Love Making Is Not Easy In Ancient World

பண்டைய உலகில்  ஆண் பெண் உறவில் இணைவது அவ்வளவு சுலபம் கிடையாது ??

 


இந்த உலகத்தில் வணக்க வழிபாட்டிற்கு அடுத்து அதிகப்படியான சடங்குங்கள் உள்ளது என்றால் அது பாலியல் தொடர்பான உறவுகளில் தான். இப்போது உள்ளது போல் உடலுறவு என்பது கடந்த பண்டைய காலங்களில் இலகுவாக இருந்ததில்லை. காரணம் பண்டைய காலங்களில் உடலுறவானது புனிதமானதாகவும், அதற்கென குறிப்பிட்ட எல்லைகள் வேண்டும் என்றும் அவர்கள் எண்ணினர். அந்த காலத்தில் இருந்த சம்பிரதாயங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் உடலுறவுக்கு தற்போது விதிக்கப்பட்டால் உடலுறவு வைத்துக்கொள்வதே ஒரு சோதனை என்று தான் நாம் சொல்லுவோம். அந்த அளவிற்கு கடுமையான நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த பதிவில் அப்படிப்பட்ட சில பண்டைய கால கட்டுப்பாடுகளை பற்றி பார்க்கலாம்.

ஆங்கிலேயர்கள்

Source : buzz.ie

17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களிடம் ஒரு வழக்கம் இருந்தது. டீனேஜ் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் முதல் 9 மாதத்தில் சேரக்கூடாது என எண்ணினர். எனவே மணப்பெண்ணின் இடுப்பில் சாக்கு  ஒன்றை கட்டி விடுவது நடைமுறையில் இருந்தது. இதனால் ஆண் அவ்வளவு எளிதாக பெண்ணிடம் உறவு கொள்ள முடியாது. மேலும் இருவரும் கட்டிலில்  சேர்த்து வைத்து கட்டப்பட்டனர், பிறகு இவர்களுக்கு மத்தியில் ஒரு பலகையும் சொருகப்பட்டது.

கொலம்பியாவின் குவாஜிரோ மக்கள்


ஒரு பெண் தான் விரும்பியவனுடன் நடனம் ஆட வேண்டும்
என்பது கட்டாயம். நடனத்தில் அவனுக்கு கடைசி வரை ஈடு கொடுக்க முடிந்தால் மட்டுமே அவர்கள் உடலுறவில் இணைய முடியும். இல்லையேல் இருவருக்கும் தனி படுக்கை விரிப்பு தான்.

இன்னிஸ் பீக், அயர்லாந்து


அயர்லாந்தில் உள்ள ஒரு கடற்கரை தீவு தான் இந்த இன்னிஸ் பீக். உடலுறவு சம்பந்தமாக இங்கு பல கடுமையான சட்டங்கள் நடைமுறையில் இருந்தது. இங்கு நிர்வாணம் என்பது மிகவும் தவறாக சித்தரிக்கப்பட்டது. ஓர் கணவன் மனைவி பாலியல் உறவின் போதும் நிர்வாணம் என்பது கூடாது. இதனால் ஆண்கள் விரைவாக உச்சம் கண்டு உறங்கி விடுவார்கள். உறவினால் ஆண்கள் சக்தி இழப்பதாக கருதப்பட்டது. எனவே அடுத்த நாள் பணிக்கு செல்ல வேண்டும் என்றால் ஆண்கள் உறவு கொள்ள மாட்டார்கள். மேலும் பெரியவர்கள் உடலை சுத்தம் செய்வதில் கூட நிர்வாணத்தை தவிர்த்து வெளியில் தெரியும் பாகங்களை மட்டுமே சுத்தம் செய்தனர்.

பண்டைய சீனா

Source : culturacolectiva.com

பணய சீனாவில் நம் உடம்பில் c என்கிற உயிர் சக்தி இருப்பதாக நம்பினர். இந்த உயிர் சக்தியானது விந்தணுக்களில் அதிகம் இருப்பதாக நம்பினர். இந்த உயிர்சக்தியை இழந்தால் நோய் அல்லது மரணம் ஏற்படும் என நம்பினர். எனவே சீன ஆண்கள் உடலுறவு வைத்துக்கொண்டாலும் விந்தணுக்களை வெளியேற்றுவது அவசியமில்லை என நினைத்தனர். இது அவர்களுக்கு மிகவும் கடினமாகவும் இருந்தது. பிற்காலத்தில் இந்த புரிதல் தவறு என விளக்கிய போதும் பண்டைய சீன ஆண்கள் இதை பின்பற்றினர்.

நியூ கினியா

Source  listwand.com

பப்புவா நியூ கினியாவில் உள்ள சாம்பியா பழங்குடியினர் மிக கொடூரமான பாலியல் சடங்குகளை பின்பற்றினர். அவர்கள் தங்களுடைய இனத்தில் ஆண்கள்களாக ஏற்றுக்கொள்ளும் முன்னர் பெண்களிடம் இருந்து பிரிக்கப்பட்டனர். பிறகு தங்கள் இனத்துடைய வலிமையான வீரர்களுக்கு வாய்வழி உறவு கொடுக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இதற்குப்பின்னரே சிறுவர்கள் ஆண்களாக கருதப்பட்டு தங்களது இனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.



Post a Comment

0 Comments