுமைகளை புகுத்தி வருகின்றனர். எந்தவொரு காரணமும் இன்றி அவைகளும் ட்ரெண்டாகி விடுகின்றன. அது போன்ற சில வினோதமான ட்ரெண்டிங் பேஷன்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
 
#1 Colored Armpit Hair

Source : insider.com

Source : daily.shared.com
 
தலைமுடிக்கு பல வண்ணங்களில் கலர் அடித்தது போக தற்போது இளைய தலைமுறை புதிய பேஷன் ஒன்றை உருவாக்கியிருக்காங்க. அதாவது அக்குல் முடியில் கலரிங் செய்வது. இதற்காகவே அக்குள் முடியை வழிக்காமல் சிவப்பு, ஊதா, மஞ்சள் என தனக்கு பிடித்த கலரில் டையிங் செய்து ட்ரெண்ட் பண்ணிட்டு வர்றாங்க. அதிலும் சில பேர் அந்த முடியில் ரிப்பனும் கட்டியிருக்காங்க...


#2 Night suit in the day
Source : Pinterest
Source : bt.com

பொதுவாக பெண்கள் அணியும் ஒரு இரவு ஆடை ( Night Dress ) தான் இந்த நைட்டீஸ். இது உறங்கும்போது அசவ்கரியம் இல்லாமல் இருக்க உருவாக்கப்பட்ட ஒரு ஆடை. தற்போது இதே ஆடை நவீன பேஷன் ஆடைகளாக வளம் வருகிறது. அதை பெண்களும் கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் அணிந்து எல்லா  நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கின்றனர். ஒரு காலத்தில் இந்த நைட் டிரஸ் பைஜாமாஸ், சிம்மி என்று பெண்களால் பயன்படுத்தப்பட்ட ஒன்று. தற்போது slip dresses என்ற பெயரில் ஆன்லைனில் படுஜோராக விற்பனை நடக்கிறது. தற்போது மாடர்ன் பெண்கள் எந்தவொரு பார்ட்டி நைட் கிளப் மற்றும் ( event ) என்றாலும் பெண்களின் முதல் தேர்வாக  இந்த ஆடை உள்ளது. 


#3 Barbie Flu

Source : Pinterest
Source : Pinterest
Source : Pinterest

 
 
 
 
பெண் குழந்தைகள் மிகவும் விரும்பும் பொம்மை  என்றால் அது நிச்சயம் பார்பி கேர்ள் பொம்மை தான். தற்போது அது பரிணாம வளர்ச்சி அடைந்து Barbie Flu என்று மாறி விட்டது. அதாவது பார்பி பொம்மை கூட விளையாடனும் என்பது மாறி அந்த பொம்மையாகவே வாழ ஆசைப்படுறாங்க. உக்ரைனில் ஒரு பொண்ணு நிஜமாகவே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னை பார்பி கேர்ள் ஆக மாற்றிக்கொண்டு  வாழ்ந்து வருகிறார்கள். இவர்களை  அடுத்து Anime and Dominika என்ற மேலும் இரண்டு பெண்கள் தங்களை ( real barbie ) ஆக மாற்றிக்கொண்டார்கள்.

#4 Ear Piercings 
 
Source : oureverydaylife.com

Source : oureverydaylife.com
 

காத்து குத்துவது ஒரு பேஷன் என்றாலும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இது அவர்களின் கலாச்சாரத்தில் ஒன்று. இது சாதாரணமான ஒன்றாக இருந்தாலும் காது நுனியின் முழு அளவிற்கு துளையிட்டு அதில் ஒரு கம்மலும், அதற்கு மேலே ஒரு கம்மலும் என புதுமையை புகுத்தி இருக்காங்க.  அதிலும் புதுமையான டிசைன் மற்றும் கலரிங் என அசத்துறாங்க. சில பேர் பேஷன் என்று ஒரு ரூபாய்  நாணயம் அளவிற்கு காதை ஓட்டை போட்டிருக்காங்க. அதிலும் சிங்கிள் ரிங், டபுள் ரிங், மூன்று நான்கு என counting அதிகமாயிட்டே போகுது. இதை ஆண்களும் விட்டுவைக்கவில்லை.

#5 Gothic Lolitas
 
Source : rebelsmarket.com

 
Source : theincredibletide
 
விக்டோரியன் கிளாத்திங் ஸ்டைலில் புதிதாக ஜப்பானில் ட்ரெண்டான ஒரு ஆடை பேஷன் தான் இந்த ( Gothic Lolitas ). இவை அந்த நாட்டின் வரலாற்றில் துணை கலாச்சாரத்தில் ( subculture ) இருந்த ஒரு ஆடை நாகரீகம். காமிக்ஸ் புத்தகங்களிலும் இந்த ஆடைகளை காண முடியும். தற்போது ஜப்பானிய பெண்கள் இந்த ஆடையை அணிந்து  கையில் ஒரு குடையையும் வைத்துக்கொண்டு வீதியில் உலா வருகின்றனர்.

#6 The Hitler craze

Source : thesun.co.uk
 
ஹிட்லர் இறந்து  வருடங்கள் ஆனாலும் அவருடைய பேஷன் சென்ஸ் இன்னும் நம்மை விட்டு போகவில்லை.சமீபத்தில்  தாய்லாந்தில் Hitler fashion craze சீசன் போல. ஹிட்லரின் முகத்தை நகைச்சுவையாக சித்தரித்து ஆடைகளிலும், போஸ்டர்களில், குப்பைத்தொட்டி மற்றும் பல பொருட்களில்  ஹிட்லரை கேலியாக சித்தரித்து டிசைன் செய்யப்பட்டுள்ளது. அங்கே  வரக்கூடிய சுற்றுலா வாசிகளும் இதை ஆர்வமாக பார்த்துவிட்டு போகிறார்கள் ...


Post a Comment

0 Comments